ஐ.பி.எல். போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 29 ரன் வித்தியாசத்தில் பெங்களூரை வீழ்த்தி முதலிடம் பிடித்தது.
புனேயில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 144 ரன் எடுத்தது. ரியான்பராக் 31 பந்தில் 56 ரன் (3 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தார். முகமது சிராஜ், ஹாசல்வுட், ஹசரங்கா தலா 2 விக்கெட் எடுத்தனர்.
பின்னர் ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 19.3 ஓவர்களில் 115 ரன்னில் சுருண்டது. இதனால் அந்த அணி 29 ரன்னில் தோற்றது. கேப்டன் டுபெலிசிஸ் அதிகபட்சமாக 23 ரன் எடுத்தார். குல்தீப்சென் 4 விக்கெட்டும், தமிழக வீரர் ஆர்.அஸ்வின் 3 விக்கெட்டும், பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
இந்த ஆட்டத்தில் 3 விக்கெட் எடுத்ததன் மூலம் தமிழக சுழற்பந்து வீரர் ஆர்.அஸ்வின் ஐ.பி.எல். போட்டியில் 150 விக்கெட்டை தொட்டு சாதனை புரிந்தார்.
ஐ.பி.எல்.லில் 150 விக்கெட்டை எடுத்த 8-வது வீரர் அஸ்வின் ஆவர். 2-வது ஆப் ஸ்பின்னர் என்ற பெருமையை பெற்றார்.
இந்த போட்டிக்கு முன்பு அவர் 149 விக்கெட்டுடன் இருந்தார். தற்போது அஸ்வின் 175 போட்டிகளில் 152 விக்கெட்டை தொட்டுள்ளார்.
ஐ.பி.எல். போட்டியில் அதிக விக்கெட் கைப்பற்றிய வீரர் பிராவா ஆவார். அவர் 159 போட்டியில் 181 விக்கெட் எடுத்துள்ளார்.
ஐ.பி.எல்.லில் 150 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்த வீரர்கள் வருமாறு:-
1. பிராவோ- 181 விக்கெட் (159 போட்டி)
2.மலிங்கா-170 விக்கெட் (122)
3.அமித் மிஸ்ரா-166 விக்கெட் (154)
4.யசுவேந்திர சாஹல்- 157 விக்கெட் (122)
5. பியூஸ் சாவ்லா-157 விக்கெட் (165)
6. ஆர்.அஸ்வின்-152 விக்கெட் (175)
7. புவனேஷ்குமார்-151 விக்கெட் (139)
8. ஹர்பஜன்சிங்-150 விக்கெட்
Tags:
விளையாட்டு