கல்ஹின்னை தாருல் ஹூதா பாலர் பாடசாலை தனது மூன்று தாசாப்தங்களை நிறைவு செய்த நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.
இன்று நமது கல்ஹின்னையில் பாலர் பாடசாலை என்றதும் ஞாபகத்தில் வருவது இந்த தாருல் ஹூதா தான்.காரணம் கல்ஹின்கையில் முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்ட பாடசாலையும் இதுதான்
தரமாக இயங்கும் பாலர் கல்வியகமும் இது தான் இதன் பொறுப்பாசிரியர் ஜனாபா சிபா ஷெரீப் மாலிக் அவர்களின் வழி காட்டலில் மிக அருமையாக நடாத்தி ச்செல்வதும் சிறந்த நிருவாகத்தின் பயணத்தையும் இன்றும் கல்வியின் மகத்துவத்தையுணர்ந்த பலரும் பாராட்டி வருவதும் அவர்களின் பிள்ளைகளை தாருல் ஹூதாவில் இணைத்துக் கொள்ள முயற்சிப்பதும் நமக்கு நன்கு தெரிகிறது.
1992-ம் ஆண்டு இரண்டு மாணவர்களைக் கொண்டு துவங்கிய தாருல்ஹூதா முதலாம் ஆண்டிலேயே வெற்றி கண்டது.இரண்டு பிள்ளைகளை வைத்துக் கொண்டு கலைவிழா செய்த வரலாறும் உண்டு.இந்த கலை விழா நிகழ்ச்சிகளைக் கண்டு பல மாணவர்களை கொண்டு வந்து சேர்த்தனர்.
அந்த நேரம் சிபா மாலிக் அவர்கள் மாத்திரமே ஆசிரியராக கடமையில் இருந்தார்கள்.அவரது கடின உழைப்பின் காரணமாக காலப்போக்கில் மாணவர் தொகை அதிகரிக்க சிறு அறையிலே இருந்த பாடசாலையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது .
நாளுக்கு நாள் தருள் ஹுதா பாடசாலையின் வளர்ச்சி கல்ஹின்னை மக்களை ஆச்சரியப்பட வைத்தது ,ஒரு சில போட்டிகளும் உருவாகியது
எனினும் தாருல் ஹுதாவின் வளர்ச்சிக்கு ஈடுகொடுக்க முடியாத நிலையில் தோல்வியை கண்டன.
பாடத்திட்டங்கலை முறையாக ,உலகத் தரம் வாய்ந்ததாக இருந்ததினால் பாடசாலையின் அசுர வளர்ச்சிக்கு உறுதுணையாயிருந்தது எனலாம்.
தாருல் ஹுதா பாலர் பாடசாலை மென்மேலும் சிறப்பாகச் செயல்பட கல்ஹின்னை டுடே யின் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
கல்ஹின்னை டுடே நிருபர்
galhinnatoday@gmail.com
Tags:
கல்ஹின்னைபோஸ்ட்