இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்கு தென் கொரிய பொறியாளர் கட்டிய கல்லறை

இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்கு தென் கொரிய பொறியாளர் கட்டிய கல்லறை


இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்கு தென் கொரிய பொறியாளர் கல்லறையை உருவாக்கியுள்ள நிலையில், அதுத் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

உலகத்தில் கடந்த 27 ஆண்டுகளாக முதன்மை இணையதள உலாவியான இன்டர்நெட் எக்ஸ்புளோரரை பிரபல மைக்ரோசாப்ட் நிறுவனம் இனி ஆதரிக்க போவது இல்லை என இந்த வாரம் அறிவித்தது.


இந்தநிலையில், பொறியாளர் கியோங் ஜங் தென்கொரியாவில் உள்ள கியோங்ஜூவில் உள்ள ஓட்டலின் மேற்கூரையில்( rooftop) உலாவியின் 'e' என்ற லோகோ பொறிக்கப்பட்ட கல்லறையை $330 டாலர்கள் செலவு செய்து ஏற்படுத்தியுள்ளார்.

மேலும் அந்த கல்லறையில், ”மற்ற உலாவிகளை பதிவிறக்குவதற்கு இன்டர்நெட் எக்ஸ்புளோரர் நல்ல கருவியாக இருந்தது” என்ற வாசகம் பொறிக்கப்பட்டு இருந்தது.

பொறியாளர் கியோங் ஜங் இந்த கல்லறையை தென் கொரியாவின் தெற்கு நகரமான கியோங்ஜூவில் உள்ள அவரது சகோதரர் நடத்தும் ஓட்டலில் இடம்பெறச் செய்துள்ளார்.

இதுத் தொடர்பாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ள கூற்றில், இந்த கல்லறை இணையதள மென்பொருள் குறித்த கியோங் ஜங்கின் கவலை உணர்வை பிரதிநிதித்துவபடுத்துகிறது, மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் அவரதுதொழில் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தது என தெரிவித்துள்ளது.

மேலும், இது மனவலி, ஆனால் நான் அதை காதல் மற்றும் வெறுப்பு உணர்வுடன் கலந்தது என அழைப்பேன்,ஏனெனில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் ஒரு காலத்தில் இணைய உலகை ஆதிக்கம் செலுத்தியது என கியோங் ஜங் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.  

கல்ஹின்னை டுடே 
galhinnatoday@gmail.com

Post a Comment

Previous Post Next Post