முப்தி, உலமா, ஆலிம்கள் யார் இவர்கள்?

முப்தி, உலமா, ஆலிம்கள் யார் இவர்கள்?

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்கத்துஹு
முப்தி, உலமா, ஆலிம்கள் இஸ்லாமிய மார்க்கத்தின் போதர்கள் எனவும், நன்மையை ஏவி தீமைகளை தடுப்பவர்கள் எனவும் அழைக்கப்படுபவர்கள்  என நம் சமூகத்தில் இன்று பெரும்பாலும் நம்பிக்கை கொண்டுள்ளனர். 

ஆம் உண்மைதான். உலகிலேயே கோடானுகோடி உயிர் இனங்களை அல்லாஹு படைத்திருந்த போதிலும்கூட மனிதயினத்திற்கு மாத்திரம்தான் மேலான ஓர் அறிவு பகுத்தரிவு எனும் ஓர் அறிவாற்றலை கொடுத்துள்ளான் அல்ஹம்துலில்லாஹ். 

ஆனால் இன்றைய காலகட்டத்தில் பகுத்தரிவு எனும் ஓர் அறிவாற்றலை சில மனிதர்கள் கூர்மையில்லா கத்தியைக் கொண்டு குர்பான் பிராணியை அறுக்க முற்படுவதை காண்கிறோம் . 

சுயமாக சிந்திக்காமல், செயல்படுத்தாமல். தான் காணும் (முப்தி, உலமா, ஆலீம்)  அடையாளங்களைக கொண்டவர்கள் சொல்வதெல்லாம் குர்-ஆனில் இருந்து கண்டவைகலைத் தான் உபதேசமாக சொல்கிறார்கள் என சில மனிதர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.


உண்மையான மார்க்க போதகர்கள் என்றாலே இவர்கள்தான் இவர்களிடம் இருந்து வெளிப்படும் சொற்பிரயோகம் எல்லாமே இறைத்தூதர்  நபி (ஸல்) அவர்கள் காட்டிய வழிமுறைகள் எனவும் (முப்தி, உலமா, ஆலீம்) என்றால் குர்-ஆன், ஹாதீஸ்களுக்கு மாற்றமாக ஒரு போதும் செயல்படமாட்டார்கள் என்கின்ற பாமர மக்களின் நம்பிக்கையும், ஒரு சில கூட்டத்தார்களின் கொள்கையுமாகவே பிரதிபலிக்கின்றது இன்று முஸ்லிம் சமூகத்தின் மத்தியில். 

ஏதேனும் ஒரு விடயாமாக இஸ்லாமிய மார்க்கச் சட்டதிட்டங்களைத் அறிந்துகொள்ள மார்க போர்வையில் இருக்கும் (முப்தி, உலமா, ஆலீம்)   இவர்களை நாடிச் சென்று விளக்கம் கேட்டால் காலத்திற்கு காலம் ஒரே விடயத்திற்கு இரண்டு மாதிரியான பதில்களை சொல்லியிருக்கிறார்கள் குறிப்பாக: அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாசபைத் தலைவர் (ரிஸ்வி முப்தி) அவர்கள் ஒரு இடத்தில் ஜனாஸாவின் சாம்பல் போதும் இன்னுமொரு இடத்தில் ஜனாஸாவை தீயில் இடுவது ஹராம் என்று பதிவிட்டுள்ள சில ஒலிநாடாக்கலை காணக்கூடியதாக உள்ளன. 

குறிப்பாகவே இன்று எங்கள் சமூகத்தில் அதிகமானோர்கள் இஸ்லாத்தில் உண்மைதாரிகள் யாரென்று சிந்திக்கும்போது இவர்கள்தான் என காணும் அடையாளம் யாதெனில் (முப்தி, உலமா, ஆலீம்) 1,அணிந்திருக்கும் ஆடை  2,ஜுப்பா, 3,தலையில் தொப்பி, 4,கையில் தஸ்பை, இந்த அடையாளங்களை மாத்திரம் கண்டதும் இவர்கள்தான் எங்களின் வழிகாட்டி என்று நம்பிக்கை கொள்வதோடு இறைத்தூதர்  நபி (ஸல்) அவர்கள் காட்டிய வழிமுறைகளை கற்றவர்கள் ஒரு போதும் மார்க்கத்திற்கு முரண்பாடாக  செயல்படமாற்றர்கள் என்று சமூகத்தில் பலர் ஏமாறும் நிலையில் இருப்பதைக் காணமுடிகின்றது. 
ஏன்?
பகுத்தரிவு எனும் ஓர் அறிவாற்றலை அல்லாஹ் மனிதயினத்திற்கு கொடுத்திருந்த போதும்கூட எங்கேயோ அடமானம் வைத்தது போல் தடுமாறுகின்றனர் எங்களின் சமூகம் இன்று. மேல் குறிப்பிட்ட இந்த அடையாளங்கள் 1,அணிந்திருக்கும் ஆடை 2,ஜுப்ப, 3,தலையில் தொப்பி, 4,கையில் தஸ்பை, இந்த அடையாளங்களுடன் உண்மையிலேயே மாற்று மதத்தவர்கள் நடுவில் காணும்போது ஆம் இவர்கள் முஸ்லிம்கள்தான் என்பதிற்கான போதுமானதொரு அடையாளம் என்பதை ஒப்புக்கொள்கிறேன்.

ஆனாலும்கூட வாய்மொழியாய் சொல்லும் அறிக்கையில் சில விடயங்களை அவதானிக்கும் போது அவர்கள் அணிந்திருக்கும் மார்க்கத் தோற்றத்திற்கு நிறையவே வேறுபாடுகள் காண்கின்றோம்.

ஏன்? இந்நிலை இன்று எம் சமூகத்தில் ஓர் கேள்விக்குறியாக பிரதிபலிக்கிறது. இறைத்தூதர்  நபி (ஸல்) அவர்களின் காலம் அன்றுதொட்டு இன்றுவரையும் குர்-ஆனில் உள்ளவைகளில் இருந்து எந்த மாற்றமும் இருக்காதுயென நம்புகிறேன் நான். 

இப்படியிருக்க இன்று நாம் காணும் ஒரு சில (முப்தி, உலமா, ஆலீம்கள் காலத்திற்கு காலம் மார்க்க விடயங்களில் மாற்றுக்கருத்து தெரிவிப்பது ஏன்? 

இவர்கள் தெரிவிக்கின்ற கருத்துக்கள் யாவும் குர்-ஆனில் இருந்து கண்டறிந்தவைகளா? அல்லது இவர்களின் கற்பனையில் உதித்தவையா?
 
இந்த சந்தேகம் நம்மில் யாருக்காவது வந்ததுண்டா?அவ்வாறு வருமாயின் அதற்கு பதில்,நிச்சயமாக இல்லை என்பதுதான் உண்மை. 

உபதேசம் என்பது  இஸ்லாமிய சமுதாயத்தின் பொது உடைமையே அன்றி உலமாக்களின் தனி உடைமை அல்ல. உபதேசம் செய்வது மார்க்க அறிஞர்கள் மீது மட்டும்தான் கடமை மற்ற முஸ்லிம்கள் மீது அதைக்கேட்பது மட்டும் தான் கடமை என நினைப்பது பெரும் தவறு.

மார்க்க அறிஞர்களின் உபதேசத்தை எப்போது நாம் செவிமடுத்துவிட்டோமோ அதை பிற முஸ்லிம்களுக்கு  எத்திவைப்பது நம் அனைவரின் மீதும் கடமையாகிவிடுகிறது. குறிப்பாக நம் மனைவி நம் பிள்ளைகள் நம் உறவினர் அனைவருக்கும் எத்திவைக்க வேண்டும். இப்படி தான் மார்க்கம் வளர்ந்தது.

என்னைப் பற்றி ஒரு வசனமாக இருந்தாலும்(பிறருக்கு)எத்திவைத்து விடுங்கள்.என கண்மணி நாயகம் (ஸல்)அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள்.(புகாரி) 

குர்ஆனிலிருந்தும் ஹதீஸிலிருந்தும் அடிப்படைக் கடமைகளைக் கூட கண்டுகொல்லாமலிருப்பது இம்மார்க்கத்தையே தகர்ப்பதற்குச் சமம். எனவே அல்லாஹ்வின் வேதத்தையும் அவனின் தூதரின் பொன்மொழியையும் அனைத்து முஸ்லிம்களும் கற்றுப் பிற முஸ்லிம்களுக்கும்  கற்பிக்க வேண்டியது கட்டாயக் கடமை.   கற்றதையும் செவியுற்றதையும் பிறருக்குக் கூறும்முன்:

இன்று நம் சமுதாயத்திலும் பலர் தாங்கள் செய்யாமல் பிறருக்கு மட்டும் ஏவுகின்ற  நிலையைக்  காண்கின்றோம்.அல்லாஹ் ஏவியவற்றையும் தடுத்தவற்றையும் புட்டு புட்டு வைப்பார்கள்.பல  மேடைகளில் சாதனை உரை நிகழ்த்துவார்கள்.

தயவுசெய்து (முப்தி, உலமா, ஆலீம்கள்) யாரேனும் ஒருவர் என்னைத் தொடர்பு கொண்டு மார்க்கத்தின் சரியான விளக்கத்தை தந்து உதவுமாறு அன்பாய் கேட்டுக்கொள்கிறேன். 

கல்ஹின்னை டுடே 
galhinnatoday@gmail.com

Post a Comment

Previous Post Next Post