பிரெஞ்சு ஓபன் இறுதிப் போட்டியில் ரஃபேல் நடால் சம்பியன் பட்டம் வென்றார்.

பிரெஞ்சு ஓபன் இறுதிப் போட்டியில் ரஃபேல் நடால் சம்பியன் பட்டம் வென்றார்.


பிரெஞ்சு ஓபன் இறுதிப் போட்டியில் நார்வே வீரரான 23 வயதான காஸ்பர் ரூட்டை தோற்கடித்து,36 வயதான ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் சம்பியன் பட்டம் வென்றார். ஃபிரஞ்ச் ஓபனில் அவர் வெல்லும் 14வது பட்டம் இதுவாகும். இதன் மூலம் கிங் ஆப் க்ளே என அவர் மீண்டும் நிரூபித்துள்ளார்.

ரஃபேல் நடால்.. டென்னிஸ் ரசிகர்களுக்கு பரிட்சயமான இந்த பெயர் நிகழ்த்தியிருக்கும்
சாதனை மிகப்பெரியது. 20 கிராண்ட்ஸ்லாம் என்ற சாதனையை முதன்முதலில் நிகழ்த்தியது ரோஜர் ஃபெடரர்தான். 2 ஆண்டுகள் கழித்து அதாவது 2020ல் இந்த சாதனையை ரஃபேல் நடால் சமன் செய்தார். இதை தொடர்ந்து இருவரில் யார் 21ம் வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்வார் என எதிர்பார்ப்பு நிழவியது.

இந்நிலையில், 2021ம் ஆண்டில் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் என மூன்று கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற  நோவாக் ஜோக்கொவிச் 20 பட்டங்களுடன் இந்த பட்டியலில் இணைந்தார். இதையடுத்து 21ம் கிரண்ட ஸ்லாம் பட்டத்தை பெறபோவது யார் என்ற மும்முனை போட்டி நிலவியது.

இந்நிலையில், அறுவை சிகிச்சை காரணமாக ஃபெடரர் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டது. 2022ல் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் நடால், ஜோக்கோவிச் ஆகியோர் பங்கேற்றனர். இருவரில் யார் 21வது கிராண்ட் ஸ்லாமை வெல்லுவார்கள் என எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே அதிகரித்தது. ஜோகோவிச் தான் முதலில் 21 கிராண்ட் ஸ்லாம் என்ற சாதனையை நிகழ்த்துவார் என அனைவருமே எதிர்பார்த்தனர். காரணம், நடால் களிமண் களத்தில் சூரன். அவரை அந்த களத்தில் வீழ்த்துவது கடினம்.

ஆனால், ஆஸ்திரேலிய ஓபன் என்பது அவருக்கு கசப்பு மருந்து. அதற்கு முன்பு ஒரு முறை மட்டுமே அவர் ஆஸ்திரேலிய ஓபனை வென்றிருந்தார்.  ஆனால் ஜோக்கோவிச்சோ 9 முறை வென்றிருந்தார். எனவே, கருத்து கணிப்பு அவருக்கு சாதகமாக இருந்தது. ஆனால், அதிர்ஷ்டமோ நடாலுக்கு சாதகமாக இருந்தது. ஆம், கொரோனா தடுப்பூசி விவகாரத்தால் ஜோக்கோவிச் ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனை சரியாக பயன்படுத்திகொண்ட நடால் 21வது கிராண்ட் ஸ்லாம் என்ற சாதனையை படைத்தார். தற்போது 22வது கிராண்ட் ஸ்லாம் என்ற மைல்கல்லை அவர் எட்டியுள்ளார். இதில் பிரஞ்ச் ஓபன் -14, ஆஸ்திரேலிய ஓபன் -2, அமெரிக்க ஓபன் -4, விம்பிள்டன் -2 ஆகிய பதக்கங்கள் அடங்கும்.

20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களுடன் ரோஜர் ஃபெடரர், ஜோகோவிச் ஆகியோர் 2வது இடத்தில் உள்ளனர்.


கல்ஹின்னை டுடே galhinnatoday@gmail.com

Post a Comment

Previous Post Next Post