இலண்டனில் நிகழவிருக்கும் மாபெரும் ஆர்ப்பாட்ட ஊர்வலத்துக்கான அழைப்பு

இலண்டனில் நிகழவிருக்கும் மாபெரும் ஆர்ப்பாட்ட ஊர்வலத்துக்கான அழைப்பு



இலண்டனில் நிகழவிருக்கும் மாபெரும் ஆர்ப்பாட்ட ஊர்வலத்துக்கான அழைப்பு
எதிர்வரும் பதினேலாம் திகதி ஞாயிற்று கிழமை
இலங்கை தூதுவராலயத்துக்கு முன்பில் இருந்து பிற்பகல் 1 மணிக்கு துவங்கும் இந்த மக்கள் போராட்டத்தின் 100 வது நாளுக்கு ஆதரவளிக்கும், உலகறியச்செய்யும் நிகழ்வுக்கு உங்கள் வரவை பதிவு செய்து பூரண ஆதரவை வழங்குங்கள்

MASS DEMONSTRATION AND MARCH IN LONDON TO MARK THE 100th DAY OF GALLE FACE STRUGGLE IN SRI LANKA 🇱🇰

SUNDAY, 17 JULY 2022, 1 PM.

GATHER AT SRI LANKA HIGH COMMISSION LONDON 
W2  2LU
#GoHomeGota2022
#GotaGoGama_London
ALL ARE WELCOME
கல்ஹின்னையைச் சேர்ந்த மக்கள் அதிகம் வாழுகின்ற நாடு இங்கிலாந்து .கல்ஹின்னையை சேர்ந்த பல சமூக சேவை இயக்கங்களும் அதிகமாக செயல்படுவதும் இலண்டனில் இருந்துதான் .

ஆனாலும் கடந்த சில மாதங்களாக லண்டனில் நடைபெறுகின்ற அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை கல்ஹின்னை மக்கள் தவிர்த்து வருகின்றது ஏனென்று புரியவில்லை.

இலங்கையிலும் கல்ஹின்னை மட்டும் எந்தவித  செயல்பாடுகளிலும் ஈடுபடுவதில்லை .ஒதுங்கியே இருப்பதும் ஆபத்து என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

கல்ஹின்னையைச் சேர்ந்த மீடியாக்களும் உள்நாட்டு செய்திகளில் ஆர்வம் காட்டுவதாக தெரியவில்லை .
நீண்ட காலமாக வேட்டையும் கல்ஹின்னை டுடேயும் மட்டுமே உண்மையான நிலைமைகளை தைரியமாக வெளியிடுகின்றனர்.

நேற்று  GBC(RIYAS HALEEMDEEN)அவர்கள் நேரடியாக அரகலைக்குச்(ARAGALA) சென்று நல்லதொரு  நேரலை வீடியோவை வெளியிட்டிருந்தார் மிகவும் பாராட்டப்படவேண்டிய ஒரு செயல்..

RIYAS HALEEMDEEN (GBC)அவர்கள் ஏற்கனவே நெதர்லாந்தில் நடைபெற்ற ஒரு ஆர்ப்பட்டதிலும் பங்குபற்றியது குறிப்பிடத்தக்கது.இன்றைய சூழ்நிலையில் மீடியாக்களின் செயற்பாடுகள் இப்படித்தான் இருக்கவேண்டும்.ரியாஸ் ஹலீம்தீன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.  

மீடியாக்களும் சமூக சேவை இயக்கங்களும் இப்படியான சந்தர்ப்பங்கள் நியாயத்தின் பக்கம் சாய்வதுதான் எதிர்வரும் நாட்கள் மக்களுக்கு பயனுள்ளதாய் அமையும் .ஆகவே இலண்டனில் இருக்கும் எமதூரைச் சேர்ந்தவர்களும் ஆர்ப்பாட்டங்களில் பங்குபெறுவது சமூகத்திற்கான அவசியமாகும்  
தகவல் ;GF


கல்ஹின்னை டுடே 
galhinnatoday@gmail.com

Post a Comment

Previous Post Next Post