மைதான விபத்தில் உயிரிழந்த கிரிக்கெட் வீரர்கள்

மைதான விபத்தில் உயிரிழந்த கிரிக்கெட் வீரர்கள்


கிரிக்கெட் விளையாட்டின் போது துரதிஷ்டவசமாக உயிரிழந்த வீரர்களைப் பற்றிய ஒரு தொகுப்பு 


Jasper Vinall

கிரிக்கெட் மைதான விபத்தில் முதன்முதலில் பதினேழாம் நூற்றாண்டளவில் ஒரு மரணம் நிகழ்ந்தது. இந்த துரதிஷ்டவசமான சம்பவத்தை எதிர்கொண்டவர் இங்கிலாந்து வீரர் ஜெஸ்பர் வினோல். ஜாஸ்பரின் துரதிஷ்டவசமான மரணம், அந்த நேரத்தில் கிரிக்கெட்டின் தற்போதைய சட்டங்களில் ஒன்று நடைமுறைப்படுத்தப்படாததன் விளைவாக இருந்தது. அந்த காலத்தில் பந்திற்கு இரண்டு முறை அடிக்க அனுமதிக்கப்பட்டிருந்தது. இந்த போட்டியில் துடுப்பாட்ட வீரர் இடமிருந்து அடித்த முதலாவது சந்தர்ப்பத்தில் பந்தை பிடிக்க சென்றார் ஜெஸ்பர். ஜெஸ்பர் பந்தைக் பிடிப்பதை தடுக்க தனது இரண்டாவது அடியை அடிக்கும் போது தவறுதலாக ஜெஸ்பரின் தலையில் அடிப்பட்டு படுகாயமடைந்தார். 1624 ஓகஸ்ட் 24ஆம் திகதியன்று இந்த விபத்து இடம்பெற்றுது. விபத்து இடம்பெற்று 13 நாட்களின் பின்னர் ஜெஸ்பர் காலமானார்.


Richard Beaumont

33 வயதான வேகப்பந்து வீச்சாளரான ரிச்சர்ட் பியூமண்ட் 2012 ஆம் ஆண்டு இந்த அனர்த்தத்தை சந்தித்தார். இவர் இங்கிலாந்தின் பெட்மோர் அணிக்காக விளையாடியவர். இந்த துரதிஷ்டவசமான சம்பவத்தின் போது ரிச்சர்ட் திறமையாக பந்துவீசி 12 ஓவர்களில் 31 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆனால் எதிர்பாராத விதமாக அவர் களத்தில் திடீரென விழுந்தார். இரசிகர்கள் மற்றும் பிற வீரர்களின் அச்சத்திற்கு மத்தியில் ரிச்சர்ட் பியூமண்ட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே உயிரிழந்துவிட்டார். அவரது மரணத்திற்கான காரணம் மாரடைப்பென  அறிவிக்கப்பட்டது.

 
Abdul Aziz

அப்துல் அஜீஸ் ஒரு இளம் கிரிக்கெட் வீரர். 1950 களில் பாகிஸ்தானில் விக்கெட் கீப்பராக விளையாடினார். அதிவேக பந்து தாக்கியதால் கிரிக்கெட் வீரர்கள் அடிபடுவதையே நாம் பொதுவாகக் காண்கிறோம். ஆயினும் அஜீஸின் மரணம் பந்து மார்பில் பட்டதால் ஏற்பட்டது. பந்து அஜீஸைத் தாக்கி அவரை தரையில் வீழ்த்த வைக்கிறது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியிலேயே அஜீஸ் இறந்துவிடுகிறார். பந்து மார்பில் படுவதால் ஏற்படும் மாரடைப்புதான் இவரது மரணத்திற்கு காரணம். அஜீஸ் இறக்கும் போது அவருக்கு வெறும் 18 வயதாகும்.

Wasim Raja

இது மற்றொரு பாகிஸ்தான் வீரரைப் பற்றியது. வசிம் ராஜா என்ற இந்த வீரர் 1970 மற்றும் 1980 களில் பாகிஸ்தான் அணிக்காக 57 டெஸ்ட் போட்டிகளிலும் 54 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடினார். ஆனால் வசிம் ராஜா சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின்னரே இறந்துள்ளார். 2006ஆம் ஆண்டில், சர்ரேயில் 50 வயதிற்குட்பட்டவர்களுக்கான கிரிக்கெட் போட்டியில் விளையாடும்போது வசிம் ராஜா மாரடைப்பால் இறந்தார். பிரபல பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரும், வர்ணனையாளருமான ரமிஸ் ராஜாவின் மூத்த சகோதரரே வசிம் ராஜா என்பது குறிப்பிடத்தக்கது.


Raman Lambha

1980 களின் பிற்பகுதியில் இந்திய கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்திய பேட்ஸ்மேன் ராமன் லம்பா இந்தியாவுக்காக நான்கு டெஸ்ட் மற்றும் 32 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர் அயர்லாந்து அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் பல அதிகாரபூர்வமற்ற ஒருநாள் போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார். ராமன் லம்பா 1998இல் பங்களாதேஷ் தொடரில் விளையாடும்போதே இவ்வாறு அபாய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார். அந்த சந்தர்ப்பத்தில் லாம்பா கீப்பராக இருந்து ஹெல்மெட்கூட அணிந்திருக்கவில்லை. முதலில், இந்த தாக்குதலின் காரணமாக லாம்ப்டா கோமா நிலைக்கு தள்ளப்பட்டார். அது நடந்து மூன்று நாட்களுக்குப் பிறகு இறந்து விடுகிறார்.


Darryn Randall

டேரின் ராண்டால் ஒரு தென்னாபிரிக்க முதல் தர கிரிக்கெட் வீரர். அவர் விக்கெட் கீப்பராக விளையாடினார். 2013இல் தென்னாபிரிக்க முதல் தர போட்டியில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தில் பந்தை அடிக்க முயலும் போது துரதிஷ்டவசமாக பந்து அவரது தலையை தாக்கியது. ராண்டால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும், செல்லும் வழியிலேயே இறந்துவிட்டார்.

 


Post a Comment

Previous Post Next Post