ஒரு மனைவி கணவனுக்காக கேட்கும் "துஆ" அவனுக்காக வாழ்க்கை முழுவதும் செய்கின்ற சேவைகளை விட மேலானது.
கணவன் மனைவிக்காக கேட்கும் "துஆ" அவளுக்காக காலம் எல்லாம் செலவு செய்வதைவிட மேலானது ஏனெனில் தான் கொடுப்பதை விட தன் துனைக்காக அல்லாஹ்விடம் கொடுக்கச் சொல்வது மிகச்சிறந்தது!
உங்களுடைய பாதுகாப்பிற்காக கணவன் வெளியே செல்கிறான் அவனுடைய பாதுகாப்பிற்காக மனைவி உள்ளிருந்து பாதுகாப்பை தேட வேண்டும்.
கணவனையும் அவனது தொழிலையும் பாதுகாப்பது மனைவியின் தொழுகையும் அவனுக்காக அல்லாஹ்விடத்தில் பிரார்த்திப்பதும்.
வாழ்க்கையில் மனைவி அமைவது முக்கியமல்ல. கணவனுடன் இணைந்து அலலாஹ்வுடைய மார்க்கத்திற்காக தியாகம் செய்யக் கூடிய மனைவியாக அமைய வேண்டும்.
நபி (ஸல்) கூறினார்கள்.
மனிதன் பெறுகின்ற பொக்கிஷங்களிலே யே "சிறந்த பொக்கிஷம்" நல்ல 'மனைவி ஆவாள்.
"பெண்ணே"
உன் கணவனை சந்தோசப்படுத்துவதும் திருப்திப்படுத்துவதும் உன் கையில்தான் உள்ளது கணவனுக்கு அதிகமான சுமையை சுமத்தாதே உன் ஆசைகளை அதிகமாக்கி ஓன்று கூட்டாதே அதிகமான தேவைகளை அடுக்கடுக்காக கேட்டு விடாமல் நடந்துகொள், உன் மனதில் நினைப்பது கணவனிடம் இருக்க வேண்டுமென நினைத்து அதை
திணித்து விடாதே, கணவன் வீட்டுக்கு வரும்போது தினமும் பிசியாக இருந்து விடாதே,
அழகான கணவனை விட அன்பான கணவனே மேலானவன்,
தன் மனைவியிடம் தனது அன்பை வெளிப்படையாகக் காண்பிக்கும் ஒரு ஆணின் மீது எந்தக் குற்றமும் இல்லை.
முஃமீன்களில் முழுமையானவர் குணத்தால் அழகானவரே! உங்களில் சிறந்தவர் தம் மனைவியிடம் குணத்தால் சிறந்தவராக இருப்பவரே.
(திர்மிதி 1082)
தொகுப்பு; பாத்திமா சமீர்