பகிர்வோம் பசி தீர்ப்போம் எடுக்கலாம் பசிக்கு கொடுக்கலாம்

பகிர்வோம் பசி தீர்ப்போம் எடுக்கலாம் பசிக்கு கொடுக்கலாம்


'பகிர்வோம் பசி தீர்ப்போம் எடுக்கலாம் பசிக்கு கொடுக்கலாம்
'என்னும் தொனிப்பொருலுடன் கல்ஹின்னையில் மண்ணில் பிறந்து கடல்கடந்து தொழில் புரியும் பலரினதும் ஊரில் வசிக்கும் சிலரினதும் முயற்ச்சியால் கடந்த 23.06.2022 வியாழக்கிழமை முதல் சில நாட்களுக்கு ஒரு பரிட்சாத்த முயற்ச்சியாக ஒரு CHARITY சேவை ஆரம்பிக்கப்பட்டு மிகவும் வெற்றிகரமாக நடைபெறுவதை மிகவும் மகிழ்ச்சியுடன் கூறிக்கொள்கிறேன்

இன்ஷாஅல்லாஹ் இதனை ஆரம்பித்து 10 நாட்கள் நிறைவடைந்து விட்டது.

அல்ஹம்துலில்லாஹ் மிகவும் வெற்றிகரமாக நடந்ததை கருத்தில் கொண்டு கல்ஹின்னை ஜமாஅத்தினருக்கு உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்படுகின்றதை மகிழ்ச்சியுடன் கூறிக்கொள்கிறேன் இன்ஷா அல்லாஹ் 

அத்துடன் ஊரில் இருக்கும் எல்லா சமூகவலைத் தளங்களுக்கும் திட்டங்களை பகிரப்படுவதுடன் அனைவரும்  மேலான உதவியையும் ஒத்துலைப்பையும் தருவீர்கள் என்று நம்புகின்றோம்.

இந்த முயற்ச்சியில் பணம் உள்ளவர்கள் செய்வதைப்போல தினமும்  உழைத்து வருபவர்களும் ஒரு உப்பு பெகட் முலமாகவும் தாங்கள் உதவியை செய்யலாம் என்று எதிர் பார்க்கிறோம். இன்ஷாஅல்லாஹ்

அல்லாஹ் மேன்மேலும் உங்களுக்கும் குடும்பத்திற்க்கும் அருள் புரிவானாக ஆமீன் 

அத்துடன் இந்த பொருட்கள் தேவைப்படும் வறுமையில் தவிக்கின்ற அனைவரும்  எடுக்கலாம் என்பதையும் அறியத்தருகிறேம். 
தொடர்புகளுக்கு
S.M. AMEEN ( SHOP) +94777449694
ISMAIL.A.SALAM +94772632823
M.AZAM. +94772008882

"தர்மம் எதற்காக எனப் பார்ப்போம்!
நீங்கள் விரும்பும் பொருள்களிலிருந்து செலவு செய்யாதவரை அல்லாஹ்விடத்தில் நன்மையை அடைய முடியாது” என்று அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான். (அல்குர்ஆன் 3:92)

அல்லாஹ்விடத்தில் நன்மையை அடைய பல வழிகள் உள்ளன. அவற்றில் முக்கியமான ஒன்று ‘ஸ‌தகா’ என்று சொல்லப்படும் தான தர்மங்கள் செய்வதாகும்.

இந்த உலகத்தில் மனிதன் விரும்பக்கூடிய முக்கியமானவைகளில் முதலாவது செல்வம்தான்! எனவே செல்வத்தை அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யாதவரை நன்மையை அடைய முடியாது என்பதை முதலில் நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.

பொருளாதரத்தைப் பெற்றிருக்கும் ஒரு மனிதன்,அந்த பொருளாதாரத்தில் தனக்கும் தன் குடும்பத்தாருக்கும் செலவு செய்ததுபோக மீதம் உள்ளதில் அவனால் இயன்ற அளவிற்கு தன்னுடைய உறவினர்களுக்கும் நெருங்கியவர்களுக்கும் அனாதைகளுக்கும் வறியவர்களுக்கும் ஏழைகளுக்கும் அவர்களின் கண்ணீர் துடைக்கும் விதமாக, துயர் போக்கும் விதமாக‌ தர்மம் வழங்குவது இஸ்லாத்தின் பார்வையில் அவசியமாகும்.

ஆனால், பொருளாசை நிறைந்த இந்த உலகில் தர்மம் செய்வது என்பது மிகவும் அரிதாகி விட்டது. மரணித்த பிறகு எந்தப் பலனும் தராத செல்வத்தை அல்லாஹ்வின் பாதையில் செலவழிப்பதை விட, சேர்த்து வைப்பதில்தான் மனிதன் அதிக அக்கறை எடுத்துக் கொள்கிறான்.

எனவேதான், மனித சமுதாயத்தின் ஒப்பற்ற வாழ்க்கை நெறியான இஸ்லாம், மனிதர்கள் ஒருவரை ஒருவர் சார்ந்திருப்பதற்காகவும் மனித நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு மத்தியில் சகோதரத்துவமும் நல்லிணக்கமும் ஏற்படவேண்டும் என்பதற்காகவும் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் தர்மம் வழங்குவதை கட்டாயமாக்கி இருக்கிறது.

செல்வம் படைத்தவர்கள் தான தர்மங்கள் செய்து அல்லாஹ்விடத்தில் நன்மையை அடைந்துவிடுகிறார்கள். ஆனால் நாம் எவ்வாறு தானதர்மங்கள் செய்வது, அந்த நன்மைகளை எவ்வாறு அடைவது என்று வசதியில்லாதவர்கள் நினைக்கலாம்.

1 லட்ச‌ ரூபாய் இருக்கும் ஒருவர் 1000 ரூபாய் தர்மம் செய்வதைவிட, வெறும் 100 ரூபாய் வைத்திருப்பவர் தன்னைவிட கஷ்டப்படுபவருக்கு 50 ரூபாய்க்கு செய்யும் தர்மம்தான் மேலானதாகும். ஏனெனில் இறைவன் கொடுத்த‌ தன்னுடைய உடமையில் பாதியை அவர் கொடுத்துவிடுகிறார். ஆக தர்மம் செய்வதற்கு அதிகமான வசதிதான் இருக்கவேண்டும் என்று நினைக்கத் தேவையில்லை. அவரவர்களும் தன்னால் இயன்றளவுக்காவது தான தர்மங்களை செய்யவேண்டும். அதற்கும்கூட‌ சக்தி பெறாத பரம ஏழைகள் மற்றும் வறிய‌வர்கள் ஸதகாவின் நன்மையை அடைவதற்காக‌, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உபதேசங்கள் எவ்வாறு கைக்கொடுக்கின்றன, சுப்ஹானல்லாஹ்!


கல்ஹின்னை டுடே 
galhinnatoday@gmail.com

Post a Comment

Previous Post Next Post