அஸ்ஸலாமு அலைக்கும்!
எல்லாப்புகழும் இறைவனுக்கே அல்ஹம்துலில்லாஹ்

நாட்டின் நிலை அனைவருக்கும் தெரியும்.ஒவ்வொரு வீட்டினரினதும் நிலை யாருக்கும் தெரியாது. ஆனால் அனுமானிக்க முடிகிறது. பெரும்பாலானவர்களது அன்றாட உழைப்பு செத்துப் போக,பசி மட்டும் வளர்ந்து கொண்டிருக்கிறது.எரிவாயு இல்லாமல், மண்ணெண்ணெய் இல்லாமல் விறகடுப்பில் சமைக்க முயற்சித்தாலும்,சமைக்க வீட்டில் எதுவும் இல்லை என்கிற குடும்பங்களே அதிகம்.இந்த நிலையறிந்த கல்ஹின்னை நலன்விரும்பிகள் சிலர் உள்நாட்டிலும், வெளிநாட்டில் இருப்பவர்கள் காலத்தின் தேவையை அறிந்து GALHINNA CHARITY என்னுமோர் அமைப்பு முன் வந்து கடந்த இரண்டுவாரமாக கல்ஹின்னை பெரிய ஜும்மாப் பள்ளி வீதியில் இருக்கும் அமீன் ஸ்டோர்ஸ் உரிமையாளரும்,கல்ஹின்னை ஜனஷா நலன்புரிச் சங்கத்தின் தலைவருமான அல்-ஹாஜ் அமீன் அவர்களின் மேற்பார்வையின்கீழ் ஒரு சில உணவுப்பொருட்கள் வழங்கப்படுகிறது.
இரண்டு வாரங்களாகத் தொடரும் இப்பணியைச் செய்ய முன்வந்தவர்களின் கவனத்திற்கு
உலகில் பசியிலிருக்கிற அத்தனை பேருக்கும் உணவளிக்க யாராலும் முடியாததுதான்.ஆனால் நம் கண்முன்னே கஷ்டப்படுகின்றவர்களுக்கு மட்டுமாவது ஒருநேர உணவளித்து உவகையடைய சமூக சிந்தனையுடைய ஒரு சிலர் முன்வந்திருக்கும் போதிலும்கூட அதன் நடைமுறையில் சிறுமாற்றங்கள் ஏட்ப்படுமாயின் அல்லாஹ்வின் பொருத்தத்திற்கு சிறப்பானதாகும் எனநான் கருதுகிறேன்.
ஒவ்வெரு மனிதனுக்கும் சுயமரியாதை என்பது அவர் அவர்கள் உயிரைவிட மேலானது என்பதை கருத்தில்கொண்டு நாம் செயல்படுவோமானால் இன்னும் மேலோங்கி நிற்கும். குறிப்பாக கடந்த காலங்களில் எமதூரில் கல்ஹின்னை ஒன்றியமும்,ஏனைய அமைப்புக்களும் கல்ஹின்னை ஜும்மாப் பள்ளி நிர்வாகத்துடன் ஒன்றுசேர்ந்து உலருணவு பொதிகளை ஜும்மாப் பள்ளியைச் சேர்ந்த எல்லா மஹல்லாக்களுக்கும் பலதடவைகள் வழங்கினார்கள் ஒரு தனிமனிதனின் கௌரவம் பாதிப்பு அடையாத நிலையில் அதுவே இஸ்லாத்தின் அழகிய பண்புகளாகும்.
ஆனால் அமீன் ஸ்டோர்ஸ் உரிமையாளரும்,கல்ஹின்னை ஜனஷா நலன்புரிச் சங்கத்தின் தலைவருமான அல்-ஹாஜ் அமீன் அவர்களின் மேற்பார்வையின்கீழ் நடைபெறும் இந்நிகழ்வு பற்றி ஒருசிலர் தாங்கலை புறக்கணித்தும் அவர் அவர்களுக்கு தேவையானவர்களை இனம்கண்டு அந்த உணவுப்பொதியை கையளிப்பு செய்வதாக குற்றச்சாட்டுகள் வெளியில் பேசப்படுகிறது பிழைகளை திருத்திக்கொள்ள முயற்சிக்கவும். இறை திருப்தி ஒன்றுதான் உங்கள் இலக்கு என்றால் பசித்தவர்களின் பசி தீர்ப்பதோடு,அவர்களது மானத்தையும் பாதுகாத்துக்கொள்ள முயற்சிக்கவும்.
galhinnatoday@gmail.com
Tags:
கல்ஹின்னைபோஸ்ட்