டைலர் கோஹன் என்பவர் சான் பிரான்சிஸ்கோவில் வசிக்கிறார். ஸ்ட்ராடஜி & ஆப்ஸ் டோர்டாஷில் அசோசியேட் மேனேஜராக பணிபுரிந்தார். இவருக்கு தொழிநுட்ப நிறுவனமான கூகுள் நிறுவனத்தில் பணியாற்ற ஆசை. அதற்காக ஒன்றல்ல 40 முறை விண்ணப்பித்துள்ளார்.
"விடாமுயற்சிக்கும் பைத்தியக்காரத்தனத்திற்கும் இடையே ஒரு சிறந்த கோடு உள்ளது. என்னிடம் எது இருக்கிறது என்பதை நான் இன்னும் கண்டுபிடிக்க முயற்சிக்கிறேன். 39 நிராகரிப்புகள், 1 ஏற்பு" என்று அவர் லிங்க்ட்இன் இடுகையில் கூறினார், இது இப்போது வைரலாகி வருகிறது.
அதோடு கூகுள் உடனான அனைத்து மின்னஞ்சல் தகவல்தொடர்புகளின் ஸ்கிரீன் ஷாட்டையும், கடைசியாக ஜூலை 19 அன்று வேலை கிடைத்த பணி ஆணையையும் அவர் பகிர்ந்துள்ளார்.
#acceptedoffer, #application போன்ற ஹேஷ்டேக்குகளைச் சேர்த்துள்ள இந்தப் பதிவை ஏறக்குறைய 35,000 பேர் விரும்பியுள்ளனர். மேலும் 800க்கும் மேற்பட்ட பயனர்கள் அதில் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
அவர் ஆகஸ்ட் 25, 2019 அன்று முதல் முறையாக விண்ணப்பித்துள்ளார், ஆனால் நிராகரிக்கப்பட்டுவிட்டது. அவர் மனம் தளராமல் மீண்டும் செப்டம்பர் 2019இல் விண்ணப்பித்தார். கோவிட் தொற்றுநோய்களின் போது ஜூன் 2020 இல் திரு கோஹன் மீண்டும் விண்ணப்பிக்கத் தொடங்கினார். இப்படி 39 முறை விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டு இந்த மாதம் தான் பணிக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.
கோஹனின் சாதனையால் பயனர்கள் ஈர்க்கப்பட்டு பல வாழ்த்துச் செய்திகளை வெளியிட்டனர். அமேசானில் 120+ நிராகரிப்புகளுக்குப் பின் வேலை பெற்றவர், 83 விண்ணப்பங்கள் போட்டவர், 59 தோல்விகளைக் கண்டவர் என்று சில பயனர்கள் தங்கள் சொந்த அனுபவங்களையும் விவரித்துள்ளனர்.
SOURCE;news18
கல்ஹின்னையூரான்
Tags:
படித்ததில் பிடித்தது