அவள் போவதையே பார்த்துகொண்டிருந்தான் மோகன்.
.திரும்பத் திரும்ப பிளையிங் கிஸ் கொடுத்துக்கொண்டே சென்றவள் அவனுடைய பார்வையிலிருந்து மறைந்துவிட்டாள்.
இவளுக்கு ஏன் இப்படியொரு ஆசை?.டெஸ்ட் பன்னுவதென்றாலும் இப்படியா?
இந்த ஒரு வாரம் எந்த வித தொடர்புமில்லாமல் இருக்கவேண்டும்.
கடந்த ஒரு வருட காதலில் அவளைப்பிரிந்து ஒரு நாளும் இருந்ததில்லை
சந்திக்காமல் இருந்த நாட்களில் மொபைலே கதி என்று கழிந்த நாட்களும் உண்டு .மோகன் பேசவில்லை என்றால் திட்டித் தீர்ப்பாள்.வாய்க்கு வந்தபடியெல்லாம் திட்டுவாள் .பிறகு மன்னிப்புக் கேட்டு அழுவாள்.
"மோகன் உன் மேல உசுரையே வச்சிருக்கேன் அதனாலதான் கொஞ்சம் நேர்வசாயிட்டேன்".என்று பல தடவைகள் மன்னிப்புக் கேட்பாள்.
அப்படிப்பட்ட கீர்த்தியா இன்று இப்படி நடந்துகொண்டாள்?
மோகனால் ஒரு உறுதியான முடிவுக்கு வர முடியவில்லை .
டெஸ்ட் தொடங்கிவிட்டது ,
தினமும் படுக்கைக்குச் செல்லுமுன் கீர்திகாவிடம் லவ் யூ சொல்லிவிட்டு உறங்கும் மோகனுக்கு அன்று மிகவும் கஷ்டமாயிருந்தது.தினமும் மொபைல் முத்தம் கொடுத்தவனுக்கு கீர்த்தனாவின் நேரடியாகக் கிடைத்த முத்தம் சற்றே ஆறுதல்பட வைத்தது..
கட்டிலில் அங்கும் இங்குமாக புரண்டு படுத்தவனுக்கு விடிந்ததுகூட தெரியவில்லை.
அவசர அவசரமாய் வேலைக்குப் புறப்பட்டவனுக்கு கீர்த்திகாவின் நினைவுகள் மீண்டும் வர தினமும் அவளை சந்திக்கின்ற இடத்தை உற்றுப்பார்த்தான்.
எங்காவது ஒரு மூலையில் ஒளிந்துகொண்டு தன்னை ஆச்சரியப்படுத்த மாட்டாளா என்ற ஏக்கம் அவனுள் பட படக்க வைத்தது.
ஐந்தாவது நாலாகிவிட்டாலும் அவனுக்குள் அந்த படபடப்பு அடங்கவில்லை இன்னும் இரண்டு நாட்கள்தானே என்று ஆறுதலடைய நினைத்தாலும் அவனால் முடியவில்லை.நெஞ்சு வெடித்துவிடும் போலிருந்தது .
கடைசி ஏழாவது நாள் .......இரவு முழுவதும் தூக்கமின்றித் தவித்தான் மோகன் .
அடுத்த நாள் முதல்வேலையாக கீர்த்தனாவுக்கு போன் பண்ணவேண்டும் .ஐ லவ் யூ சொல்ல வேண்டும்,மிஸ் யு சொல்லவேண்டும் ..
பலவிதமான கற்பனைகளுடன் விடிந்தது ஏழாவது நாள் .
ஏழு நாட்கள் அவனுக்கு ஏழு வருடங்களைப் போன்றிருந்தது.
முதல் வேலையாக கீர்த்தனாவுக்கு கோல் பண்ணினான் .
அவளுடைய மொபைல் ஆப் பண்ணியிருந்தது.மீண்டும் ,,,மீண்டும் முயற்சி செய்தான் .பதில் ஒன்றே.மொபைல் ஆப் பண்ணியிருந்தது .
மோகனுக்கு படபடப்பு அதிகமாகியது.
விடியற்காலை ஏழு மணி என்பதால் இன்னும் எழுந்திருக்காமல் இருக்கலாம் .
அவசரமாக தன்னை தயார்படுத்திக்கொண்டு புறப்பட்டான் .பதட்ட்டம் அவனை துரத்திக்கொண்டிருந்தது.
மெசேஜ் அனுப்பினான்.ஐ மிஸ் யு ஸோமச் ....மெசேஜ் போய் சேரவில்லை .
தொடர்பு கொள்ள முடியவில்லை.மோகனுக்கு பிரஷர் தலைக்கேறியது.
"என்ன இப்படி ஒரு நாடகத்த நடத்திக்கிட்டிருக்காள்.விருப்பம் இல்லேன்னா நேரடியாகச் சொல்லலாம்தானே ..?இப்படி ஒரு விபரீதமான டெஸ்ட் தேவையா?...கீர்த்திகா உன்ன எவ்வளவு காதலிக்கின்றேன் என்று உனக்குத் தெரியாதா?"மனதில் பலவாறு புலம்பிக்கொண்டிருந்தான் மோகன் .
மோகனுக்கு தலை சுற்றுவதைப் போன்றிருந்தது .ஒரே குழப்பமாயிருந்தது.
என்ன நடந்திருக்கும் ?அவளாக வைத்த டெஸ்ட் .அதில் நான் வெற்றி பெற்றுள்ளேன் /மகிழ்ச்சியுடன் அவளாகவே தொடர்புகொல்வாள் என்று நினைத்திருந்த மோகனுக்குள் சந்தேகம் தொற்றிக்கொண்டது.
ஆபீசுக்கு கோல் பண்ணி இன்று வேலைக்கு வரமுடியாது உடம்புக்கு சரியில்லை என்று அறிவித்தவன் நேரடியாக கீர்த்திகாவின் வீட்டுக்கு புறப்பட்டான் .
5 கிலோ மீட்டர் தூரம்தான் ,ஒரு முறை அவனை அழைத்துக்கொண்டுபோய் தூரத்திலிருந்து காட்டியிருக்கின்றாள்.
அவளுடைய வீட்டில் எவருக்கும் மோகன் அறிமுகமில்லை.என்றாலும் துணிவுடன் புறப்பட்டான் .
குறிப்பிட்ட இடம் நெருங்க மோகனின் இதயம் வேகமாக அடித்துக்கொண்டிருந்தது.ஏழு நாட்களுக்குப் பிறகு கீர்த்திகாவை சந்திக்கப் போகும் மகிழ்ச்சி ஒரு புறமும் கோபமும் சேர்ந்து அவனை இனம் புரியாத ஒரு சூழ்நிலைக்கு இட்டுச் சென்றது.
காதலின் அதீத சக்தி இதுதானா ?
கீர்த்திகாவின் வீட்டுக்கு இரண்டு வீடுகள் தள்ளி வண்டியை நிருத்தச்சொல்லி பணத்தை கொடுத்துவிட்டு முன்னே நடந்து சென்றவன் ஒரு கணம் திகைத்து நின்றான் ,
என்ன இது ?கீர்த்திகாவின் வீட்டு முன்பு நிறைய பேர் இருக்கிறார்கள்?
வேகமாக நடந்து சென்று பக்கத்தில் இருந்த ஒருவரிடம் விசாரித்தான் "வணக்கம் சார் ! என்ன விஷேசம் .இப்படி எல்லோரும் வந்திருக்கீங்க?
"ஆமா தம்பி நம்ம சொந்தக்காரப் பொண்ணு கீர்த்திகா இறந்திட்டாங்கா?"அந்த மனிசன் கவலை தோய்ந்த முகத்தோடு சொல்லி முடிப்பதற்குள்
"கீர்த்திகா" என்று தன்னை அறியாமல் கத்திவிட்டான் .
அங்கு கூடியிருந்த அத்தனை ஜனங்களும் அவனைப் பார்க்க கீர்த்திகா என்று கத்திக்கொண்டே வீட்டுக்குள் ஓடினான்.
அவனை தடுத்து நிறுத்திய ஒருவர் "தம்பி நீங்க யாரு ?கீர்த்திய உங்களுக்கு ஏற்கனவே தெரியுமா?என்று கேட்டார் .
" ஒரே ஒருமுறை அவலப் பார்க்கணும் சார்?"என்று கெஞ்சினான் மோகன்.ஒரு கணம் தன்னை சுதாகரித்தவன்
"ஆமா சார் நாம ஒன்றாக ஒரே இடத்தில்தான் வொர்க் பண்றோம் "என்று ஒரு பொய்யை சொன்னான் .
காதலை பற்றிச் சொன்னால் அங்கிருப்பவர்களின் எண்ணத்தில் கீர்த்திகாவை பற்றிய தவறான ஒரு என்னம் உருவாகும் என்று நினைத்து தன்னோடு ஒரே இடத்தில வேலை பார்ப்பதாக ஒரு பொய்யை சொன்னான் .
தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு கீர்த்திகாவின் உடலுக்கு அருகில் சென்றான் .
மோகனின் கை கால்கள் நடுங்கியது .
நிற்கத் திராணியற்று விழுந்து விடுவோமோ என்ற நிலையிலும் 'தைரியமாய் இரு' என்ற கீர்த்திகாவின் வார்த்தைகள் அவனை உயிபெறச் செய்தது.
சிரித்த முகம் அப்படியே இருந்தது. அவனை திட்டும்போதுகூட அவளுடைய முகத்தில் ஒரு புன்னகை தவழும் அதுவும் அப்படியே இருந்தது,
குரள் அவனுள் மீண்டும் மீண்டும் ஒலித்தது
"சார் கீர்திகாவுக்கு என்ன நடந்தது ?.நல்லாத்தானே இருந்தாங்க ?"படபடப்புடன் பக்கத்தில் இருந்தவரிடம் விசாரித்தான் .
"கீர்திகாவுக்கு ஏற்கனவே கான்சர் அறிகுறி இருந்துள்ளது .டாக்டர் அவளுக்கு எச்சரிக்கையும் செய்துள்ளார்.ஆனா அவ எதையும் கண்டு கொள்ளவில்லை .மருந்துகளும் பாவிப்பதில்லை. நேற்று திடீரென்று மயக்கம் போட்டு விழுந்தவ எழும்பவேயில்ல . இறந்திட்டா .பாவம் சின்ன வயசு .இப்படியாயிருச்சி."
'அடிப்பாவி எங்கிட்ட ஒரு வார்த்தையாவது சொல்லியிருக்கலாமே .என் உசிரக்கொடுத்தாவது உண்ணக் காப்பாத்தியிருப்பேனே? என்ன மட்டும் தவிக்கவிட்டுட்டுப் போயிட்டியே...கடைசியா சந்தித்தபோது 'தைரியமா இருன்னு' சொன்னாயே ..அது இதுக்கத்தானா?......
நீ இந்த உலகத்தவிட்டுப்போனாலும் அடுத்த ஜென்மம் வரைக்கும் என்னோடு நீ மட்டும்தான் இருப்பாய் .நீதான் என் மனைவி ...உன் கடைசி முத்தம்தான் என் வாழ்க்கை துணை ..இனியொரு பெண் என் வாழ்கையில் தேவையில்லை .கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்க முட்டி மோதும் நெஞ்சு வலியுடன் வீதியில் நடந்தான் மோகன்