திரைக்கு அருகில் இருந்து தொலைக்காட்சியைப் பார்க்கும்போது, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம், “அந்த டிவியில் இருந்து சிறிது தூரம் தள்ளி இருந்து பார்க்காவிட்டால் கண்கள் பழுதாகிவிடும்” என்று அடிக்கடி கூறுவார்கள். பழைய டிவி மற்றும் இப்பொழுதுள்ள ஸ்மார்ட் டிவியைப் பார்ப்பது என்றாலும் அவ்வாறு தூரத்தில் இருந்து பார்ப்பதே நல்லது. குறிப்பாக, குழந்தைகள் தொலைக்காட்சி பார்க்கும் நேரத்தைக் குறைத்து,
தொலைக்காட்சியைப் பார்க்கும் தூரத்தை ஐந்து முதல் ஆறு மீற்றர் தொலைவில் வைத்திருக்க வேண்டும். ஏனெனில் குழந்தைகளின் வளர்ந்து வரும் திறன்கள், இழையங்கள் விரைவில் இந்த டிஜிட்டல் திரைகளால் பாதிக்கப்படலாம். கண்களுக்கு வெளிச்சமாக விடயங்களை காட்டும் மடிக்கணினிகள், மொனிட்டர்கள், தொலைபேசிகள், டெப்லெட்டுகள் போன்ற டிஜிட்டல் திரைகளின் பயன்பாடு சிறார்களின் கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
இதனால் என்ன நடக்கும்?
டிஜிட்டல் திரைகளின் அபாயகரமான வெளிச்சம் கண்களை நேரடியாக பாதிக்கலாம். மறுபுறம், இந்த டிஜிட்டல் திரைகள் சாதாரணமானவையென நம் மனம் தவறாக புரிந்து கொள்கிறது. எனவேதான், இரவில் அதிக டிஜிட்டல் திரைகளைப் பயன்படுத்துவது தூங்கும் நேரத்தை சீர்குலைக்கின்றது. மேலும் கண்ணிற்கு ஏதாவது ஒரு பாதிப்பென்பது தலையின் மற்ற பகுதிகளை நேரடியாக பாதிக்கும். இது தலைவலி மற்றும் பிற கோளாறுகளையும் ஏற்படுத்தும். டிஜிட்டல் திரையின் அதிகமான வெளிச்சம் நம் கண்களையும் மன ஆரோக்கியத்தையும் நேரடியாக பாதிக்கும்.
20-20-20
டிஜிட்டல் திரைகளைப் பயன்படுத்துவோர் ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும் ஒருமுறை 20 மீற்றர் தொலைவில் உள்ள காட்சிகளை 20 வினாடிகள் வரை பார்க்க வேண்டும். இது அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு சற்று கஷ்டமாகும். என்றாலும், வீட்டிலேயே இருந்து டிவியையும் மொபைலையும் எந்த நேரமும் பார்ப்பவர்கள் இதனைச் செய்யலாம். இந்த வகையான கண்களை இருபது நிமிடங்களுக்கு ஒரு முறை இருபது வினாடிகள் ஓய்வெடுப்பது நடைமுறையில் சாத்தியமாகும். மேலும், இரவு நேரங்களில் டிஜிட்டல் திரையின் பயன்பாட்டைக் குறைப்பது நல்லது. நீங்கள் உண்மையிலேயே அதைப் பயன்படுத்த அதிக நேர தொடர் தேவை இருந்தாலும், வீட்டில் சாதாரண ஒளியை வைத்துக்கொண்டு பயன்படுத்துவது நல்லது.
டிஜிட்டல் திரையின் ஆபத்து
ஒரு எக்ஸ்ட்ரா கீபோர்டை பயன்படுத்தினால், இரண்டு மீட்டர் தொலைவில் உள்ள ஒரு லேப்டப்பில்கூட வேலை செய்ய முடியும். பொதுவாக சொல்ல வேண்டுமென்றால் நீண்ட தூரம், கண்களுக்கு குறைந்த சேதம் தரும். உட்கார்ந்திருக்கும் போது கண்களின் மேல் பார்வையை கணினித் திரையின் மேற்புறத்தில் வைக்க வேண்டும். நீங்கள் ஒரு மொபைலில் அல்லது மடிக்கணினியில் திரைப்படங்களைப் பார்த்தால், தூரத்திலிருந்து அவற்றைப் பார்ப்பது நல்லது. டிவி LED ஆக இருந்தாலும், கண்கள் டிவியிலிருந்து விலகி இருந்து பார்ப்பது நல்லது. நாம் டிஜிட்டல் திரைகளைப் பயன்படுத்தும்போது, டிஜிட்டல் திரை நம் கண்ணுக்கு நேராக அமைந்திருப்பின் நம் கண்களின் அளவுக்கு அது நல்லதல்ல. இது கண்ணுக்கு அதிக ஒளியைக் கொண்டுவருகிறது. இது கண் ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
கண் பரிசோதனை மற்றும் கண்ணாடி
டிஜிட்டல் திரைகளால் வெளிப்படும் பிரகாசமான ஒளியின் ஒரு பகுதி கண்களுக்கு மோசமானது என்று மேலே கூறியுள்ளோம், அதனை தீர்க்க சிறந்த ஒரு வழியும் உள்ளது. இந்த ப்ளூ லைட் பில்டர் ஸ்கிறீன் வைத்த திரைக்கு மேலே பயன்படுத்தப்படும் கண்ணாடிகள் மற்றும் கட்டமைப்புகள் உள்ளன. மேலும், இந்த கண்களுக்கு பிரச்சினை தரும் ப்ளூ லைட் கண்ணுக்குள் பாதிப்பை தராமல் தடுக்க டிஜிட்டல் திரைகளுக்கும் கணினி பயன்பாட்டிற்கும் வடிவமைக்கப்பட்ட சிறப்பு மூக்குக்கண்ணாடிகள் உள்ளன. நீங்கள் ஒரு நாளைக்கு சில மணிநேரம் டிஜிட்டல் திரைகளில் தொடர்ந்தும் வேலை செய்வதாக இருப்பின், வருடத்திற்கு ஒரு முறை நீங்கள் கண் பரிசோதனை செய்ய வேண்டும். மேலும், உங்கள் கண்களில் ஏதேனும் கண் வலி அல்லது அசௌகரியம் இருந்தால், மருத்துவ பரிந்துரைகளுடன் டிஜிட்டல் திரைக்கேற்ற தனிப்பயன் கண்ணாடிகளைப் பயன்படுத்தலாம்.
கண் ஆரோக்கியத்திற்கான நவீன தொழிநுட்பம்
டிஜிட்டல் திரை நமது கண்களை பல வழிகளில் பாதிக்கும். ப்ளூ லைட்டின் அபாயங்களை THDAUPPADHARKU பில்டர் ஸ்க்ரீன் கொண்டவாரே இப்போது கம்பியூட்டர்கள் வருகின்றன. ASUS, VIVSONIC, HP மற்றும் பல மொனிட்டர் உற்பத்தியாளர்கள் கண்களுக்கு மிகவும் பொருத்தமான கணினிகளை தயாரிப்பவர்கள். மடிக்கணினி மற்றும் மொபைல்களை வாங்கும்போது உங்கள் கண்களின் ஆரோக்கியத்தையும் பற்றி சற்று சிந்திக்க வேண்டும். ஒன் பிளஸ் செல்போனின் புதிய மொடல்கள் கண்களுக்காகவே சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. சாதாரண ஒளியில் டிஜிட்டல் திரைகளைப் பயன்படுத்தும் போது, நாம் பயன்படுத்தும் பின்னணி வெளிச்சத்தை பொருந்தும்படி வெளிச்சத்தை குறைப்பது நல்லது.
டிஜிட்டல் ஸ்கிரீன் பாவிக்கும் நேர அளவை குறைப்பது
ஒருவர் கிராஃபிக் டிசைனிங் மற்றும் டைப் செட்டிங் போன்றவற்றைச் செய்தால், டிஜிட்டல் திரையை பவிப்பதின் அளவை குறைப்பது கடினம்தான். ஆனால் நீங்கள் அலுவலகத்தில் உங்கள் வேலையை முடித்துவிட்டு வரும்போது மொபைலையும் வீட்டிற்கு வந்த பின்னர் டிவியையும் பார்ப்பதாக இருந்தால், டிஜிட்டல் ஸ்கிரீன் பயன்பாட்டை குறைப்பது நல்லது. செல்போன் பயன்பாட்டைக் குறைப்பது, டிவி பார்ப்பது, திரைப்படம் பார்ப்பது, டிவி தொடர்களைப் பார்ப்பது எல்லாம் நாம் செய்யக்கூடிய விடயங்களாகும். அவ்வாறான டிஜிட்டல் ஸ்கிரீன் பயன்பாட்டை குறைத்து, பழைய முறைகள் மூலம் பொழுதுபோக்குகளை அணுகலாம். குடும்பத்துடன் விளையாடுவதற்கோ, புத்தங்கங்களை படிப்பதற்கோ அல்லது தோட்டத்தில் எதாவது வேலை செய்வதற்கோ வழக்கத்தைவிட அதிக நேரம் செலவழித்தால், இவற்றில் நமக்கு இருக்கும் நேரத்தைக் குறைக்கலாம்.
கண்களுக்கு நல்லதொரு பழக்கம்
டிஜிட்டல் திரையைப் பயன்படுத்தும் போது, வேறு சில வெளிச்சங்களை வைத்திருப்பது முக்கியம். நாம் பெரும்பாலும் இருட்டில் படங்களைப் பார்ப்போம். ஆனால் ஹோம் டிவி அல்லது மடிக்கணிணியில் திரைப்படங்களைப் பார்க்கும்போது, நீங்கள் ஒரு குறிப்பிட்ட வெளிச்சத்தில் படத்தைப் பார்க்க வேண்டும். இப்படி இருட்டில் படங்களை பார்ப்பதால் கண்களில் உள்ள ஈரத்தன்மை அற்றுப் போகிறது. அதனால் கண்வலியும் ஏற்பட்டால், கண்களில் பயன்படுத்த அதற்கேற்ற மருந்து இருக்கின்றது. இது கண்களை உலர வைத்து விரைவாக ஈரப்பதமாக்கும். பொதுவாக, நாம் ஏதாவது ஒரு டிஜிட்டல் ஸ்கிரீனை பார்க்கும் போது கண்களில் சிமிட்டும் அளவு குறைவாக இருக்கும். எனவே நீங்கள் அவற்றை பார்க்கும் போது அங்குமிங்கும் அடிக்கடி பார்க்கவோ அல்லது சிமிட்டவோ பழக வேண்டும்.
தொகுப்பு; மாஸ்டர்