கோலி எப்போது வேண்டுமானாலும் ஃபார்முக்கு திரும்புவார் பாகிஸ்தான் பந்துவீச்சாளர் யாசீர் ஷா
விராட் கோலி உலகத்தரம் வாய்ந்த கிரிக்கெட் வீரர், அவர் எப்போது வேண்டும் என்றாலும் ஃபார்முக்கு திரும்புவார் என பாகிஸ்தான் பந்துவீச்சாளர் யாசீர் ஷா தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் விராட் கோலி தனது மோசமான ஃபார்மால் ரன்களை குவிக்க மிகவும் சிரமப்படுகிறார்.
மேலும் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பைபும் இந்தியாவின் ரன் மெஷின் விராட் கோலியின் இந்த மோசமான ஃபார்ம் சிறிது இக்கட்டான நிலைக்கு தள்ளிவிடுகிறது.
அத்துடன் விராட் கோலி கிட்டத்தட்ட இறுதியாக விளையாடிய ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகள் என மொத்தம் 100 போட்டிகளில் ஒற்றை சதம் கூட அடிக்காமல் மிக சொற்பமான ஓட்டங்களில் வெளியேறி வருகிறார்.
இதனைத் தொடர்ந்து விராட் கோலியின் இந்த ஃபார்ம் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், விமர்சகர்கள் என பலர் வித்தியாசமான பரிந்துரைகள் மற்றும் அறிவுரைகளை தொடர்ந்து இணையத்தில் வழங்கி வருகின்றனர்.
இந்தநிலையில், விராட் கோலி உலகத்தரம் வாய்ந்த வீரர், அவர் எப்போது வேண்டும் என்றாலும் ஃபார்முக்கு திரும்புவார் என பாகிஸ்தான் பந்துவீச்சாளர் யாசீர் ஷா தெரிவித்துள்ளார்.
மேலும் விராட் கோலி இப்போது ஓட்டங்களை குவிக்க திணறலாம், ஃபார்மில் இல்லாமல் இருக்கலாம், ஆனால் அவர் உலகத்தரம் வாய்ந்த வீரர், எப்போது வேண்டும் என்றாலும் ஃபார்முக்கு திரும்புவார்.
ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் வீரர்கள் விராட் கோலியை எளிதாக நினைக்க வேண்டாம் என்றும் பாகிஸ்தான் பந்து வீச்சாளர் யாசீர் ஷா எச்சரிக்கை தெரிவித்துள்ளார்.
Yasir Shah has warned Pakistan ahead of the clash against India #cricket #yasirshah #pakistan #india #indvpak #viratkohli pic.twitter.com/MrIeH9lr1m
— Sports Today (@SportsTodayofc) August 21, 2022