பில்லர் இல்லாமல் கட்டப்பட்ட அதிசய வீடு.. திரும்பி பார்க்க வைக்கும் இதன் ரகசியம் என்ன?

பில்லர் இல்லாமல் கட்டப்பட்ட அதிசய வீடு.. திரும்பி பார்க்க வைக்கும் இதன் ரகசியம் என்ன?


திருச்சியை சேர்ந்த நந்தினி, ஆர்க்கிடெக்சர் படிப்பை முடித்துவிட்டு சொந்தமாக கட்டுமான நிறுவனத்தை தொடங்கினார். தொடக்கத்தில் பெரிய அளவில் எந்த விதமான கட்டுமான பணிகளும் வராததால் சிறிய அளவிலான வேலைகளை செய்து கொண்டிருந்தார். இந்நிலையில் தான் வாழ்ந்த வீட்டை வித்தியாசமாகவும் புதுமையாகவும் கட்ட வேண்டும் என்று நினைத்தார் அதன்படி அவர் திருச்சி மாத்தூர் பகுதியில் வித்தியாசமான ஒரு வீட்டை கட்டி உள்ளார்.
இந்த வீடு அப்படி என்ன வித்தியாசம் என்கிறீர்களா? இது தொடர்பாக நந்தினியின் வீட்டுக்கு சென்று அவரிடமே பேசினோம்...

“இந்த கனவு எல்லாம் எனக்கு 2017 ஆம் ஆண்டு தொடங்கியது பொதுவாக வீடு கட்ட வேண்டும் என்றால் காண்ட்ராக்டர், இன்ஜினியர், கொத்தனார் என செலவு அதிகமாகும்.

முதலில் நான் வீடு கட்ட தொடங்கிய போது இந்த வீட்டை நான் கூறிய இந்த மாடலில் கட்ட முடியாது, இது சரிப்பட்டு வராது என பல்வேறு கருத்துக்கள் எழுந்தது. அந்த சமயத்தில் என் நண்பர் சதீஷ் எனக்கு உறுதுணையாக இருந்தார்.

பொதுவாக  பில்லர் வைத்து தான் வீடு கட்டுவார்கள். ஆனால் இங்கு பில்லர் எழுப்பப்படாமல் தரையில் இருந்தே கம்பிகளை வட்ட வடிவத்தில் வளைத்து அதன் மீது சிறிய கம்பிகளை கட்டி மற்றும் ஜல்லிகளையும் கலவைகளையும் கலந்து வைத்து தான் இந்த இல்லம் கட்டப்பட்டுள்ளது .
ஒரு வித்தியாசமாக இருக்கட்டும் என்பது தான் இந்த ரவுண்ட் ஷேப் வடிவம். அதில் ஒரு பகுதி ஹால் ஆகவும் மற்றொரு பகுதியை சமையலறையாகவும் பயன்படுத்தி வருகிறோம்.

இது முற்றிலுமாக ஒரு புதுமையான முயற்சி நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கை இருந்தது அதை தொடர்ந்து முழுமையாக கட்டி முடித்த பிறகு பல்வேறு இடங்களில் இருந்து பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்தனர். எனது தந்தை, தாய் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து நந்தினியின் தாய் பேசும்போது, “நாங்கள் வெகு நாட்களாக வீடு கட்ட வேண்டும் என்று எண்ணம் இருந்தது இதற்கிடையில் பெண் படிக்கிறாள் பொறுமையாக கட்டிக் கொள்ளலாம் என எனது கணவர் தெரிவித்தார்.

மகள் படித்து முடித்த பிறகு அவளாகவே ஒரு புதுமையான வீடு கட்ட வேண்டும் என்று நினைத்தார், ஆனால் எந்த மாதிரி திட்டங்கள் வைத்துள்ளார்? எப்படி வீடு கட்டப் போகிறார்? என்பதை எதையும் எங்களிடம் சொல்லவில்லை. தினந்தோறும் காலையிலிருந்து மாலை வரை வேலை செய்து முழுமையாக கட்டி முடித்த பிறகு தான் தெரியும் இந்த வீடு இவ்ளோ அழகாக வந்துள்ளது . என் மகளைப் படிக்க வைத்ததற்கு எங்களுக்கு பெருமை தேடித் தந்துள்ளார். என்றார்

Post a Comment

Previous Post Next Post