சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு YMMA GALHINNA இன் ஏற்பாட்டில் “சகல பிள்ளைகளும் சிறந்ததொரு எதிர்காலம் ”என்னும் தொனிப்பொருளின் கீழ் சிறுவர்களுக்கான விஷேட சிறுவர் தின நிகழ்வுகள் ஹல்கொல்ல ஆரம்பப் பாடசாலையில் அதிபர் திருமதி ஸனூரியா அவர்களின் தலைமையில் நேற்று (05.10.2022) நடைபெற்றது.
சிறுவர்களின் கலை மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் ஹல்கொல்ல ஜும்ஆ மஸ்ஜித் பேஷ் இமாம் ,பீரிஹெல ஆரம்பப் பாடசாலை அதிபர், YMMA GALHINNA தலைவர், அங்கத்தவர்கள் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள், முக்கியஸ்தர்கள்,நலன்விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
மாணவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.
பெற்றோர்களின் ஏற்பாட்டில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
Tags:
கல்ஹின்னைபோஸ்ட்