இந்த ஆறு வாரங்களில் மனைவி கரோளுக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய முடிவு செய்தார்,
30 ஆண்டு கால திருமண வாழ்க்கை மிகவும் சந்தோசமாகவே இருந்தது..
இன்னும் ஆறு வாரங்கள்தான் இந்த உலகத்தில் வாழப்போகின்றோம் என்ற கவலையை மறந்து,அதற்காக தன்னை தயார் படுத்தும் வேலைகளை செய்ய ஆரம்பித்தார் ஜீன்.
முதலில் அவர் தனது ஓய்வூதியத்தை பணமாக்கினார். அவர்கள் வசிக்கும் வீட்டிற்கு அந்தப் பணத்தைப் பயன்படுத்தினார். மனைவி கரோலின், தான் இல்லாவிட்டாலும் நிம்மதியாக வாழ வேண்டும் என்று வீட்டுப் பிரச்சினைகளை தீர்த்து வைத்தார்.
இரண்டாவது அவரது மனைவி கரோல் மற்றும் குடும்பத்தினறுடன் இத்தாலிக்கு ஒரு பயணத்தை ஏற்பாடு செய்தார். அவர்கள் வெனிஸில் உள்ள ஒரு குறிப்பிட்ட தேவாலயத்திற்குச் சென்றபோது, அங்குள்ள பாதிரியார் ஏற்கனவே தம்பதியினருக்குத் தெரிந்தவர்.
இந்த தேவாலயத்தில்தான் ஜீனின் பெற்றோர் 50 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.
அதே நாளில் அங்கு சென்ற , ஜீனும் கரோலும் தங்கள் திருமண உறுதிமொழியை புதுப்பித்து, மிக அழகான நாளைக் கொண்டாடினர்.
இப்படியாக மகிழ்ச்சியான ஆறு வாரங்களில் ஜீன் இறந்த பிறகு, வீட்டில் சில இடங்களில் சில புத்தகங்கள் மறைத்து வைக்கப் பட்டிருந்ததை கரோலின் கண்டாள்..அத்தோடு சில குறிப்புக்களும் இருந்தன.
அவற்றை எடுத்துப் படிக்க ஆரம்பித்தாள் கரோலின் .
அதில் இருக்கின்ற ஒவ்வொரு குறிப்பும் தான் இறந்த பிறகு இப்படித்தான் நீ வாழவேண்டும் என்றிருந்தது.
ஜீன் இல்லாத வாழ்கை வெறும் சூன்யமாய் தெரிந்த கரோலினுக்கு அந்த ,ஜீனின் கைப்பட எழுதியிருந்த குறிப்புக்கள் உற்சாகத்தை தந்தது.
ஜீனின் நினைவுகளோடு ,அவன் தந்த அந்தப் பெறுமதிமிக்க பரிசுகளோடும் மகிழ்சியாக வாழ்ந்தாள் கரோலின்
Tags:
படித்ததில் பிடித்தது