அன்பு நபி மீது அருமை தோழர்களின் ஆத்மீக காதல்

அன்பு நபி மீது அருமை தோழர்களின் ஆத்மீக காதல்


ஒருமுறை தல்ஹத் இப்னு பராஹ் எனும் ஸஹாபி,
நபிகள் கோமான்(ஸல்) அவர்களின் திருச்சபைக்கு வந்து,பெருமானாரிடம்,

"நாயகமே யாரசூலல்லாஹ்!நீங்கள் விரும்பும் ஏதாவது ஒன்றைக் கொண்டு எனக்கு ஏவுங்கள்..எதுவாகினும் நான் அதை செய்து முடிக்கின்றேன்" என்று கூற,

அண்ணலாரும், "எதுவாயினும் செய்து விடுவீர்களா?"
"ஆமாம் நாயகமே! நீங்கள் எதைச் சொன்னாலும் செய்வேன்" என்று உறுதியுடன் கூறினார்கள்...

அதற்கு அண்ணலார்(ஸல்) 

"அப்படியானால் உம் தந்தையை கொன்று விட்டு வாருங்கள்"

"என்ன நாயகமே! எதுவாயினும் செய்வேன் என்பதற்காக தந்தையை கொலை செய்யச் சொல்வதா!" என்று அந்த ஸஹாபி கேட்கவில்லை...

மாறாக, எந்தவித மறு பேச்சும் இன்றி ஒரு நொடி கூட தயங்காமல், தாமதிக்காமல் தந்தையை கொல்ல விரைந்தது அந்த பிள்ளை!...

கொலை செய்ய விரைந்த தோழரை பெருமானார்(ஸல்)  அவர்கள் உடனே கூப்பிட்டு, தன்னருகில் அழைத்து,

"நான் யாரையும் கொலை செய்வதற்காக அனுப்பப்படவில்லை. மாறாக அனைவருக்கும் ரஹ்மத்(அருள்) ஆகவே அனுப்பப்பட்டுள்ளேன்" என்று கூறி தன் பக்கத்தில் அமர வைத்துக் கொண்டார்கள் பாச நபி(ஸல்)  அவர்கள்...

அண்ணலார்(ஸல்)  அவர்கள் அந்த ஸஹாபியின் தந்தையை கொலை செய்யுமாறு கூறியதன் காரணம் என்ன தெரியுமா!

அண்ணலாரின் தோழர்கள் தன் பெற்றோர்களை விட, மனைவி மக்களை விட,இவ்வுலக இன்பங்கள் எல்லாவற்றையும் விட பெருமானாரையே நேசித்தார்கள்...

இந்த நேசத்தின் ஆழத்தை இவ்வையகம் அறிவதற்கே பெருமானார் (ஸல்) அவர்கள் அவ்வாறு கூறினார்கள்...


 


Post a Comment

Previous Post Next Post