கல்ஹின்னையில் முதன் முதலாக 1992-ம் ஆண்டு தனியார்பாலர் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது
இதன் பொறுப்பாசிரியையாக செல்வி.யூ.சிபா ஷரீப் அவர்களும் முகாமைத்துவப் பணிப்பாளராக நிஸார்.எம்.ஷரீப் இருந்தனர்.
ஆசிரியையின் வீட்டிற்கு முன் னால் 10 *12' ஓர் அரையிலேயே இரண்டு பிள்ளைகளைத் கொண்டு ஆரம்பித்ததுதான் தாருல்ஹூதா பாடசாலை
ஆரம்பித்து முதல் வருடமே பணிரெண்டு மாணவர்கள் சேர்ந்தார்கள்.அந்த பணிரெண்டு மாணவர்களுக்காக 1992.11.22ம் திகதி. ஆசிரியரின் வீட்டு முற்றத்
திலேயே மேடையமைத்து முதலாவது கலைவிழா சிறப்பாக நடை பெற்ற போது பார்வையாளர்களின் வேண்டுகோலுக்காக ஒவ்வொரு நிகழ்ச்சியும் இரண்டிரண்டு முறைகள் மேடையேற்றியது விஷேடமாக குறிப்பிடத்தக்கது.
அதன் பிறகு மாணவர் தொகை வெகுவாக அதிகரிக்கத் தொடங்கியது. இரண்டு வருடங்களிலே இடப்பற்றாக்குறை ஏற்பட்டதால் புதிய இடத்திற்கு மாற்றப்பட்டதும் கல்ஹின்னையில் தாருல் ஹூதாவின் பெயர் ஓங்கியது
அத்துடன். மாணவர் தொகையும் அதிகரிக்க இன்னும் ஆசிரியைகள் தேவைப்பட்டது.அதன் பின்னால் எமது சிறிய தாயின் மகளான சியானா ஆசிரியையை இணைத்துக் கொண்டு அவருக்கான பாலர் கல்வி பயிற்சியையும் மேற்கொண்டு பல ஆண்டுகள் தாருல் ஹூதாவிலே ஆசிரியையாக கடமை புரிந்து பின்னர் தனியாக ஆரம்பிக்க எண்ணி
சென்றதன் பின்னர் பல ஆசிரியைகள் சேர்த்துக் கொள்ளப்பட்டு பாடசாலை நடைபெற்று வந்தது..
அத்தோடு நமது பாடசாலையின் வளர்ச்சியைப் சகிக்க முடியாத சிலர் நாங்களும் பாலர் பாடசாலை ஆரம்பிக்க வேண்டும் என்று பல பாலர் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டு மூடப்பட்டது மறக்க முடியாத நிகழ்வுகளாகும்.
வருடாவருடம் பிள்ளைகள் அதிகரித்து வருவதனால் எமது கட்டிடத்தில் அறுபது பிள்ளைகளுக்கு மேல் அனுமதிக்க முடியாத நிலையிலுள்ளது.
எமது பாடசாலையில் படித்து பட்டம்பெற்ற மாணவர்கள் உலகெங்கும் நல்ல பதவிகளில் இருக்கின்றார்கள்.
பல போராட்டங்களுக்கு மத்தியிலும் தாருல்ஹுதா பாடசாலை இன்றுவரையிலும் நல்ல முறையில் இயங்கிக்கொண்டிருக்கின்றது.
கல்ஹின்னையில் முதன் முதலாக ஆரம்பிக்கப் பட்ட தனியார் பாலர் பாடசாலை என்ற பெருமையுடன் திகழ்கின்றது தாருல்ஹுதா பாடசாலை.
நிஸார்.எம்.ஷரீப்
முகாமைத்துவப் பணிப்பாளர்
தருல்ஹுதா பாலர் பாடசாலை
கல்ஹின்னை
Tags:
கல்ஹின்னை பொக்கிஷங்கள்