நீல நிறத்தில் கூட அரிசி உண்டா..? இதை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

நீல நிறத்தில் கூட அரிசி உண்டா..? இதை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!


சங்குப்பூவை வைத்து செய்யப்படும் நீல அரிசி சாதம் சாப்பிடுபவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம், மாதவிடாய் பிரச்சனை, செரிமானப்பிரச்சனைகள் போன்றவை ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

இன்றைக்கு சுவையுடன் வயிறு நிரம்ப சாப்பிட வேண்டும் என்பதற்காக விதவிதமான டிஸ்களை மக்கள் வீட்டிலேயே சமைத்து சாப்பிட்டு வருகின்றனர். ஆனால் அரிசியில் செய்யப்படும் சாப்பாட்டைத் தொடர்ந்து சாப்பிடும் போது, கார்போஹைட்ரேட் அதிகளவில் சேர்த்துக்கொள்ள நேரிடும். இதனால் பல உடல் நலப்பிரச்சனைகளோடு உடல் பருமன் பிரச்சனைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

இதனால் தான் அரிசியை வைத்து சமைக்கும் போது உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் வகையில் ஊட்டச்சத்துள்ள காய்கறிகள், பூக்களைப் பயன்படுத்தி விதவிதமாக ரெசிபிகளை செய்கின்றனர். அந்த ரெசிபிகளும் இணையத்தில் வைரலாவதும் வழக்கமாகிவிட்டது. இந்த வரிசையில் நீல அரிசி சாதம் (ப்ளு ரைஸ்) தற்போது பிரபலமாகியுள்ளது. அது என்ன நீல அரிசி சாதம்? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்.

நீல அரிசி என்ற எந்த அரிசி வகைகளும் கிடையாது. சாதாரண அரிசியில் சங்குப்பூவை பயன்படுத்தி செய்யும் போது நம்முடைய சாதம் நீல நிறமாக மாறுகிறது. தாய்லாந்து மற்றும் மலேசியாவில் இது பிரபலமான ஒன்று. இதில் அதிக நார்ச்சத்துக்கள் இருப்பதால் உடலுக்கு நன்மையளிப்பதோடு ஜீரண சக்தியையும் எளிதாக்குகிறது. சங்குப்பூ துவர்ப்பு மற்றும் வெப்பத்தன்மையும் கொண்டுள்ளதால் சிறுநீர் பெருக்கம், குடல் புழுக்களைக் கொல்லுதல், உடல் வெப்பத்தைத் தணித்தல், வாந்தி, பேதியை கட்டுப்படுத்துதல், கல்லீரல் பிரச்சனை மற்றும் செரிமான பிரச்சனைக்கு தீர்வாக உள்ளது.

இதனால் தான் சமையலில் சங்குப்பூவை வைத்து செய்யப்படும் நீல அரிசி சாதம் செய்கின்றனர். இந்த சாதம் செய்வதற்கு முன்னதாக, முதலில் நீல நிற சங்குப்பூவை தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். அந்த நீரை வடிகட்டிக்கொள்ள வேண்டும். பின்னர் கடாயில் அந்நீரை ஊற்றி சுவைக்கு இலவங்க பட்டை போன்றவற்றை கொதிக்க வைத்த பிறகு, பாஸ்மதி ரைஸ் சேர்த்து சமைக்கும் போது நீல நிற அரிசி சாதம் தயாராகிவிடும்.

இதோடு வடகிழக்கு அல்லது தாய்லாந்தில் இருந்து வரும் நீலம் அல்லது ஊதா அரிசி, அதிக நார்ச்சத்து உள்ளடக்கம் கொண்ட பாலிஷ் செய்யப்படாத அரிசியாகும். இது ஜீரணிக்க எளிதானது மற்றும் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுவதாகவும் கூறப்படுகிறது.

 ப்ளூ ரைஸ், பூண்டு மற்றும் எடமாம் ஆகியவற்றுடன் சேர்த்து சுஷி செய்ய பயன்படுத்தலாம். தற்போது புளூ ரைஸ் சால்மன் சுஷியை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. நீல அரிசியில் சாலட் செய்து சாப்பிடலாம் என்கின்றனர் சமையல் கலை நிபுணர்கள். இதோடு சங்குப்பூ மலர்ச்சாறைப் பயன்படுத்தி டீ, ஜூஸ் போன்றவையும் செய்யலாம்.

இது கல்லீரலைப் பலப்படுத்துவதோடு தேமல் மற்றும் கரும்புள்ளிகளைக் குணமாக்க உதவுகிறது. மேலும் சிறுநீர்ப்பை நோய்கள் மற்றும் காய்ச்சலைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இவ்வாறு பல்வேறு உடல்நலத்திற்கு பயனளிக்கும் வகையிலான இந்த நீல அரிசி சாதம் தொடர்பான சில புகைப்படங்கள் தான் தற்போது சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.
SOURCE;news18

 


Post a Comment

Previous Post Next Post