கல்ஹின்னை அல்-மனார் பாடசாலையும் அபிவிருத்திச் சங்கமும்

கல்ஹின்னை அல்-மனார் பாடசாலையும் அபிவிருத்திச் சங்கமும்

பாடசாலை வளர்ச்சியில் அபிவிருத்திச் சங்கங்களினதும் பழைய மாணவர் சங்கங்களினதும் பங்களிப்பு, மிகவும் முக்கியமானதொன்றாகும்.

எந்தவொரு  பாடசாலையினதும் வளர்ச்சியில்,அபிவிருத்திச் சங்கங்களினதும் பழைய மாணவர் சங்கங்களினதும் பங்களிப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றி சிந்திப்பது காலத்தின் தேவையாகும்!

எந்தவொரு சமூக அமைப்பிலும் பாடசாலை ஒரு முக்கிய அங்கமாக அமைகிறது. பாடசாலையின் வளர்ச்சியும், தளர்ச்சியும் சமூகத்தில் முறையே எழுச்சியையும் தாழ்வையும் ஏற்படுத்துகின்றது. அதேபோல் சமூகத்தில்; ஏற்படுகின்ற முன்னேற்றம் அல்லது தாழ்வு பாடசாலையிலும் பிரதிபலிப்பதை காணக்கூடியதாக இருக்கும். ஒரு பாடசாலையின் அபிவிருத்தச் சங்கம் என்பது நிறைமாத கர்ப்பணிப்பெண் போன்றதாகும்.

பாடசாலைகள் தம் குறிக்கோள்களை, நோக்கங்களை செவ்வனே நிறைவேற்ற வேண்டுமாயின் அது சார்ந்த சமூகத்தின் ஆதரவையும் அங்கீகாரத்தையும் பெற்றிருத்தல் அவசியம். குறிப்பாக அறிவாற்றல் நிறைந்தவர்கள் ஒரு பாடசாலையில் அபிவிருத்தச் சங்கத்தின் அங்கத்துவம் பெறவேண்டும், 



பணம்படைத்தவர்கள் அவசியம், ஆனாலும்கூட அவர்களின் கூலிப்படை அதனுள்ளே வந்தால் கடைசியில் அரோஹராதான். 


அப்படிப்பட்டதொரு ஒரு ஆரம்பத்தை கல்ஹின்னை தேசியப்பாடசாலையின் புதிய அதிபர் வருகையின்போது கண்டேன். இந்நிலை தொடருமானால் தோல்வி ஒரு தனிநபருக்கு மாத்திரம் அல்ல, 
கூலிப்படைகள் சமூக அமைப்புக்களில் ஊடுருவும் போது அதனால் ஏற்படுகின்ற பாதிப்புக்கள் ஏராளம்.ஒரு சமூகமே சீராழிகின்ற நிலை ஏற்படும் என்பதை நாம் புரிந்துகொள்வது அவசியம் . 

கல்ஹின்னை ஒன்றியத்தின் தலைவர் அவர்களின் கவனத்திற்கு சில விடயங்களை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.


இதற்கு அச்சாணியாக இருப்பவர்கள் பாடசாலையின் அதிபரும் ஆசிரியர்களுமாவர். அவ்வாறு அமையாவிடத்து பாடசாலையில் இருந்து சமூகம் பெறக் கூடிய நன்மைகளும் சமூகம் பாடசாலைக்கு ஆற்ற வேண்டிய கடமைகளும்  நிறைவாக கிடைக்கும் என எதிர்பாக்க முடியாது. பாடசாலையின் முன்னேற்றத்தில் பெற்றோர்களும் பழைய மாணவர்களும் சிரத்தையுடன் ஈடுபட்டு அதன் வளர்ச்சியில் அதிபரும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் பழைய மாணவர்களும் ஒருங்கிணைந்து செயற்படுகின்ற பொழுது பாடசாலை நல்ல முன்னேற்றப் பாதையில் செல்வது மாத்திரமன்றி சமூகமும் நல்ல பெறுபேறுகளை அறுவடை செய்ய முடியும்.

பாடசாலை அபிவிருத்திச்சங்கம் (முன்பு பெற்றோர் ஆசிரியர் சங்கம் என்ற பெயரிலும்) பழைய மாணவர் சங்கம் போன்ற அமைப்புகள் பெயரிலும் பல ஆண்டுகளாக பாடசாலைகளில் இயங்கி வந்திருப்பினும் அண்மைக்காலத்திலேதான் அவைகளின் கவனக்குறைவாக இருந்ததினால் சமீபாகாலமாக கல்ஹின்னை அல்-மனார் தேசியப்பாடசாலையில் மாணவ-மாணவிகளின் பெறுபேறுகள் குறைவுக்கான காரணம்,கல்வியறிவுயில்லா குழுக்களின் கைகளுக்குள் (கல்ஹின்னை அல்-மனார் தேசியப்பாடசாலை) வசப்பட்டதே ஒரு காரணமாகும், 


அல்லாஹ்வுக்காக அர்ப்பணிப்புடன் செயல்பட முன்வந்திருக்கும் கல்ஹின்னை ஒன்றியத்தின் தலைவர் அவர்களே உங்கள் அர்ப்பணிப்புடன் எதிர்வரும் காலத்தில் அல்-மனார் தேசியப்பாடசாலை வெற்றி நடைபோடும் நிலையைக் காணவேண்டும் என இறைவனைப் பிராத்திக்கிறேன்.

பாடசாலை அபிவிருத்திச் சங்கங்கள், பழைய மாணவர் சங்கங்களும் வழங்கும் ஆலோசனைகளுக்கு கல்விப் பகுதியினரும் முக்கியத்துவம் அளித்து வருகின்ற சூழலில் அவ்வமைப்புகள் பொறுப்புடன் செயலாற்ற வேண்டிய நிலைக்கு உள்ளாகின்றன. பல பாடசாலைகளில் இவ்வமைப்புகள் ஆக்கபூர்வமான செயற்பாடுகளில் ஈடுபட்டு புத்துயிரோடும் புத்துணர்வோடும் செயற்பட்டு வருகின்ற நிலைமையை காணக்கூடியதாக இருக்கின்றது.

பாடசாலை வளர்ச்சியில் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் பங்கு பலவாறு அமையலாம். பலதுறைகளிலும் பலவகைகளிலும் பலகோணங்களிலும் அவை தொண்டாற்றிச் சேவை செய்யமுடியும். பெற்றோர்களின் ஆர்வத்தை நல்ல முறையில் பயன்படுத்திப் பாடசாலையின் வளர்ச்சியில் அதனைத் திசை திருப்பி வெற்றி காண்பதில் பாடசாலை அதிபரின் பங்கு மிகவும் பிரதானமானது.

பெற்றார் ஆசிரியர் சங்கங்கள் தமது கடமைகளைச் செய்ய முற்படுகின்றபோது தமது எல்லைக் கோட்டைக் கடந்து பாடசாலை  உள்நிர்வாகத்தில் தலைமையிடாமல் இருப்பது மிகவும் விரும்பத்தக்கது. உள்நிர்வாகம் எங்கு தொடங்குகிறது எங்கு முடிகிறது என அடையாளம் கண்டுகொள்வது பாடசாலை அமைப்பிலே சில வேளைகளில் ஒரு சிரமமான காரியமாகும். இருந்தபோதும்; பாடசாலை அபிவிருத்திச் சங்கங்கள்;, பழைய மாணவர் சங்கங்கள் தமது அமைப்புக்கு இடப்பட்ட வரம்பைமீறி செயற்பட ஆரம்பிக்கும் போது அதிபரின் ஆளுமைக்கும் ஆசிரியர்களின் ஒத்துழைப்புக்கும் விரும்பத்தகாத தாக்கத்தை ஏதோ ஒரு வகையில் ஏற்படுத்துகிறது. கடந்த காலங்களில் இப்படியானதொரு நிலைமையை கல்ஹின்னை அல்-மனார் தேசியப்பாடசாலையில் காணக்கூடியதாக இருந்தன.

பாடசாலை நிர்வாகத்துடன் சுமுகமான உறவைப் பேணும் அதேவேளையில் பழைய மாணவர் அடைப்புகளும், பெற்றோர் ஆசிரியர் சங்கங்களும் தத்தமது செயற்பாடுகளின் போது தமக்கிடையே முரண்பாடுகள் எழாமல் சுமுகமாகவும், புரிந்துணர்வுடனும் செயற்படுவது அவசியம். பெயர், புகழ், விளம்பரம் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளாது பாடசாலை அபிவிருத்திப் பணியில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய விடயங்களை முதலில் அணுகித் தீர்ப்பது நல்லதாகும்.

பாடசாலைகளின் வகுப்பறைகள்,  விஞ்ஞானகூடங்கள், தொழிற்கூடங்கள், விளையாட்டு மைதானங்கள் போன்றவற்றை சீரமைத்துக் அமைத்துக் கொடுப்பது மாத்திரம் இவ் அமைப்புகளின் கடமை அல்ல. பாடசாலைப் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியிலும் இவ் அமைப்புகள் ஆர்வங் கொள்ள வேண்டும் இதற்காக பாடசாலை நிர்வாகத்துடன் நேரடித் தொடர்பு கொண்டு செயலாற்றுவது விரும்பத்தக்கது.

ஓவ்வொரு பெற்றோரும் தமது பிள்ளையின் கல்வி வளர்ச்சிக்கு ஏற்ற சூழலை வீட்டில் ஏற்படுத்திக் கொடுப்பது முதற் படியாகும், பாடசாலைக் கொள்கைகளுக்கும், திட்டங்களுக்கும் அமைவாகத் தமது பிள்ளைகள் கருமமாற்றும் வகையில் ஒத்துழைப்பை நல்கவேண்டும்.

தமது பிள்ளையோடு மட்டும் நின்றுவிடாது பெற்றோர்கள் பாடசாலையின் முழுமையான கல்வி வளர்ச்சியில் ஆர்வங்காட்ட வேண்டும். அதற்கேற்ற கூட்டு முயற்சிகளாக ஆற்றக்கூடிய பணிகளில் கவனத்தைச் செலுத்துவது நன்று. பிள்ளைகளின் பெறுபேறுகள்,அவர்களின் முன்னேற்றங்கள் எவ்வாறு இருக்கின்றன என்பதை ஆராய்ந்து பார்த்து, அவர்களின் பொதுவான குறைகளை நிவர்த்தி செய்யக்கூடிய வழிவகைகளைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்.

பிள்ளைகளிடையே வெளித் தெரியாதிருக்கும் திறமைகளையும், ஆற்றல்களையும் சாதுரியங்களையும் வெளிக்கொணர்வதற்குத் தேவையான பின்புல நடவடிக்கைகளை ஆரம்பித்தல் நன்று. இவை பற்றித்  தனித்தும், கூட்டாகவும், அதிபர் ஆசிரியர்களின் அனுசரனையுடனும் சிந்தித்து, கலந்தாலேசித்து செயலாற்றுகின்ற நிலைமையை உருவாக்க வேண்டும். அத்தோடு பாடசாலைக்கென இருக்கும் வளங்களையும் பாதுகாத்து சீரமைக்க வேண்டிய கட்டாயத் தேவைகளை இனங்காணப்பட வேண்டும். 

கத்திரிக்கோல் வைத்து தொழில் செய்பவர்கள் இரண்டு பிரிவாகும் 1, தையல்காரன், 2 சிகையலங்கரிப்பாளர்.  கத்திரிக்கோல் இருப்பதைக்கொண்டு தையல்காரன் செய்யும் வேலையை, சிகையாலங்கரிப்பாளர் செய்ய முடியாது என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும், அதனைப்பொருத்தே கல்ஹின்னை அல்-மனார் தேசியப்பாடசாலையின் எதிர்காலம் அமையும். 

தாம் கல்வியில் பின்தங்கியவர்கள் என்ற தாழ்வு மனப்பான்மைக்கும் மனஉழைச்சலுக்கும் மெல்லக் கற்கும் மாணவர்கள் ஆளாகாத வண்ணம் அத்தகைய திட்டத்தை முன்னெடுப்பது மிக முக்கியமாகும்.

பெற்றோரிடமிருந்து பண உதவி தேவைப்படும் போது மாத்திரம் சங்கங்களை கூட்டாது பெற்றோர் ஆசிரிய சங்கங்கள் பழைய மாணவர் சங்கங்களை அடிக்கடி கூட்டி பாடசாலையின் நிறைகுறைகளை தெரிவித்து விவாதிக்க வேண்டும். அவர்களை பாடசாலையின் வளர்ச்சில் ஈடுபடுத்த வேண்டும். ஆண்டுக்கொரு முறை பகட்டான பெரிய விழாக்களை மாத்திரம் எடுப்பதோடு நின்றுவிடாது தமது முயற்சிகளை பல துறைகளிலும் பலவகைகளிலும்  பயன்படுத்த வேண்டும்.

பாடசாலை அபிவிருத்திச் சங்கங்கள் பழைய மாணவர் சங்கங்கள் ஆகியவற்றினால் தேர்ந்தெடுக்கப்படும் நிர்வாகக்குழு தம்மிடம் சுமத்தப்பட்ட பொறுப்பை தட்டிக்கழியாது பெற்றோர்கள், பழைய மாணவர்கள் வைத்த விசுவாசம் வீண்போகாதவாறு பாடசாலையின் நலனையே குறிக்கோளாகக் கொண்டு செயலாற்ற வேண்டும்.

ஒரு காலகட்டத்தில் கல்ஹின்னை அல்மனார் தேசிய பாடசாலை மத்திய மாகாணத்தில் மிகவும் புகழ்பெற்ற பாடசாலையாக இருந்தது .கல்வியிலும் ,விளையாட்டுக்களிலும் மிகச்சிறந்த ஒரு பாடசாலையாக இருந்ததை நாம் அறிவோம் .ஆனால் இன்று மிகவும் பின் தங்கிய நிலைக்கு சென்றுள்ளதையும் நாம் காணக்கூடியதாயுள்ளது.

இதற்கான காரணத்தை கண்டறிந்து ஊர்மக்கள் மிகவும் அவசரமான ஒரு தீர்மனதிற்கு வருவது காலத்தின் தேவையாகும்.அப்படியில்லைஎன்றால் இன்று இருக்கின்ற நிலை எதிர்வரும் காலங்களிலும் தொடரும் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.கல்வியிலும் ,விளையாட்டிலும் எமது பிள்ளைகள் பிந்தங்கியிருப்பார்கள் என்பது நிச்சியம்.

கல்ஹின்னை பாடசாலையின் அபிவிருத்தியில் மிகவும் முக்கியமாக ஈடுபடுகின்ற ஒன்றியத்தின் தலைவர் அல்ஹாஜ் ஜிப்ரி ஹாஜியார் அவர்கள் மேற்குறிப்பிட்ட விடயங்களில் கூடுதலாக கவனம் செலுத்தி பாடசாலையின் வளர்ச்சிக்கு மேலும் உருதுனையாயிருப்பார் என்று நம்புகின்றேன்.

M.M.பாரூக் (WC)
கல்ஹின்னை.

Post a Comment

Previous Post Next Post