
உடனே கலீஃபா அவர்கள் ஆளுநரையும் அவர் மகனையும் உடன் மதீனாவுக்கு வரவழைத்தார்கள். அவர்கள் இருவரும் கலீஃபா அவர்கள் முன் பிரசன்னமானபோது கலீஃபா அவர்கள் தனது கையிலிருந்த சாட்டையை அந்தஎகிப்தியர் கையில் கொடுத்து ஆளுநரின் மகனை அவர்களின் முன்னிலையிலே சாட்டையால் அடிக்கும்படி கட்டளையிட்டார்கள்
எகிப்தியர் அடித்துவிட்டு சாட்டையைத் திருப்பு கொடுத்த போது உமர்(ரலி) அவர்கள் சாட்டையடி ஒன்றை மாண்புமிகு ஆளுநருக்கும் கொடுங்கள் என அந்த எகிப்தியரை வேண்டிநார்கள். தனது தந்தை ஆளுநர் என்ற கர்வத்தாலேயே அவரது மகன் இவ்வாறு நடந்துள்ளார் என்றார்கள்.
அந்த எகிப்தியரோ எனக்கு யார் அடித்தார்களோ அவருக்கு நான் பதிலடி கொடுத்துவிட்டேன் எனக்கு இது போதும் என்றார். உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் மீது ஆணையாக நீர் ஆளுநரை அடித்திருந்தாலும் நீர் அவ்வாறு செய்வதிலிருந்து உண்னை தடுத்துருக்க மாட்டேன். உமது சொந்த விருப்பத்தின் பேரிலேயே அவரை நீர் விட்டு விட்டீர் என்றார்கள்.
பின்பு உமர்(ரலி) அவர்கள் ஆளுநரை பார்த்து கோபமாக ‘ஏ அமீரே! மனிதர்கள் தமது தாயின் வயிற்றிலிருந்து சுதந்திர மனிதராகவே பிறக்கிறார்கள். அவர்களை நீர் எப்போது அடிமைப் படுத்த ஆரம்பித்தீர்?’ என்று கூறி எச்சரித்தார்கள். ஆட்சியாளர்களும் சட்டத்திற்கு அப்பாற் பட்டவர்கள் அல்லர் என்ற உண்மையை இஸ்லாம் ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்னரே உலகுக்கு உணர்த்தி மனித உரிமைக்கு மதிப்பளித்தது.
