கல்ஹின்னைஅல்மனார் தேசிய பாடசாலையின் இன்றைய நிலைக்கு யார் காரணம்?

கல்ஹின்னைஅல்மனார் தேசிய பாடசாலையின் இன்றைய நிலைக்கு யார் காரணம்?


சமூக மாற்றத்தின் சம பங்காளிகள் பெண்களே எனும் சிந்தனையை அடிப்படையாக கொண்டு, ஒரு பெண் ஒரு தாய், ஒரு பாசறை எனும் மகுட வாசகத்தை இலக்காக கொண்டு சமூக மாற்றத்திற்கான சாதகமான முன்னெடுப்புக்களை முன்னெடுக்கும் பதுளை பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியின் நடைமுறைகளை யதார்த்தமாக வெளிக்கொணரும் காணொளியைப் பாருங்கள்.

இந்தக் காணொளிப்பதிவை எனக்கு அனுப்பியவர் ஜனாப் M.H.M.நியாஸ் அவர்கள்.
முன்னாள் பணிப்பாளர் அம்பாந்தோட்டை, மன்னார் உப்பளத்திலும்  மற்றும் சமுர்த்தி அமைச்சின்கீழ் செயல்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்தோடு பதுளை பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரி நிர்வாகத்துடன் நீண்டகால தொடர்புகள் உடையவரும் ஆவர். சமூகப்பற்றும் தான் பிறந்து வளர்ந்த ஊரின் நலன்களுக்காகவும் என்னுடன் நேரம், காலம்பார்காமல் நல்ல விடயங்களை பகிர்ந்து கொள்கிறார்.

கல்ஹின்னை அல்-மனார்  தேசியப்பாடசாலை அதிபர் அவர்கள் இப்படிப்பட்டவர்களை இனங்கண்டு  பாடசாலையின் அபிவிருத்திக்கான முயற்சிகள் செய்வாரேயானால் இன்ஷா-அல்லாஹ் கல்ஹின்னை அல்-மனார் தேசியப்பாடசாலையின் எதிர்காலம் மிளிரும் என நினைக்கிறேன்.

"கண்கள் இல்லாதவர்கள் இடத்தில் நேரம் கேட்பதைவிட, கண் பார்வையுள்ளவர்களிடம் வழிகேட்டால் பயணம் சுலபம்" என்பதைப்போல் அரசியல் தொடர்பு மற்றும் கல்வி சம்பந்தமான ஆலோசனைகளை அதற்குத் தகுதியானவர்களிடம் பெற்றுக் கொள்வது பாடசாலையின் வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாய் அமையும் என்று நம்புகின்றேன் .
சுமார் 10,ஆண்டு காலத்திற்குள் பதுளை பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியில் கல்வி கற்கும் மாணவிகளின் பெறுபேறுகள்,ஆச்சரியப்பட வைக்கின்றன.ஆசிரியர்களின் அயராத உழைப்பின் பிரதிபலிப்பு மாணவர்களின் பெறுபேறுகளில் தெரிகின்றது.

பதுளை பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியின் கடந்த 10 ஆண்டுகால வளர்ச்சி, இலங்கையில் இருக்கின்ற அனைத்து பாடசாலைகளுக்கு ஒரு முன் மாதிரியென்றே கூறவேண்டும். 

அதேநேரம் அத்தனை வசதி வாய்ப்புக்கள் இருக்கின்ற கல்ஹின்னை அல் மனார் தேசிய பாடசாலை வளர்ச்சியில் மிகவும் பின் தங்கிய நிலையில் இருப்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

(நான் ஏற்கனவே ஒரு கட்டுரையில்
குரிப்பிட்டதைப்போன்று,பேய்கள் குடியிருக்கும் கட்டிடங்களாகக் காட்சியளிக்கின்றது.) 

90,வருடங்களை எட்டிக்கொண்டிருக்கும் கல்ஹின்னை அல்-மனார் தேசியப்பாடசாலையின் நிலை என்ன? 
ஏன் இப்படிப்பட்டதொரு நிலை?.

மர்ஹூம் "மாமா" ஹனிபா அவர்கள் அதிபராக இருந்த காலத்திற்குப் பின் எந்த ஒரு அதிபரும் பாடசாலையை அபிவிருத்தி செய்யும் முயற்சியை மேற்கொள்ளவில்லை.அவற்றை செய்வதற்குரிய ஆதரவையும் நாம் அவர்களுக்கு வழங்கவில்லை.

அபிவிருத்தி சங்கம் என்ற பெயரில் ஒரு அமைப்பை உருவாக்கி பாடசாலையை ஒரு பாழடைந்த இடமாக மாற்றியதுதான் மிச்சம் . 
  • ஒழுங்கான பெறுபேறுகள் இல்லை ,
  • ஒழுக்கம் குறைவு,
  • விளையாட்டு வீரர்களை உருவாக்குவதில்லை
  • .கட்டிடங்களை புனரமைப்பதில்லை 
  • ஆனால் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் இருக்கின்றது.ஆசிரியர்கள் இருக்கின்றார்கள்.
பாடசாலையின் அபிவிருத்தி என்பது கூட்டம் கூடி ஜாலியாகப் பேசிவிட்டு வருவது மட்டுமல்ல,செயலில் காட்டவேண்டும்.கல்வி ஆயிரக் கணக்கான பிள்ளைகளின் எதிகாலம். பிள்ளைகளை பாடசாளைக்கு அனுப்புகின்ற பெற்றோர்களின் பலதரப்பட்ட கனவு.நம்பிக்கை.
பாடசாலை ஆசியர்களிடம் இருக்கின்ற நம்பிக்கை.உழைத்து உருக்குலைந்து போனாலும் பிள்ளைகள் படித்து பட்டம் பெறுவார்கள் என்ற உறுதியான நம்பிக்கை.

ஆகவே கல்ஹின்னை மக்கள் அல்மனார் தேசிய பாடசாலையின் எதிகால நலன்களைப்பற்றி சிந்தித்து செயல்படுங்கள். 
  • பெற்றார் ஆசிரியர் சங்க கூட்டங்களுக்குச் சென்றால் வாய் திறந்து பேசுங்கள்.
  • பாடசாலை ஏன் இப்படிப்பட்டதொரு நிலைக்குச் சென்றுள்ளது என்பதை ஆராய்ந்து பாருங்கள்.
  • அதிபரோடும்,ஆசிரியர்களோடும் ,கலந்தாலோசித்து பாடசாலையின் அபிவிருத்திற்கு உதவுங்கள்.
கல்ஹின்னை மக்கள் வாய்திறந்து பேசவில்லை என்றால் இன்னும் 5 வருடங்களில் இலங்கையில் மிகவும் மோசமான ஒரு பாடசாலையாக கல்ஹின்னை அல்மனார் தேசிய பாடசாலை விளங்கும் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை 

M.M.பாரூக் (WC)
கல்ஹின்னை.


 


Post a Comment

Previous Post Next Post