கல்ஹின்னை அல்-மனார் பாடசாலை விளையாட்டு மைதான புனரமைப்புப்பணி

கல்ஹின்னை அல்-மனார் பாடசாலை விளையாட்டு மைதான புனரமைப்புப்பணி

(AL-MANAR GROUND DEVELOPMENT)  
 
கல்ஹின்னை அல்-மனார் பாடசாலை தோன்றிய காலம் முதல் முழுமையாக நிறைவுகானப்படாத ஒரு இடம்தான் பாடசாலைக்கென இருக்கும் விளையாட்டு மைதானம்.

முயற்சிகள் பாரியளவில் இருந்த போதும்கூட இளைஞர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில் இன்றுபோல் அக்காலத்தில் வெளியில் இருப்பவர்கள் ஓன்று சேர்வதற்கான சந்தர்ப்பமோ, அதற்கான வழிகளோ இல்லாமை இருந்ததும் கூட ஓர் காரணமாகும்.

அல்ஹம்துலில்லாஹ் இன்று அதற்கான வழி பிறந்துள்ளத

  அல்-மனார் தேசியப்பாடசாலையின் பழைய மாணவர்கள் பலர் வெளிநாடுகளில் இருந்த போதும் அத்தோடு உள்ளூர்களில் இருக்கும் பழைய மாணவர்கள், ஒன்றுசேர்ந்து இதற்கானதொரு திட்டத்தையும் ஆலோசனைகளையும் பரிமாறிக்கொள்ள வழிவகுத்துள்ளார்கள் 

(AL-MANAR GROUND DEVELOPMENT)  என்கின்ற தலைப்புடன் முயற்சிகள் அல்லாஹ்வின் திருப்தியுடன் நிறைவுபெற முதல் கண் என் வாழ்த்துக்கள்.

அதற்கான வழிமுறைகளையும் இஸ்லாமிய மார்க்கம் கோடிட்டுக் காட்டித்தந்த விதிமுறை யாதென கீழ் படிக்கவும் பொதுவான எக்காரியத்தைச் நாம் செய்ய முற்பட்டாலும் அல்லாஹ்வை முன்நிறுத்தி, அனைவரைகயும் அன்புடன் அரவணைத்து பயணிப்போம் 

 இன்ஷா-அல்லாஹ் வெற்றிகரமாக நாம் இலக்கை அடைந்து விடலாம். 

கல்ஹின்னையில் ஒரு சில குழுக்கள், அல்லது அமைப்புக்கள் மின்னல் வேகத்தில் தோன்றி சமூகப் பாதுகாப்பு எனும் பெயரில் எழுந்து நின்றது ஆனால் இன்று பக்கவாதம் போல் ஆகிவிட்டது ஏன் ? 

சுயநலப்போக்கு, தற்பெருமை,  ஆணவம், என்றுமே வளர்ந்ததில்லை 

எங்கே செல்கிறார்கள் இன்றைய இளைஞர்கள்

எப்படி உள்ளது இளைஞர் சமூகம்? இன்றைய இளைஞர்கள் மிக திறமைசாலிகள். இலகுவாக புரிந்து கொள்ளும் மனப்பக்குவம், திறமை படைத்தவர்கள். புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளும் ஆர்வம் கொண்டவர்கள்.புரியாததை புரியவில்லை என்று தயங்காமல் சொல்லக்கூடியவர்கள் இன்றைய இளைஞர்கள் அவர்களை ஆக்கபூர்வமான ஓர் வட்டத்திற்குள்ளேயே கொண்டு செல்ல இத்திட்டமும் ஒரு வழியாகும் என கருதுகிறேன் நான்         (AL-MANAR GROUND DEVELOPMENT)    
 
கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தில் கை தேர்ந்து விட்டதால் உலகில் பல்வேறு நாடுகளில் பணி செய்கிறார்கள். மாறுபட்ட சூழலில் வாழ்வதை சிரமமாக நினைப்பதில்லை.பழகி் கொள்கிறார்கள். அவர்களின் ஆற்றல் அளப்பரியது. நிறைய திறமைகள்.கடின உழைப்புக்கும் தயாராக உள்ளார்கள்.ஆண்களும் பெண்களும் இவற்றில் சரிசமமாக உள்ளனர். 

கெட்ட செய்திகளும் உண்டு.

புகை பழக்கம், போதை பழக்கம் உள்ளவர்கள் அதிகரிக்கும் அபாயம் தெரிகிறது .இக்காலகட்டத்தில் செல்போன் மோகம் அதிகரித்ததால் தடம்புரண்டு போகும் அவல நிலையையும் காணக்கூடியதாக உள்ளன.

நமது இளைஞர்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள விளையாட்டும் ஓர் வழியாகும் .அதற்கான ஏற்பாடுகளில் ஒன்றுதான் இன்று அல்-மனார் தேசியப்பாடசாலை விளையாட்டு மைதானத்தின் புனர்நிர்மாணம் பற்றி சிந்திப்பது. 

இருபது ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்தது சூழல்?
இளைஞர்களிடையே கல்வி கற்கும் ஆர்வம் உருவாகிக்கொண்டிருந்தது.. என்றாலும் பட்டதாரிகளை விரல் விட்டு எண்ணி விடலாம்.பத்தாம் வகுப்பு படித்து விட்டால் பயணம் போய்விடுவார்கள் கத்தார்,சவுதி அரேபியா,டுபாய், இதுபோன்று இன்னும் ஏனைய பல நாடுகளுக்கு செல்கின்றர்கள் நம் இளைஞர்கள் 

ஆனாலும்கூட..
திறமைகளும் சுமார்தான்..தயங்கி தயங்கி பேசுவார்கள்..தொழில்நுட்ப அறிவு மிக குறைவு.. ஆனாலும் நல்லவர்கள் நிறைய இருந்தார்கள். தவறு செய்ய பயப்படும் சூழல் இருந்தது அன்று  சிகரெட் பிடிப்பதே ஒளிந்து கொண்டுதான் என்ற நிலை.. உள்ளூர் டீக்கடையில் டீ குடிப்பது கூட கௌரவ குறைவு என்று நினைத்தவர்களும் உண்டு. பெரியவர்களுக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்துவார்கள். என்றாலும் கல்வியும் மற்ற திறமைகளும் குறைவாகத்தான் இருந்தது அன்று காரணம் தேவைகளுக்கு ஏற்ப உதவிகளும், வழிகாட்டலும் இல்லாதிருந்த காலம் அது.


இப்போதைய தேவை
அன்றைய இளைஞர்களிடத்தில் இருந்த ஆக்கபூர்வமான விஷயங்களோடு இன்றைய இளைஞர்களிடம் உள்ள ஆற்றல், திறமைகளை இணைத்தால் அருமையான தன்மைகள் உடையவர்களை கற்பனையில் பார்க்க முடிகிறது. எனவே இப்போதைய தேவை, திறமைகளுடன் கூடிய நல்ல இளைஞர்கள். இளைய சமுதாயத்தை ஆய்வு செய்யும் போது வெறுமனே அவர்களை குற்றம் சாட்டுவதை தவிர்த்து, அவர்களிடம் எதை எதிர்பார்க்கிறோம் என்பதை தெளிவு படுத்தல் வேண்டும்.

இளைஞர்களே! உங்கள் வாழ்க்கை பற்றி தொலைநோக்கோடு சிந்தியுங்கள்!

ஆரோக்கியம் தான் ஒரு மனிதனுக்கு இறைவன் வழங்கிய அருட்கொடைகளிலேயே உன்னதமானது. 

மிகப்பெரிய சொத்து. ஆனால் அதன் அருமை அது இல்லாத போதுதான் தெரிகிறது. எனவே ஆரோக்கியம் பேணுங்கள். ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் அனைத்தையும் தவர்த்திடுங்கள். உடல் ஆரோக்கியமாய் இருப்பதற்கு விளையாட்டும் ஒரு அங்கமாகும். ஆரோக்கியமாய் இருக்க நல்ல எண்ணங்கள் அவசியம் அந்தவகையில் கடந்த 01-10-2022,யல் (AL-MANAR GROUND DEVELOPMENT)   whatsapp ஊடாக அல்-மனார் தேசியப்பாடசாலை விளையாட்டு மைதானம் மிளிரும் நிலையை காணவேண்டும் .அதற்கான ஒத்துழைப்பும் ஊர்மக்கள் அனைவர்களினதும் விருப்பங்களாக இருக்கவேண்டுமென்ற தாங்களின் கருத்துக்களை வெளிப்படுத்தி இருந்தார்கள் 

அல்-ஹாஜ் நியாஸ் (சின்னதுரை) சர்பான் சாஹுல் ஹமீத் (போஸ்வான) DR நசீம், சஹீல் (மாஸ்டர்) ஜனாப் மன்சர், உவைஸ் ராசன், ரியாஸ் ஹனிபா,அப்துல் கரீம், ரஹீஸ், ஆகியோர்கள் இன்னும் பலர் ஆலோசனைகள் மற்றும் அவரவர்களின் அபிப்பிராயங்களை  வழங்கியிருப்பதற்கு மிக்க நன்றிகள். 

தனிப்பட்ட திறமைகளை வளர்த்துக்கொள்ளுங்கள். இளமைக் காலத்தில் நாம் வளர்த்துக் கொள்ளும் திறமைகள் நமது வாழ்நாள் முழுவதும் நமக்கு பலன் தரக்கூடியது.

M.M.பாரூக் (WC) கல்ஹின்னை

  

 

 


Post a Comment

Previous Post Next Post