நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் வங்கதேச அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. டஸ்கின் வீசிய முதல் ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் இரண்டு விக்கெட்டை இழந்தது. தொடர்ந்து விக்கெட்டை பறிகொடுத்து வந்த நெதர்லாந்து அணி பேட்ஸ்மேன்களில் காலின் ஆக்கர்மேன் மட்டும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
ஒரு பக்கம் விக்கெட் வீழ்ந்து வந்தாலும் மறுபக்கம் அரைசதம் அடித்து வங்கதேச அணிக்கு பெரும் தலைவலி தந்தார். 48 பந்துகளில் 62 ரன்கள் எடுத்திருந்தபோது டஸ்கின் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். எளிதில் வெற்றி பெற்றுவிடலாம் என நம்பிக்கையில் இருந்த வங்கதேச அணிக்கு கடைசியாக களமிறங்கிய பால் வான் மீக்ரன் வங்கதேச அணியை அதிர்ச்சியில் உறைய வைத்தார்.
இறுதி வரை போராடிய அவர் 14 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தர். இறுதியில் நெதர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்டை இழந்து 135 ரன்களே எடுத்தது. இதனால் வங்கதேச அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வங்கதேச அணி தரப்பில் டஸ்கின் 4 விக்கெட்டும், ஹாசன் மமுட் 2 விக்கெட்டை வீழ்த்தினர்.
ஒரு பக்கம் விக்கெட் வீழ்ந்து வந்தாலும் மறுபக்கம் அரைசதம் அடித்து வங்கதேச அணிக்கு பெரும் தலைவலி தந்தார். 48 பந்துகளில் 62 ரன்கள் எடுத்திருந்தபோது டஸ்கின் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். எளிதில் வெற்றி பெற்றுவிடலாம் என நம்பிக்கையில் இருந்த வங்கதேச அணிக்கு கடைசியாக களமிறங்கிய பால் வான் மீக்ரன் வங்கதேச அணியை அதிர்ச்சியில் உறைய வைத்தார்.
Tags:
விளையாட்டு