எதிர்வரும் சிறுவர் தினத்தை முன்னிட்டு சிறார்களின் திறமைக்கு ஒரு மேடை அமைக்க எண்ணியுள்ளோம்.இன்று சிறு பிள்ளைகள் நல்ல திறமைகள் இருந்தும் அதற்குரிய அங்கீகாரம் கிடைக்காமல் இருப்பதை காண்கின்றோம்.இன்று மீடியாக்கள் சினிமாவையும் .அரசியளையும் மட்டுமே நம்பி வெளி வருகின்றன.
பிள்ளைகளை சினிமா என்ற மாயைக்கும் பெற்றோர்களாகிய நாங்கள்தான் தள்ளிவிடுகின்றோம்.அவர்களை கற்பனையான ஒரு உலகத்திற்கு அழைத்துச் செல்கின்றோம், அது பிள்ளைகளின் எதிர்காலத்தை நாசம் பண்ணிவிடுகின்றன.
அவர்களின் திறமைகள் மறைக்கப்பட்டு ,பொய்யான ஒரு வழிகாட்டளை காட்டுகின்றோம்,
அது பிள்ளைகளின் திறமையை அடியோடு அழிக்கின்ற ஒரு நாசகார வேலை என்று நாம் சிந்திப்பதில்லை
ஆகவே பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு ,அவர்களின் திறமை எதுவோ அதன்படி ஊக்கத்தை கொடுங்கள்.சிறு வயதிலேயே வாசிப்புப் பழக்கம்,மற்றும் எழுதும் திறமையை ஊக்கப் படுத்துங்கள்.அது எதிகாலத்தில் மிகப் பெரும் மாற்றங்களை உருவாக்கும்.
ஆகவே இவற்றை கருத்திற்கொன்டு பிள்ளைகள் தங்கள் திறமையை மேலும் வளர்த்துக்கொள்ள கல்ஹின்னை டுடே வழியமைத்துக் கொடுக்கும் என்பதை மகிழ்வுடன் தெரிவிக்கின்றோம்.
பிள்ளைகள் தங்கள் ஆக்கங்களை அனுப்பலாம் ;கதைகள்,கட்டுரைகள்,ஓவியங்கள் ,மற்றும் பயனுள்ள தகவல்களை பாடசாலை அதிபரின் அனுமதியுடன் பின்வரும் whatsapp இலக்கத்திற்கு அனுப்பவும்
CLICK HEREhttp://wa.me/+94777882792
ஆக்கங்களை நமது இணையதள பத்திரிகையான Galhinna today"யில் பதிவிட எண்ணியுள்ளோம்.
Tags:
சிறுவர் உலகம்