கல்ஹின்னை அல்-மனார் தேசிய பாடசாலைக்கு புதிய அதிபர் நியமனம்

கல்ஹின்னை அல்-மனார் தேசிய பாடசாலைக்கு புதிய அதிபர் நியமனம்

 மாஷா-அல்லாஹ்!

"ஒற்றுமையே முன்னேற்றதிற்கு மிகச் சிறந்த வழி."என்கின்ற நோக்கில் ஆரம்பிக்கப் பட்ட கல்ஹின்னை ஒன்றியம் இன்று ஊருக்கு பல வகையிலும் பயன்படக்கூடிய சேவைகளை செய்கின்றார்கள்.

அதிலும் முக்கியமாக பாடசாலை .

கவனிப்பாரற்றுக்கிடந்த பாடசாலையை மீண்டும் புத்துயிர்பெற கடும் முயற்சியில் இறங்கியிருக்கும் க்ல்ஹின்னை ஒன்றியத்தின் தலைவர் அல்ஹாஜ் ஜிப்ரி ஹாஜியார் அவர்களுக்கும் ,ஒன்றியத்தின் அங்கத்தவர்களுக்கும் கல்ஹின்னை மக்கள் சார்பில் நன்றியை தெரிவிக்கின்றோம் .

கடந்த   12-08-2018,யில் கல்ஹின்னையில் அங்கும்,இங்குமாக தும்பு, துரும்புகளாக பிரிந்திருந்த எல்லோரையும் ஓன்று சேர்த்து ஒற்றுமையின் கயிற்றைப்  பற்றிப் பிடித்துக் கொள்வோம் என்கின்ற எண்ணப்பாடுகளுடன். ஆரம்பித்து இன்று கல்ஹின்னை மக்களின் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது ஒன்றியம்.அதற்கு பக்க பலமாக இருக்கின்ற பள்ளி நிர்வாகமும், GWA போன்ற அமைப்புக்களும் மிகவும் ஆர்வத்துடன் கல்ஹின்னைக்கு செய்கின்ற சேவைகளையிட்டு நாம் பெருமைப்படவேண்டும்.

குறிப்பாக கல்ஹின்னை அல்-மனார் தேசிய பாடசாலையின் சிற்றுண்டிச்சாலை பற்றாக்குறை,நெடுக்காலமாக இருந்து வந்தது.மாணவர்களுக்கு மிகவும் அசெவ்கரியமாய் இருந்த சிற்றுண்டிசாலையை அழகிய முறையில் கட்டிகொடுத்தது  கல்ஹின்னை ஒன்றியத்தின் தலைவர் .

இன்று மாணவர்களுக்கு மிகவும்  பயனுள்ளதாய் இருக்கின்றது.

அடுத்தது அதிபர் பற்றாக்குறை .

கடந்த சில வருடங்களாக கல்ஹின்னை அல்-மனார் பாடசாலைக்கு நிலையான அதிபர் இல்லாமல்  இருந்து வந்தது. 

அந்த  பிரச்சினையும் முன்னின்று தீர்த்து வைத்தது கல்ஹின்னை ஒன்றியம் .

பாடசாலை அதிபர் விடயத்தில் அல்ஹாஜ் முஸ்லிம் சலாஹிதீன் அவர்களின்  பங்கு மகத்தானது.

ஒன்றியத்தினதும் ,முஸ்லிம் ஹாஜியாரின் முயற்சியாலும் ,பாடசாலை SDCயின் முயற்சியாலும் நேற்று  (21-10-2022) கல்ஹின்னை அல்-மனார் தேசியப்பாடசாலைக்கு புதிய அதிபர் வருகைதந்த நாளாகும்.

நீண்டகால இடைவெளிக்குப் பின் கல்ஹின்னை ஒன்றியத்தின் தலைவர் அவர்களின் பாரிய முயற்சியினால் கல்ஹின்னை அல்-மனார் தேசியப்பாடசாலைக்கு அதிபர் ஒருவர் வருகையின் நிமித்தம் நானும் 21-10-2022,ல் கல்ஹின்னை அல்-மனார் தேசியப்பாடசாலைக்கு சென்றிருந்த வேலையில் அங்கு நடந்த நிகழ்வுகளை அவதானித்து பார்த்தேன்.

உண்மையிலேயே உள்ளம் பூரிப்படைந்தது.

கல்ஹின்னை ஒன்றியத்தின் தலைவர் அவர்கள்.அதிபருக்குகென வடிவமைத்து வழங்கப்பட்ட விடுதியின் அழகிய தோற்றத்தைக் காணக்கூடியதாக இருந்தன.

1934,ல் ஆரம்பிக்கப்பட்ட கல்ஹின்னை அல்-மனார் பாடசாலையில் இப்படிப்பட்டதொறு சிற்றுண்டிச்சாலை இதற்கு முன்   இருந்தில்லை. 

கல்ஹின்னை அல்-மனார் தேசியப்பாடசாலைக்கு வருகை தந்திருக்கும் அதிபர் அவர்களே

நீங்கள் இங்கு வந்தது ஒரு சம்பவமாக இருந்தாலும், இன்ஷா-அல்லாஹ் நீங்கள் ஓய்வுபெற்று போகும் காலம் என்றொண்டு வந்தால் எமதூர் கல்ஹின்னையில்  உங்களின் சேவைக் காலம் ஒரு சரித்திரமாக இருக்கட்டும்.

Also read more கல்ஹின்னைபோஸ்ட்

சமீபாகாலமாக கல்ஹின்னை தேசியப்பாடசாலையில் நிர்வாகம் செய்யக்கூடிய குறைகள் நீடித்துக்கொண்டே சென்றன. காரணம் புரிந்துணர்வு, கல்வியின் மகத்துவம் பெற்றோர்கள் இடமும் இதற்கு  பொறுப்பானவர்களாக இருந்தவர்களிடம் கையாளும் விதம் மனம் தளர்ந்து நழுவிப்போனதே ஒரு காரணமாகும். 

இன்று ஒருசில ஆசிரியர்கள்  தங்களின் கடமைகளை ஏனோதானோ என்று செய்துவிட்டுப்போகின்ற பரிதாபம் கல்ஹின்னை பாடசாலையிலும் இருக்கின்றது.இவர்கள் பாடசாலைக்கு செய்கின்ற சேவைகள் மிகவும் குறைவு. 

ஆசிரியர்கள், மாணவர்களிடம் பெற்றோரைப் போன்று நடந்துகொள்ளவேண்டும்.பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பற்றி பெற்றோர்கள் சிந்திப்பதைப்போன்று ஆசிரியர்களும்  சிந்தித்து செயல்படவேண்டும் .

கல்ஹின்னை அல்மனார் பாடசாலைக்கு "மாமா"ஹனிபா என்ற ஒருஅதிபர் இருந்தார்.கல்ஹின்னை சரித்திரத்தில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய ஒரு பெயர் அது.

அவருடைய காலத்தில் மத்திய மாகாணத்தில் ,அனைத்துத்துறைகளிலும் கல்ஹின்னை அல்-மனார் பாடசாலை முதலிடம் வகித்தது.

விளையாட்டு ,கல்வி,இலக்கியம் போன்ற துறைகளில் மாணவர்கள் மிகவும் திறமைசாளிகளாயிருந்தனர்.

அதிபர் மர்ஹூம் மாமா ஹனிபா அவர்களின் காலத்தில் அவருக்காக மாணவர்கள் எதையும் செய்யத் தயாராயிருந்தார்கள். 

மாணவர்களிடம் ஒரு தகப்பனைப்போன்று அன்பு காட்டுவார் .அதேநேரம் வழிதவறும் மாணவர்களை தண்டிக்கவும் செய்வார். தவறு செய்கின்ற மாணவர்களின் பெற்றோர்களிடம்  தனிப்பட்ட முறையில் மாணவர்களின் குறை நிறைகளைப் பற்றி சொல்லுவார்.

அதுமட்டுமன்றி பள்ளி நிர்வாகத்திடம் மிகவும் நெருக்கமான உறவைப்பேணி வந்தார். .அதன்படி வெள்ளிக்கிழமைகளில் தொழுகைக்காக வரும் மாணவர்களை கண்காணிக்க விஷேட மாணவர்குழு ஒன்று அமைக்கப் பட்டது.

பள்ளிக்குள் அரட்டை அடிக்கும் மாணவர்கள்,மற்றும் தொழுகை முடிந்தவுடன் உடனே வெளியில் போகும் மாணவர்கள்  பெயர்களை எழுதி அதிபரிடம் கொடுப்பது அந்த மாணவர் குழுவின் வேலை . 

இப்படி பல பலவழிகளிலும் ஊரோடு இணைந்து செயல்பட்டதினால் அவர்ஒரு  சரித்திர நாயகனாய் கொண்டாடுகின்றோம்,

பாடசாலை மைதானத்தை புனரமைக்க வேண்டும் என்ற ஆசை அவருக்கு இருந்தது .ஆனால் இன்றுபோல் அன்று வசதிவாய்ப்புக்கள் மிகவும் குறைவு, ஆனால் இதைப் புரிந்துகொண்ட அன்றைய மாணவர்கள் பாடசாலை விடுமுறை நாட்களில் தாங்களாகவே முன்வந்து அந்த மைதானத்தை வெட்டினார்கள்.

மாணவர்களின் உழைப்புக்கு உறுதுணையாக இருந்த அந்த மாமனிதர் இரவு பகல் பாராது பாடாசாளைக்காகவே உழைத்து விளையாட்டு மைதானத்தை இன்றுள்ள நிலைக்காவது தரம் உயர்த்தியவர் என்ற பெருமை அவருக்குத்தான் 

அவருடைய காலத்தில் அவருக்கு உறுதுணையாக ஆசிரியர்களும் இருந்தது அவருக்கு மிகப்பெரும் பலமாயிருந்தது.

அதனால் கல்வியிலும் ,விளையாட்டிலும் எழுத்துத் துறையிலும் கல்ஹின்னை அல்-மனார் பாடசாலை மிகச்சிறந்த பாடசாலையாக இருந்தது.

ஆனால் அந்த நிலை இன்று இல்லை .

வசதிகள் இருந்தும் முன்னேற்றமில்லாத நிலை .

கல்வி விளையாட்டு அனைத்தும் அழிந்துபோகின்ற நிலையில் இருக்கின்றது.

வாசிப்புத் திறன் மாணவர்களிடம் மிகக் குறைவு .

அது மட்டுமா ?ஆயிரக் கணக்கில் படித்த மாணவர்கள் இன்று வெறும் 500க்குக் குறைவாக இருப்பதாக கேள்விப்பட்டு மிகவும் கவலையாக இருந்தது.

இவற்றைப்பற்றி புதிய அதிபர் சிந்தித்து செயல்படுவார் என்று நினைக்கின்றேன்.

M.M.பாரூக் (WC)
கல்ஹின்னை


 


Post a Comment

Previous Post Next Post