(AL-MANAR GROUND DEVELOPMENT)
கல்ஹின்னை அல்-மனார் தேசிய பாடசாலையின் விளையாட்டு மைதானம் புனரமைப்பு சம்பந்தமாக கடந்த ஒரு வாரகாலம் தொடர்ச்சியாக (AL-MANAR GROUND DEVELOPMENT) என்கின்ற whatsApp ஊடாக ஆலோசனைகள் பரிமாறிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் 07,ம் திகதி அக்டோபர் மாதம் 2022,ல் நள்ளிரவு வேலையில் கல்ஹின்னை பொதுஜன பெரமுன கட்சியின் அமைப்பாளர் ஜனாப் ரிஸான் சாலி அவர்கள் கல்ஹின்னை மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஒரு விடயத்தை வெளிப்படுத்தினார்.
ஜனாப் ரிஸான் சாலி அவர்களை உண்மையிலேயே , நாம் அனைவரும் பாராட்ட வேண்டும்..
கல்ஹின்னை அல்மனார் பாடசாலை விளையாட்டு மைதானத்தை புனரமைப்பதற்காக இரண்டு லட்ச ரூபாய் தருவதாக whatsapp குழுமத்தில் உறுதியளித்துள்ளார்.
தைரியமாகவும் உறுதியாகவும் கல்ஹின்னை மக்களுக்கு வாக்குறுதியளித்துள்ளதை நாம் பாராட்டாமல் இருக்க முடியாது.
கல்ஹின்னையில் கடந்த உள்ளூராட்சி தேர்தலின்போது பொதுஜன பெரமுன கட்சி சார்பாக பூஜாப்பிட்டிய பிரதேசத்தில் போட்டியிட்டு ஊர் மக்களினால் அவர் புறக்கணிக்கப்பட்ட போதும் கூட மக்களுக்காக நான், ஊருக்காக நான் என்கின்ற ஒரு மக்கள் சேவகன் ஜனாப் ரிஸான் சாலி அவர்கள்
நெல்லில் பதிர் இருந்தாலும் மனிதரில் இல்லை என்பதற்கு அடையாளம் இவராகும்.
(AL-MANAR GROUND DEVELOPMENT) இந்த குழுமத்தில் தொடர்ந்து ஒருவாரகாலம் எத்தனையோ பேர்கள் ஆலோசனை மற்றும் அபிப்பிராயம் சொல்லிக்கொண்டு இருந்த போதும்கூட , இன்று வரைக்கும் மைதான அபிவிருத்திக்காக இவ்வளவு பணம் தருகின்றேன் என்று ஒருவரும் உறுதியளிக்கவில்லை .
ஆனால் ஜனாப் ரிஸான் சாலி அவர்கள் அதில் முதலிடத்தில் பெருமைதேடிக்கொண்டார்.
இப்படிப்பட்ட ஒரு மக்கள் பிரதிநிதிதான் ஊருக்குத் தேவை.
ஜனாப் ரிஸான் சாலி அவர்கள் கல்ஹின்னை அல்-மனார் தேசியப்பாடசாலையில் கல்வி பயிளவும் இல்லை , கல்ஹின்னையில் பிறக்கவுமில்லை இருந்தபோதுகூட முதன்முதலாக இரண்டு இலட்சம் பணமாகத் தருகிறேன் என்று வாய்திறந்தது ஜனாப் ரிஸான் சாலி அவர்களே.
சமூகப்பற்றே அவரின் இலக்காகும் வாழ்த்துவோம், அவருடன் கைகோர்த்துக் கொள்வோம் கல்ஹின்னையின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு.ஒன்றாய் செயல்படுவோம்.
விளையாட்டு மைதான புனரமைப்பு செய்தியை நாம் முதன் முதலில் வெளியிட்டபோது இப்படிப்பட்ட நல்ல உள்ளம் படைத்தவர்களின் ஆதரவு கிடைக்கும் என்று நாம் நினைக்கவில்லை.
எப்படியோ,அனைவரும் ஒற்றுமையாக இவ்விடயத்தில் கவனம் செலுத்துவது கல்ஹின்னை மக்கள் அனைவரினதும் கட்டாய கடமையாகும்.
M.M.பாரூக் (WC)
கல்ஹின்னை.
Tags:
கல்ஹின்னைபோஸ்ட்