தடிமல் இருமல் என்பது பெரியோர் சிறியோர் எவருக்கும் ஏற்படக் கூடியது. இவை சிலவேளை மருந்துகள் இன்றியே சுகமாகவும் கூடும். அதே நேரம் சுகமடையாது நாட்பட்ட தொந்தரவாக மாறவும் கூடும்.
அவ்வாறு ஏற்படக் காரணமாவது : முறையற்ற சுகாதார பழக்க வழக்கங்கள், இரசாயனச் சேர்மான உணவுகள் பானங்கள் , வைத்திய ஆலோசனை இல்லாத மருந்துப் பாவனைகள், அல்லது தெரிந்த இடமெல்லாம் ஓடி ஓடி செய்யும் மித மிஞ்சிய சிகிக்சைகள் என்பவற்றை குறிப்பிடலாம்.
விசேடமாக குழந்தைகள் சிறுவர்கள் விடயத்தில் வைத்திய ஆலோசனை இன்றி கை வைத்தியங்களோ அல்லது பாமசி மருந்துகளையோ செய்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டாம். அதுபோலவே ஹேர்பல் என்று மூலிகை சார்பான மருந்துகளையும் ஆயுர்வேத வைத்தியர்கள் அனுமதி இன்றி கொடுக்க வேண்டாம். அங்கு போத்தல் படத்தில் மூலிகைகள் இருக்கும். மருந்துத் திரவத்தில் அதிக இரசாயனங்களே இருக்கும். இவற்றை எல்லாம் மூலிகை மருந்து என்று கூறக் கடினமாகவே இருக்கும். அத்துடன் எந்தப் பானிமருந்து ஆனாலும் அதன் நம்பகத் தன்மை பற்றி வைத்தியர்களுக்குத் தான் தெரியும். நம்பகத் தன்மை அற்ற மருந்துகளிள் அடங்கும் நிறமூட்டிகள், சுவையூட்டிகள், கெடாமல் பாதுகாப்பன, சீனி என்பன பாதிப்புகளை ஏற்படுத்தும். மூளை, நரம்புத் தொகுதி, நோயெதிர்ப்பு மண்டலம் என்பன பாதிப்படையலாம். பிழையாக அல்லது அதிகப்படியாக மருந்துகளை எடுக்கும் போது பக்கவிளைவுகளும் ஏற்படலாம்.
நீங்கள் ஆங்கில மருந்துகள் பாவினைக்கு எடுப்பவராக இருந்தால், ஒரு தகுதிவாய்ந்த MBBS அல்லது விசேட வைத்தியரை, குடும்ப வைத்தியராக வைத்திருங்கள். அவரால் முடியாது என்றால் அவருடைய கடிதத்துடன் அவர் கூறும் வைத்தியரை நாடுங்கள். இதுவே பொறுப்புக் கூறும் பாதுகாப்பான வழியாகும். நேரடியாக நீங்கள் தனியார் வைத்தியசாலைகளுக்கோ அல்லது விசேட மருத்துவர்களிடமோ போகும் போது வீணான செலவுகளை செய்யவோ அல்லது தேவை இல்லாத மருந்துகளைக் கூட பெற்றுக்கொள்ள வேண்டிய நிலைமையோ ஏற்படலாம்.
மூலிகை மருந்துகள் பெற விரும்பினால் தகுதி வாய்ந்த (BUMS/DAMS /DSMS, DIMS) தகுதிகள் இருப்பவர்களுக்கு முன்னுரிமை கொடுங்கள். இவர்களுக்கு போதிய ஆங்கில மருத்துவ அறிவும் காணப்படும். உங்கள் மருத்துவ ரிப்போட் களையும் இவர்களுக்கு காட்டுங்கள். இது துல்லியமான சிகிக்சைக்கு உதவும்.
சிறுவர்களில் அடிக்கடி வரும் சாதாரண தடிமல் மூக்கைடைப்பு போன்ற நிலைமைகளில் பாவிக்கக் கூடிய, ஆரம்பத்திலேயே சுகப்படுத்தி விடக் கூடிய,பக்கவிளைவுகள் அற்ற எண்ணை வகைகள் கூட காணப்படுகின்றன.
சிறுவர்கள் குழந்தைகளுக்கு செய்யப்படும் சலிதொடர்பான நோய்களுக்கு அரைகுறை வைத்தியம் செய்வது நியூமோனியாவைக்கூட தோற்றுவிக்கலாம்.
Dr. Ajmal hassan
Tags:
ஆரோக்கியம்