அவர் எழுதிய கவிதையோடும். முன்னைய இலக்கியங்களுக்கு அவர் வழங்கியுள்ள பொழிப்புரையோடும் நோக்கும் போது எம்.ஸி.எம்.சுபைர் அவர்களை "கவிமணி"யா கக் காணுகிறோம்.
மக்களின் வாழ்வியலுக்கும். கலாசார பண்பாடுகளுக்கும் அவர் எழுத்தாலும் பேச் சாலும் வடிவம் கொடுத்துள்ளதை நோக்கும் போது அவரை 'இலக்கியமணி"யாகத் தரிசிக்கிறோம்.
பழங்கால இலக்கிய மரபுகளை மக்களது வாழ்க்கையோடு தொடர்புபடுத்தி ஆராய்வது வரலாற்றாய்வில் ஒரு பிரிவாகும். காலத்துக்குக் காலம் எழுதப்பட்ட கவிதைகள், உரைநடை இலக்கியங்களின் வரலாறுகளைத் தேடிச் சேகரித்து அவற்றின் உள்ளார்ந்த தத்துவங்களை விளக்கும் தகுதியை பொதுப்படையான வரலாற்று ஆசிரியர்கள் கொண்டிருப்பதில்லை. அவற்றிற்கு வழங்கும் மதிப்பீடுகளும் பதவுரைகளும் பிரதானமானவையாகும்.
ஒரு கவிமணியினால், இலக்கியமணியினால் மாத்திரமே இது போன்றதொரு ஆய்வை திறம்படச் செய்யமுடியும் என்ற வரையறையை வகுப்பவையாக எம். ஸி. எம். ஸுபைர் அவர்கள் எழுதிய வரலாற்று வடிவங்களை நான் காணுகின்றேன்.
முஸ்லிம்களின் கலை, இலக்கிய பாரம்பரிய வரலாறுகள் தொடர்பாக எம். ஸி. எம். அவர்கள் ஆற்றிய பணி கிஞ்சிதமே யானாலும் அதனை தெளிவுறச் செய்து அவர் முத்திரை பதித்து விட்டார் எனக் கூறலாம்.
தேசிய மட்டத்திலான வெளியீடுகளில், கவிமணியின் ஆக்கங்கள் கவிதைகளாக பரிணமிக்காது வரலாற்றாய்வு வடிவங்களிலேயே வெளிவந்துள்ளன. இஸ்லாமிய வரலாற்றுத் துறை வளர வேண்டும் என்ற ஆதங்கம் அவரது உள்ளத்தில் இருந்து வந்தமையை அவை எடுத்துக் காட்டுகின்றன.
கலை கலாச்சாரம்: 1994ம் ஆண்டில்' தேசிய ரீதியினாலான முஸ்லிம் கலாசார விருது வழங்கல் தொடர்பாக வெளியிடப்பட்ட மலரில் எம். ஸி. எம். ஸுபைர் அவர்களின் "மத்திய மாகாண முஸ்லிம்களின் கலை கலாசாரப் பணிகள்" என்னும் ஆய்வுத் கட்டுரை வெளிவந்தது. அதில், மலையக முஸ்லிம்களது ஆரம்ப கால வரலாற்றுத் தரவுகளை அவர் தந்ததோடு, அவருக்கே தனித்துவமான இலக்கியப் பார்வையில், முஸ்லிம்களது ஆசார, கலாசார வாழ்க்கையின் வரலாற்று அம்சங்களை வெளிக் கொணர்ந்துள்ளார். அதில் சில உபதலைப்புகள் வழியும் மொழி. யும், இலக்கிய கலாசார வளர்ச்சி, இலக்கிய முயற்சி என்பதாக, ஓர் இலக்கியவாதியின் ஆய்வாக அக்கட்டுரை அமைந்துள்ளது. அது மத்திய மாகாண முஸ்லிம்களின் கலை இலக்கியங்கள் பற்றிய ஓர் அருமையான ஆய்வாகும்.
1996ம் ஆண்டில் தேசிய மீலாத விழாவில் வெளிவந்த "கண்டி மாவட்ட முஸ்லிம்கள்" என்ற நூலில் இலக்கியம் என்னும் மகுடத்தில் கண்டி மாவட்டத்தின் இஸ்லாமிய இலக்கிய பாரம் பரியங்களைப் பற்றி ஓர் ஆய்வை எம். ஸி. எம். ஸுபைர் அவர்கள் செய்திருந்தார். அக்குறணையைச் சேர்ந்த கசாவத்தை ஆலிம் (வலியுல்லாஹ்) அவர்களது "தீன்மாலை" (1878) எழுதப்பட்ட காலத்தில் இருந்து, இக்காலத்து இலக்கிய முயற்சிகள் வரை அவரது ஆய்வு வியாபித்திருந்தது. இதனை மிகவும் சுவைபட அமைந்த பாரபட்சமில்லாத ஆய்வெனத் துணிந்து கூறலாம். இதிலும் ஏராளமான விபரங்களை அவர் சேகரித்து மதிப்பீடு செய்துள்ளார். இலக்கியத்திற்காகப் பங்களிப்புச் செய்த அனேகரைப் பற்றி அவர் இதில் குறிப்பிடுகின்றார். அவ்வொவ் வொருவரைப் பற்றியும், எம்.ஸி.எம். ஸுபைர் அவர்கள் ஏதோ ஒரு வகையில் அறிந்து வைத்திருந்தார் என்ற சமிக்ஞை இக்கட்டுரை யில் இருந்து வெளியாகின்றது.
சமூகத்தில் சிறப்புற்று விளங்கியவர்கள் பற்றிய விபரங்களை எழுதும் போது அவர்கள் வாழ்ந்த தலம், காலம், சூழல் போன்ற வரலாற்றுப் பிண்ணனிகளும் வெளிவந்து விடுகின்றன. இது போன்ற தனி மனித வரலாறுகள் அந்த சமூகத்தின் வரலாற்றைக் கட்டி எழுப்ப ஆதாரமாகி விடுகின்றன.
எம்.ஸி.எம்.ஸுபைர் அவர்கள் அறிந்து வைத்திருந்த தனிமனித வரலாறுகளுக்கு எழுத்துருவம் கொடுக்க, அவரது ஆயுள் அவருக்கு சந்தர்ப்பமளிக்கவில்லை. ஏனெனில், அவரது ஆய்வுக் கட்டுரைகளில் இடம்பிடித்திருந்த இஸ்லாமிய இலக் கியத்திற்கு பங்களிப்பு செய்தவர்கள் பற்றி, அவர் காலத்துக்குக் காலம் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு வந்துள்ளார். அதுவும் ஒரு கவிமணியின்" இலக்கியமணியின் பார்வையில்
பொழிப்புரை: அருள்வாக்கி அப்துல் காதிறுப் புலவரின் "அடைக்கல் மாலை"க்கு பொழிப்புரை வழங்கியும், ஷெய்கு பாவா
ஷெய்கு சுலைமானுல் காதிரி அவர்களது "பத்ர் மாலைக்கு தமிழ் வடிவம் கொடுத்தும், வாசகர்களுக்கு அவர் வழங்கியுள்ளமை அதற்கு எடுத்துக்காட்டுகளாகும். இவர்களைப் பற்றி அந்நூல் களில் வரலாற்றுக் குறிப்புகளையும் எழுத அவர் தவறவில்லை.
5.3.1989 தினகரன் (வாரமஞ்சரி)யில் "பத்ர்மாலை" வெளியி ட்ட புரக்டர் அல்ஹாஜ் ஏ. ஓ. எம். ஹுசைன் அவர்களைப் பற்றி வரலாற்றுக் குறிப்புகளைத் தந்ததன் மூலம், கல்ஹின்னை எனும். அவர் வாழ்ந்த ஊரைப் பற்றிய சரித்திர சான்றுகளை தர முயன்றுள்ளார். அதே போல், 'குறிஞ்சிமலர்" எனும் மலரில் "எழிலாடும் பெரிய கல் தந்த இலக்கியச் செய்திகள்" என்பதாக தமது ஊரின் சூழலை. பண்டையத் தமிழ் இலக்கியத்தில் மூழ்வி எடுத்த தகவல்களுடன் சுவைபடப் படைத்து, தமிழிற்கு அவர் செய்த அவர் ஊர் செய்த தொண்டினை நளினமாக வரலாற்று வடிவமாக்கியுள்ளார்.
மர்ஹும் எம்.ஸி.எம்.ஸுபைர் அவர்கள் ஓர் இலக்கிய வர லாற்று ஆய்வாளர் என்ற தனித்துவத்தில், நவீன கால எழுத் தாளர்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்துள்ளார் என்பதற்கு, அவர் வாழ்ந்த இடம் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு அதற்குப் பணியாற்றி இலக்கியங்கள் படைத்திருப்பது, ஒரு சான்றாகும்.
Tags:
“ஈழத்துக் கவிமணி" சுபைர்