
கிரிக்கெட் விளையாடுவதற்கு கல்ஹின்னையில் மிகப் பெரிய மைதானமோ அல்லது வசதி வாய்ப்புக்களோ இல்லையென்றாலும் , இருக்கின்ற மிகக் குறைவான வசதிகளை வைத்துக்கொண்டு மிகப் பெரும் சாதனைகள் செய்ய முயற்சிக்கின்றவர்கள் கல்ஹின்னை இளைஞர்கள்..
திறமையை வளர்த்துக்கொள்ள ஒரு சிறு இடைவெளி கிடைத்தாலும் போதும் .அதை பக்குவமாய் நாம் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்பதற்கிணங்க கல்ஹின்னை இளைஞர்கள் அன்றும் இன்றும் அயராது போராடிகொண்டிருப்பவர்கள். .
அப்படி வளர்ந்தவர்தான் முஹம்மது ரஸ்மி ஹபீல் .

மத்திய மாகாணத்தில், ஹாரிஸ்பத்துவ தொகுதியில், கல்ஹின்னை கிராமத்தில், பள்ளியகொட்டுவ தொகுதியில், மூசாமுனை என்றழைக்கப்படும் பகுதியில் மர்ஹும் மஜீத் லெப்பை அவர்களின் குடும்ப வாரிசு .
மர்ஹும் மஜீத் லெப்பை அவர்களின் ஆண் வாரிசுகளில் மூத்தவரான ஹபீல் மஜீத் அவர்களின் இரண்டாவது மகன்தான் முஹம்மத் ரஸ்மி ஹபீல் அவர்கள்,
இவர் ஆரம்பக் கல்வியை தற்போதைய கல்ஹின்னை அல்-மனார் தேசியப்பாடசாலையில் கற்றார்.

கத்தாரில் நடக்கின்ற அனைத்து சுற்றுப்போட்டிகளிலும் மிக அற்புதமாக விளையாடிய ரஸ்மி அவர்களுக்கு கத்தார் தேசிய அணியில் விளையாட சந்தர்ப்பங்கள் நிறையவே உண்டு .தற்போது கத்தார் தேசிய அணியின் பயிற்சி முகாமில் சேர்ந்து பயிற்சி பெரும் வாய்ப்புக் கிடைத்துள்ளது.
தேசிய அணியின் பயிற்சி முகாமில் பயிற்சி பெற கிரிக்கெட் வீரர்களுக்கு இலகுவாகக் கிடைப்பதில்லை.ரஸ்மி ஹபீளின் சாதனைகள் மூலம் கிடைத்த வாய்ப்பு. .அது ரஸ்மி அவர்களின் உழைப்புக்குக் கிடைத்த வெற்றி.
இனி அடுத்த கட்டம் தேசிய அணியில் விளையாடுவது.
ஒவ்வொரு படிகளைத் தாண்டும்போதும் ஆழமான முத்திரை பதிக்கும் ரஸ்மி ஹபீளின் கனவு நிறைவேற வேண்டும்.
நிச்சயமாக அவருடைய கடின உழைப்பு அவருக்குக் கை கொடுக்கும்.
கல்ஹின்னையில் பிறந்து வளர்ந்த ஒரு ஒரு அற்புதமான கிரிக்கெட் வீரரின் கனவு நிறைவேற கல்ஹின்னை மக்கள் அனைவரும் பிராத்திப்போம் ,,,வாழ்த்துவோம் .
கல்ஹின்னை.