அந்த மாணவர்களுக்கு நன்றி பாராட்டும் முகமாக 24-10-2022,ல் அல்-மனார் தேசியப்பாடசாலை கேட்போர் கூடத்தில் பாடசாலை அதிபர் அவர்களின் தலைமையில் பாடசாலையின் அபிவிருத்தி சங்கத்தின் மேற்பார்வையில் கூட்டம் நடைப்பெற்றது.
இவ் வைபவத்தில் மத்திய மாகாண ஹாரிஸ்பத்துவ தொகுதியைச் சேர்ந்த கௌரவ குணதிலக்க ராஜபக்க்ஷ அவர்களும் முஷான் இன்டர்நெசனல் ஸ்தாபகர் அல்-ஹாஜ் M. முஸ்லிம் சலாஹுத்தீன் அவர்கள் பிரதம அதிதியாகவும், தொழிலதிபர் S.M.ஜிப்ரி ஹாஜியார்,
கல்ஹின்னை ஜாமிஅதுல் பத்தாஹ் அரபுக் கலாபீடத்தின் அதிபர்: அஷ்ஷைக் அல்ஹாபிழ் M.S.M.ரஸ்ஸான் (ஹஸனி) அவர்களும் பூஜாபிட்டிய பிரதேச சபையின் உறுப்பினர் ஜனாப் உவைஸ் ரசான்
மற்றும் பொதுஜன பெரமுன கட்சியின் கல்ஹின்னைப் பிரதேச ஒருங்கிணைப்பாளர் ஜனாப் ரிசான் சாலி அவர்களும், முன்னை நாள் அல்-மனார் தேசியப்பாடசாலையின் அபிவிருத்தி சங்கத்தின் உறுப்பினர்களாக அல்-ஹாஜ் ரில்வான், ஜனாப் உவைஸ் ஜமால், ஜனாப் ஹஸ்ஸான் பரீத் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
அதனைத் தொடர்ந்து B-HALL கட்டிட புனரமைப்பு வேலைகள் ஆரம்பமாக கல்ஹின்னை ஜாமிஅதுல் பத்தாஹ் அரபுக் கலாபீடத்தின் அதிபர்: அஷ்ஷைக் அல்ஹாபிழ் M.S.M.ரஸ்ஸான் (ஹஸனி) அவர்களினால் கிராஅத் ஓதப்பட்டன அதனைத் தொடர்ந்து கல்ஹின்னை அல்-மனார் தேசியப்பாடசாலையின் பழைய (1998,ம் ஆண்டு )மாணவர் குழுவினர் ஆரம்பக்கட்ட வேலையாக கட்டிடத்தின் சேதமடைந்த இடத்தில் சீமெந்தினால் மெழுகி ஆரம்பித்து வைத்தனர்.
பழைய மாணவர்கள் ஒன்று சேர்ந்து பாடசாலையை புனர் நிர்மாணம் செய்ய முன் வந்துள்ளது மிகவும் பாராட்டப் படவேண்டிய ஒரு விடயம்.
பல ஆண்டுகள் புனரமைக்கப் படாமல் இருந்த பாடசாலையை புதுப்பிக்க முன் வந்துள்ள பழைய மாணவர்களுக்கும் இந்த பாரிய முயற்சியில் பங்குகொள்ளும் அனைவருக்கும் “கல்ஹின்ன டுடே” –யின் வாழ்த்துக்கள்.
கல்ஹின்னை.