டி20 உலக கோப்பையில் க்ரூப் 1லிருந்து நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளும், க்ரூப் 2லிருந்து இந்தியா, பாகிஸ்தான் அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.
இந்திய அணி ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறிவிட்ட நிலையில், இன்று மெல்பர்னில் நடந்த கடைசி சூப்பர் 12 சுற்றின் கடைசி போட்டியில் இந்திய அணி ஜிம்பாப்வேவை எதிர்கொண்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்த போட்டிக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டு ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்டார்.
இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), அக்ஸர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்.
ஜிம்பாப்வே அணி:
வெஸ்லி மாதவெர், கிரைக் எர்வின் (கேப்டன்), ரெஜிஸ் சகப்வா (விக்கெட் கீப்பர்), சீன் வில்லியம்ஸ், சிக்கந்தர் ராசா, டோனி முன்யோங்கா, ரியான் பர்ல், டெண்டாய் சத்தாரா, ரிச்சர்ட் நகர்வா, வெலிங்டன் மசகட்ஸா, ப்ளெஸ்ஸிங் முசாரபாணி.
187 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய ஜிம்பாப்வே அணி தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணியின் பின்வரிசை வீரர் ரியான் பர்ல் மட்டும் அதிரடியாக பேட்டிங் ஆடி 22 பந்தில் 35 ரன்கள் அடித்தார். மற்ற அனைத்து வீரர்களுமே சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் 17.2 ஓவரில் வெறும் 115 ரன்களுக்கு ஆல் அவுட்டானது ஜிம்பாப்வே அணி.
71 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, 8 புள்ளிகளுடன் க்ரூப் 2 புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. எனவே அரையிறுதியில் க்ரூப் 1ல் 2ம் இடத்தில் இருக்கும் இங்கிலாந்து அணியை வரும் 10ம் தேதி அடிலெய்டில் எதிர்கொள்கிறது. எனவே வரும் 9ம் தேதி சிட்னியில் நடக்கும் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்தும் பாகிஸ்தானும் மோதுகின்றன.
Tags:
விளையாட்டு