காட்டின் ராஜா என அழைக்கப்படும் சிங்கதின் அடையாளம் சக்தி, தைரியம் மற்றும் வலிமை. பிறக்கும்போதே மிகுந்த கவர்ச்சியுடணும், தலைமை குணத்துடணும் சிங்கம் பிறக்கிறது. இந்த விலங்கிலிருந்து நம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் பல உள்ளன.
இலக்குகள்:
சிங்கத்தின் குறிக்கோள் உயிர் வாழ்வது மட்டுமே. தனது காப்ஸ்(cabs), மாட்ஸ்(mates) மற்றும் பேக்(pack) உயிர் வாழ்வதக்கு எதையும் வேட்டையாடவும் சேதப்படுத்தவும் தயாராக இருக்கும். அவைகளின் இருப்பிடத்தை பாதுகாக்கவும், பெருமையை நிலை நாட்டவும் எதையும் செய்ய முடியும் என்ற உறுதியுடன் வாழ்ந்து வருகிறது காட்டின் ராஜா சிங்கம்.
எனவே, மனிதர்களாகிய நாமும் வாழ்க்கையில் ஒரு இலக்கை நிர்ணயித்து, அதை
அடையும் வரை அதை நோக்கி பயணம் செய்ய வேண்டும். இலக்குகள் பெரியதாக இருந்தாலும், சிறியதாக இருந்தாலும் அதை அடைவதே குறிக்கோளாக கொள்ள வேண்டும்.
விடா முயற்சி:
சிங்கம் தன்னை விட பெரிய விலங்குகளுடன் சண்டையிட்டு, தோற்று போனாலும், முயற்சியை கைவிடாமல் மீண்டும் தனது வேட்டையை தொடரும். இந்த அனைத்து முயற்சியும் சிங்கம் உயிர் வாழ்வதற்கும், அவைகளின் இருப்பிடத்தை பாத்துக் கொள்வதக்குமே செய்கிறது.
வாழ்கை ஒரு ரோலர் கோஸ்டர்(roller coaster). அதிக இடத்தில் நாம் தோல்வி அடைய வேண்டிய நிலைமை வரும். ஆனால் தோல்வி வாழ்க்கையின் ஒரு பகுதி என நினைத்து, வெற்றி அடையும் வரை நம் முயற்சி செய்து கொண்ட இருக்க வேண்டும்.
உத்திகள்:
சிங்கம் வேட்டையாடும் போது நல்ல உத்திகளை பயன்படுத்திகின்றன. அவைகள் பொறுமையாக காத்திருந்து, தங்களின் நேரம் வரும் போது, திருட்டுதனமாக வேட்டையாடுகின்றன. அதைப்போல் மனிதர்களாகிய நாமும், நம் குறிக்கோளை அடைய நல்ல உத்திகளை பயன்படுத்த வேண்டும். அதிக உழைப்பும், குறைந்த பேச்சும் வெற்றிக்கு வழிவகுக்கும். நம் வெற்றியை கண்டு உலகமே நம்மை திரும்பி பார்க்கும். நம் வார்த்தைகளை விட நம் செயல்கள் சத்தமாக பேசும்.
கூடி வாழ்தல்:
சிங்கம் தனது கூட்டத்துடன் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து வேட்டையாடி வெற்றி பெரும். எங்கு சென்றாலும் தனது கூட்டத்துடன் சேர்ந்தே சென்று வரும். அதுபோல், மனிதகளாகிய நாமும் பெரிய இலக்குகளை அடைய வலிமையுடன் செயல்பட வேண்டும். நம் உறவினர்கள், நண்பர்களுடன் கலந்தாலோசித்து, அவர்களின் உதவியுடன் நம் இலக்குகளை எளிதில் அடைய வேண்டும்.நாம் எடுக்கும் முடிவுகளை நன்கு யோசித்து பின்னரே எடுக்க வேண்டும்.
உறுதியுடன் செயல்படு:
சிங்கம் கர்ஜிக்கும் போது, அதை சுற்றியுள்ள உலகத்தை உலுக்குகிறது. ஒரு கர்ஜனை பல வேறுப்பட்ட நிகழ்வுகளை உருவாக்குகிறது. அதுபோல நமக்கு தேவையான இடங்களில் மட்டுமே சத்தமாக பேச வேண்டும். நாம் முடிவுகளை புத்திசாலி தனமாக எடுக்க வேண்டும். நாம் நம்மை எங்கு, எப்படி பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் தெரிந்திருக்க வேண்டும்.
நன்றி:நியூஸ்18