கண்மணி நபிகளார்(ஸல்)அவர்கள் மீது அளப்பெறும் நேசம் கொண்டிருந்தார் அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு.
ஒருமுறை அவர்கள் தம்மகனிடம் இனிப்புக்கஞ்சி தயார் செய்து பெருமானார்(ஸல்)அவர்களுக்கு கொடுத்து வருமாறு கூற, அவ்வாறே மகனும் கஞ்சி செய்து நபி(ஸல்)அவர்களிடம் கொண்டு வந்தார்.
அதனைக் கண்ட நபி(ஸல்)அவர்கள், அவரிடம்
"ஜாபிரே இதென்ன இறைச்சியா?" என்று கேட்டார்கள்.
"இல்லை யாரஸூலல்லாஹ்! இனிப்புக் கஞ்சி என் தந்தை என்னை இனிப்புக் கஞ்சி தயார் செய்து தங்களுக்கு கொடுக்குமாறு எனக்கு கூறினார்கள்" என்று ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்.
பின்னர் மகன் ஜாபிர் இவரிடம் வந்ததும் கொடுத்தீரா? அவர்கள் என்ன கூறினார்கள்? என்று நடந்ததை வினவினார்.
அப்பொழுது மகன்,
"நான் பெருமானாரிடம் சென்றதும் "இதென்ன இறைச்சியா? என்று வினவினார்கள்" என்று கூறியதும்,
நபி(ஸல்)அவர்கள் இறைச்சியை விரும்பலாம். அதனால் தான் அவ்வாறு கேட்டிருப்பார்கள் என்று அவர்களே ஊகித்து உடனே வீட்டிலிருந்த ஒரு ஆட்டை அறுத்து பொரித்து மீண்டும் அதை மகனிடம் கொடுத்து பெருமானாரிடம் சேர்க்குமாறு அனுப்பினார்கள்.
மகன் கொண்டு வந்து கொடுக்கவே அதனைப் பெற்றுக் கொண்ட நபி(ஸல்)அவர்கள், தான் கேட்காமலே தன்னுடைய விருப்பங்களுக்காக சிரமம் எடுத்து செயற்பட்ட அந்த ஸஹாபியின் நேசத்தை ஏற்று "அல்லாஹ் அவர்களுக்கு சிறந்த கூலியை வழங்குவானாக" என்று பிரார்த்தித்தார்கள்..
Tags:
இஸ்லாமிய சிந்தனை