சச்சின் மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கு கபில் தேவின் உருப்படியான அட்வைஸ்

சச்சின் மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கு கபில் தேவின் உருப்படியான அட்வைஸ்

சர்வதேச கிரிக்கெட்டின் ஆல்டைம் தலைசிறந்த வீரர்களில் ஒருவரும் லெஜண்ட் கிரிக்கெட்டருமான சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர். அர்ஜுனுக்கு கிரிக்கெட் ரத்தத்திலேயே இருந்ததால் அவரும் கிரிக்கெட்டர் ஆனார்.

ஃபாஸ்ட் பவுலரான அர்ஜுன் டெண்டுல்கருக்கு, லெஜண்ட் கிரிக்கெட்டரான சச்சினின் மகனாக இருப்பதே பெரிய அழுத்தமாக இருக்கிறது. சச்சின் டெண்டுல்கர் என்ற மிகப்பெரிய ஆளுமையுடன் ஒப்பிட்டே பார்க்கப்படுகிறார் அர்ஜுன் டெண்டுல்கர்.

ஐபிஎல் மெகா ஏலத்தில் அர்ஜுன் டெண்டுல்கரை ரூ.30 லட்சத்திற்கு எடுத்தது மும்பைஇந்தியன்ஸ் அணி. முந்தைய சீசனிலும் அர்ஜுன்  டெண்டுல்கர் மும்பை அணியில் இருந்தார். 2 சீசன்களாக மும்பை அணியில் அர்ஜுன் அங்கம் வகித்துவருகிறார்.

ஐபிஎல் 15வது சீசனில் திலக் வர்மா, ரித்திக் ஷோகீன், குமார் கார்த்திகேயா ஆகிய வீரர்கள் இந்த சீசனில் மும்பை அணியில் அறிமுகமானார்கள். இவர்களுக்கெல்லாம் வாய்ப்பளித்த மும்பை இந்தியன்ஸ் அணி, அர்ஜுன் டெண்டுல்கருக்கு மட்டும் வாய்ப்பளிக்கவில்லை. இந்த சீசனில் மும்பை அணி படுமோசமாக ஆடி தொடர் தோல்விகளை சந்தித்துவந்த நிலையில், அர்ஜுன் டெண்டுல்கருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற வலியுறுத்தல்கள் வலுத்தன.

ஆனாலும் கடைசிவரை அர்ஜுன் டெண்டுல்கருக்கு வாய்ப்பு அளிக்கப்படவேயில்லை. அர்ஜுன் டெண்டுல்கருக்கு, சச்சின் டெண்டுல்கர் என்ற பெரிய பிராண்டின் மகனாக இருப்பதே பெரும் அழுத்தமாக இருக்கும் நிலையில், இதுகுறித்து கபில் தேவ் பேசியுள்ளார்.

இதுகுறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், அர்ஜுன் டெண்டுல்கரை பற்றி ஏன் அனைவரும் பேசுகிறார்கள்? காரணம், அவர் சச்சின் டெண்டுல்கரின் மகன். அர்ஜுனை அவரது இயல்பான ஆட்டத்தை ஆட அனுமதிக்க வேண்டும். டெண்டுல்கரின் பெயரை அர்ஜுன் சுமப்பதில் நல்லதும் உள்ளது; பிரச்னையும் உள்ளது. டான் பிராட்மேனின் மகன், பிராட்மேன் என்ற பெயரின் அழுத்தத்தை தாங்கமுடியாமல் பிராட்மேன் என்ற பெயரை தனது பெயரிலிருந்து நீக்கியே விட்டார். 

அர்ஜுன் மீது அழுத்தம் போடாதீர்கள். அவர் சின்ன பையன். சச்சின் டெண்டுல்கரின் மகனான அவருக்கு நாமெல்லாம் சொல்வதற்கு எதுவுமே இல்லை. போய் மகிழ்ச்சியாக உனது ஆட்டத்தை ஆடு; யாருக்கும் எதையும் நிரூபிக்க தேவையில்லை என்பதுதான் எனது அறிவுரை. உனது(அர்ஜுன்) தந்தையின் அளவில் 50 சதவிகிதம் இருந்தால், அதுவே பெரிய விஷயம் தான் என்று கபில் தேவ் கூறியுள்ளார்.


 


Post a Comment

Previous Post Next Post