
கடந்த 17,வருடகாலம் தொடர்ச்சியாக கல்ஹின்னையில் ஜனஷா நலன்புரிச் சங்கம் மிகவும் உன்னதமான சேவையை செய்கின்றார்கள்.
காலம், நேரம் பார்க்காமல், வசதியானவர்கள், வசதியற்றவர்கள் என்றெல்லாம் பாராமல் மிகவும் பொறுப்புடனும்,கடமையுனர்வோடும் ஜனாசா சம்பந்தப்பட்ட பணிகளை செய்கின்றார்கள்.
ஜனஷாக்களை பாகுபாடற்ற முறையில்,முறைப்படி நல்லடக்கம் செய்வதில் மிகக் கவனமாக செயல் பட்டுக்கொண்டிருக்கும் கல்ஹின்னை ஜனஷா நலன்புரிச் சங்கத்தின் தலைவர் அல்-ஹாஜ் அமீன் அவர்களின் சேவையை பாராட்டுவோம் அல்ஹம்துலில்லாஹ்.
உண்மையிலேயே இன்றைய காலகட்டத்தில் பொதுப்பணிகள் என்பது எல்லோரிடமும் காணமுடியாத ஓர் விடயமாகும்.அதிலும் குறிப்பாக ஜனஷா நல்லடக்கம் செய்யும் விடயத்தில் மிகக்குறைந்த ஒரு சிலர்தான் இப்படிப்பட்ட சேவைகளை செய்வதற்கு முன்வருவார்கள்.

அந்தவகையில் கடந்த 17,வருடகாலம் தான் செய்யும் பொதுநல சேவையில் சலிப்பின்றி அல்-ஹாஜ் அமீன் அவர்களின் தலைமையின் கீழ் லாகிர் லாபீர், நஸ்ருல்லாஹ்,மற்றும் நவ்பர் நவ்சாத்(தற்போது வெளிநாட்டில் தொழில் புரிகின்றார்) போன்றவர்கள் இணைந்து இந்த மாபெரும் சேவையை அழகான முறையில் செய்துகொண்டிருப்பதை காண்கின்றோம் அல்ஹம்துலில்லாஹ்.

இவர்களின் கண்காணிப்பில் கடந்த 17,வருடகாலத்தில் சுமார் 850, க்கும் மேற்பட்ட ஜனஷாகள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
அத்தோடு மையவாடியை அழகிய முறையில் பராமரிக்க கல்ஹின்னை பெரிய ஜும்மாப் பள்ளிவாசல் நிர்வாகத்தையும் ஊரின் அரசியல் பிரமுகர்கள், ஊர் பொதுமக்கள் போன்றோர்களை அழைத்து மையவாடியை சிரமதானம் செய்து அழகுபடுத்திவைப்பார்கள்.
அதுமட்டுமன்றி தாங்கள் சிரமதானம் செய்துகொண்டிருக்கும் போது அங்கே அடையாளச்சின்னங்கள் தென்பட்டால் உடனே அது விடயமாக ஊரார்களைத் தொடர்புகொண்டு அவற்றைப் பாதுகாத்து பொதுமக்கள் பார்வைக்கு முன்வைப்பார்கள்.
இந்த மையவாடி 300, வருடங்கள் பழமையானது என்று ஊர்ப்பெரியவர்கள் தெரிவிக்கின்றார்கள்.
இன்றைய கல்ஹின்னை ஜனஷா நலன்புரிச் சங்கம் சுமார் 5, வருடகாலத்திற்கு முன் சிரமதானம் செய்யும் வேலையில், பொதுவாகவே ஜனஷா நல்லடக்கம் செய்யும் போது தலைப்பக்கம், கால்பக்கம் வைக்கும் மீசான் பலகையுடன் இணைத்து கல் வைப்பார்கள். அப்படி வைக்கப்பட்ட, பெரிய ஆலீம் அப்பா அவர்களின் கப்ரில் காணப்பட்ட கல்லும், இன்னுமொரு கல்லும் வளர்ந்திருபதைக் கண்ட இவர்கள் பாதுகாத்து ஒரு ஓரமாக வைத்துள்ளார்கள்.

இப்படிப் பல சேவைகளை தன்னலம் பாராது செய்கின்ற கல்ஹின்னை ஜனாஷா நலன்புரிச் சங்கத்தினருக்கு அல்லாஹ் மென்மேலும் பறக்கத் செய்வானாக.
இவர்களின் சேவைக்கு அல்லாஹ் போதுமானவன்.
M.M.பாரூக் (WC)
கல்ஹின்னை.
Tags:
கல்ஹின்னைபோஸ்ட்