T20 உலகக்கோப்பை பரிசுத்தொகை

T20 உலகக்கோப்பை பரிசுத்தொகை

உலகக்கோப்பையை வென்ற இங்கிலாந்து அணி 13.84 கோடியை பரிசாக வென்றுள்ளது

அவுஸ்திரேலியாவை விட அதிமாக இலங்கை அணி 1.85 கோடி பரிசுத்தொகையை பெறுகிறது

உலகக்கோப்பையை வென்ற இங்கிலாந்து அணி 13.84 கோடியும், தோல்வி கண்ட பாகிஸ்தான் அணி 7.40 கோடியும் பரிசாக பெறுகின்றன.

அவுஸ்திரேலியாவில் நடந்த டி20 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து அணி 13.84 கோடியை பரிசுத்தொகையாக பெறுகிறது. இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த பாகிஸ்தான் அணி 7.40 கோடியை பரிசுத்தொகையாக பெறுகிறது.

அரையிறுதியில் தோல்வியுற்ற இந்திய அணி 4.50 கோடியும், நியூசிலாந்து அணி 4.19 கோடியும் பரிசுத்தொகையாக பெறுகின்றன. நியூசிலாந்தை விட இந்திய அணி ஒரு போட்டியில் கூடுதலாக வெற்றியை பெற்றதால், அதிக தொகையை பெறுகிறது.

மேலும் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் தலா 1.85 கோடியும், அவுஸ்திரேலியா 1.53 கோடியும் பரிசுத்தொகையாக பெறுகின்றன.

டி20 உலகக்கோப்பையில் கோடிக்கணக்கில் பரிசுத்தொகை பெறும் அணிகள்:

இங்கிலாந்து - 13.84 கோடி

பாகிஸ்தான் - 7.40 கோடி

இந்தியா - 4.50 கோடி

நியூசிலாந்து - 4.19 கோடி

இலங்கை - 1.85 கோடி

நெதர்லாந்து - 1.85 கோடி

அவுஸ்திரேலியா - 1.53 கோடி

அயர்லாந்து - 1.53 கோடி

டி20 உலகக்கோப்பையில் லட்சக்கணக்கில் பரிசுத்தொகை பெறும் அணிகள்:

ஜிம்பாப்வே - 88.50 லட்சம்

மேற்கிந்திய தீவுகள் - 64.40 லட்சம்

ஐக்கிய அரபு அமீரகம் - 64.40 லட்சம்

ஸ்கொட்லாந்து - 64.40 லட்சம்

நமீபியா - 64.40 லட்சம்

ஆப்கானிஸ்தான் - 56.35 லட்சம்  


 


Post a Comment

Previous Post Next Post