இப்படியான சூழலிலும் இலங்கையில் போதை வியாபாரம் அமோகமாய் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன,
போதை மருந்து பாவனை முன்பைவிட கூடுதலாயிருக்கின்றது;
கொலை கொள்ளைகற்பழிபுக்கள் நாளும் பொழுதும் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன,
இவை அனைத்துக்கும் உறுதுணையாக செயல்படுவது போதை மருந்துகளின் பாவனை என்று ஆய்வாலர்களர்கள் கூறுகின்றார்கள்.
உண்மையும் அதுதான்
போதை ஒரு மனிதனை எந்த அளவிற்கு மாற்றுகின்றது என்பதற்கு ஒரு உதாரணம் சிறுமி ஆயிஷாவின் கொடூரக் கொலை..
இன்று இலங்கையில் சிறுவர் முதல் பெரியவர்கள்வரை இந்த போதை பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கின்றார்கள்.
பாடசாலைக்கு செல்லும் சிறுவர்களுக்கு இந்த போதைப் பழக்கத்தை அவர்களை அறியாமலேயே பழக்கத்திற்கு உள்ளாக்கி விடுகின்றார்கள் .
பெண்களும்இதற்கு விதி விலக்கல்ல.
நண்பர்களின் பார்டிகளுக்கு செல்லுகின்ற பெண்களும் சரி ஆண்களும் சரி இந்த போதைப் பழக்கத்திற்கு அடிமையாகின்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .
தனியாக பார்ட்டிகளுக்கு பிள்ளைகள் செல்வதை பெற்றோர்கள் தடுக்க வேண்டும். இன்றைய சூழ் நிலையில் பிள்ளைகள் தனியாக வெளியில் செல்வதால் கூடுதலான குற்றச் செயல்கள் நடப்பதற்கு காரணமாகின்றது.
அதுமட்டுமின்றி பாடசாலை விடுமுறை வந்தால் நண்பர்களோடு உல்லாசப் பயணம் போகின்ற பழக்கம் நம்மிடையே வேரூன்றியுள்ளது.
பெற்றோர்கள் இப்படியான உல்லாசப் பயணங்களுக்கு அனுமதி வழங்கும் போது நன்றாக சிந்தித்து ஒரு முடிவை எடுப்பது சாலச் சிறந்தது.
ஏனென்றால் பிள்ளைகள் கெட்டுப் போவதற்கு பெற்றோர்கள் கொடுக்கும் அளவுக்கு அதிகமான சுதந்திரமும் ஒரு காரணமாகின்றது.
உல்லாசப் பயணம் செல்லுகின்றவர்கள் முதலில் புகைப்பழக்கத்தில் ஆரம்பிப்பார்கள்.சொந்தம் பந்தம் ,ஊர் பெரியவர்கள் என்று எவரும் அருகில் இல்லாத ஒரு நிலையில் சுதந்திரமான சூழ்நிலையில் பல தவரான செயல்களைஅனுபவித்துப் பார்க்க வேண்டும் என்ற ஒரு எண்ணம் தோன்றுவது இயல்பு.
அதன் ஆரம்பக் கட்டம்தான் புகை பழக்கம்.பொதுவாக சர்வசாதாரணமாக கடைகளில் கிடைக்கக் கூடிய ஒரு உயிர்க்கொல்லிதான் சிகரெட்.அதன் ஆரம்பம் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும்போது போதை மருந்துகளை பாவித்துப் பார்க்கும் நிலை ஏற்படுகின்றது.
வீட்டில் ஒருவர் போதைவஸ்து பாவனையில் இருந்தால் போதும் ..அந்தக் குடும்பம் அசிங்கப் பட்டு அழிந்து போகும்.
உங்கள் பிள்ளைகளாய் இருந்தாலும் போதை மருந்துகள் பாவிக்கும் பழக்கம் இருந்தால் கண்டித்துப்பாருங்கள் ,கட்டுப்படவில்லை என்றால் காவல்துறைக்கு அறிவித்து விடுங்கள்,5வருடமோ 10வருடமோ சிறைவாசத்தை அனுபவித்துவிட்டு வரட்டும்.
அநேகமான பெண் பிள்ளைகளும் இந்த புகைப்பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பதை இன்று காணக் கூடியதாய் இருக்கின்றது,
அதை ஒரு நாகரீமான வளர்ச்சி என்று இன்றைய சில முற்போக்குவாதிகள் கருதுகின்றார்கள்,ஒருசில பெற்றோர்களும் அந்தக் கருத்துக்கு தலையாட்டுகின்றார்கள்.
பெண்பிள்ளைகளின் ஆடை விசயத்தில் பெற்றோர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் .கவர்ச்சியான உடைகளை தவிர்த்து பாதுகாப்பான உடைகளை அணியும்படி பிள்ளைகளுக்கு சிறு வயது முதலே சொல்லிக்கொடுக்க வேண்டும்.
இன்று உலகம் முழுவதும் நடக்கின்ற அனாச்சாரங்களுக்கு பெண்களின் ஆடைகளும் ஒரு முக்கிய காரனமாகியிருக்கின்றதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.
பிள்ளைகளை வைத்துக்கொண்டு சினிமாக்கள் ,தொலைகாட்சி நிகழ்சிகளை பார்ப்பதைவிட்டும் தவிர்த்துக்கொள்ளவும்.
தொலைக்காட்சியும் உலக அனாச்சாரங்களுக்கு ஒரு காரனமாயிருக்கின்றது.
ஒரு பெண் அந்தக் குடும்பத்தின் பொக்கிஷம்.அந்தப் பொக்கிஷத்தின் பெறுமதியை வார்த்தைகளால் விவரிக்கமுடியாது.அந்தப் பொக்கிஷத்தை பாதுகாத்து வைப்பது நம் ஒவ்வொருவரினதும் பொறுப்பு.
பெற்றோர்கள் மிகவும் விழிப்புடன் பிள்ளைகளின் செயற்பாட்டை கவனிக்கவேண்டும்.பிள்ளைகளின் நடத்தைகளில் ஏதாவது மாறுதல்கள் தென்பட்டால் உடனடியாக அதற்கான நடவடிக்கைகளில் இறங்கவேண்டும்,
இரவு நேரங்களில் நண்பர்களோடு வெளியில் அனுப்பவதை தவிர்த்துக்கொள்ளவேண்டும்.அதை ஆரம்பத்திலேயே தடுக்கவில்லை என்றால் எதிர்காலத்தில் அதுவே மிகப்பெரும் துன்பத்தை அந்தக் குடும்பத்திற்கு ஏற்படுத்தும்.
விடிய விடியமொபைலிலும் ,கம்பியூட்டரிலும் நேரத்தை வீனடிக்கின்றதை தடுக்க வேண்டும்,இன்று இளம் வயதினரின் மாற்றங்களுக்கு இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியும் ஒரு காரணமாயிருக்கின்றது.
அதில் கைத் தொலைபேசியும் கம்பியூட்டரும் முக்கிய பங்கை வகிக்கின்றன.
தொழில்நுட்பம் எந்த அளவுக்கு மனிதர்களின் இயல்பான வாழ்கையை சுருக்கியுள்ளதோ அதைவிட மோசமாக மனித இனத்தை அழித்துக்கொண்டிருக்கின்றது என்பதுதான் நிதர்சனமான உண்மை.
போதை மருந்துகளை தடைசெய்யும் சட்டங்களை அரசாங்கம் கடுமையானதாக்கவேண்டும்.அரபுநாடுகள் மற்றும் சிங்கப்பூர் போன்று கடுமையான தண்டனைகளை வித்க்கவேண்டும்.
போதை என்று வரும்போது மதுவும் ஒரு போதைதான்.மதுவையும் தடை செய்ய வேண்டும்,மதுவை மட்டும் அனுமதித்து பிற போதை மருந்துகளுக்கு தடை விதிப்பதால் எந்தப் பயனும் இல்லை.
மதுப் பழக்கத்தால் பல குடும்பங்கள் நடுத்தெருவில் இருப்பதைக் காணலாம்.
ஆகவே மொத்தமாக போதை தரும் அனைத்தையும் தடை செய்ய வேண்டும்.
அப்படி இல்லாத பட்சத்தில் நாடு மிகவும் மோசமான ,மனிதர்கள் வாழ முடியாத ஒரு நாடாக இலங்கை மாறும்
கல்ஹின்னை மாஸ்டர்