கலா சமையல் ;கோதுமை மரவள்ளி மோதகம்

கலா சமையல் ;கோதுமை மரவள்ளி மோதகம்

தேவையானவை
1- K. நன்றாக அவியக் கூடிய மரவள்ளிக் கிழங்கு
1- K. கோதுமை மா 
1- முழுத் தேங்காய்.
10- கறுப்பு மிளகு.
25-K.m. வறுத்து சுத்தம் செய்த பயறு.
50-K.m சக்கரை அல்லது வெல்லம் 
இனிப்பு அதிகம் விரும்புவோர் சீனி சேர்க்கலாம்.

செய் முறை
கிழங்கை சுத்தம் செய்து நன்றாக வேக வைத்து சூடாக இருக்கும் போதே அதன் வேரை எல்லாம் நீக்கி கூழ் போல் செய்து எடுக்கவும் சிறு துண்டு கட்டியும் இருக்காத வாறு பார்க்கவும் அதனுடன் சிறுதளவு உப்பு சேர்த்து கோதுமை மாவையும் சேர்த்து மோதகம் செய்யும் பதத்துக்கு பசைந்து வைக்கவும்  .

தேங்காப் பூ 
ஊறவிட்ட பாசிப் பயறு
சக்கரை சேர்த்து அடுப்பில் வைத்து நீரை சுண்ட விட்டு 
இறுதியாக மிளகை பொடி செய்து போட்டு சேர்த்து கிளறி ஆறவிடவும்.

பின்னர் மாவை மோதகம் செய்வது போல் தட்டி அதனுள்ளே அந்தக் கலவையை போட்டு உருண்டை வடிவில் எடுக்கவும் எடுக்கும் போது ஓட்டை வெடிப்பு இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்  ஒரு பாத்திரத்தில் நீரைக் கொதிக்க விடவும் அதில் சிறு அளவு உப்பு சேர்க்கவும் நீர் கொதிக்கும் போநே நேராக நீரின் உள்ளே போடவும்  ஒன்று போட்டு 2- வினாடிக்குப் பின் அடுத்தவை வீதம் போடவும் நிறையப் போடாமல் 10 பத்து உருண்டை போடலாம் 25 நிமிடத்துக்குப் பின் தான் கரண்டி போட்டு திருப்பி விடவும் உடனே போட்டால் ஒட்டி கரைந்து விடும் 40 நிமிடம் கழிச்சு எடுத்து ஆறவிட்டு சாப்பிட சுவையாக இருக்கும்( உடனே தயார் பண்ணக் கூடிய இனிப்பு )


 


Post a Comment

Previous Post Next Post