கல்ஹின்னையில் புகழுக்காக அலையும் போலிகள்

கல்ஹின்னையில் புகழுக்காக அலையும் போலிகள்


கல்ஹின்னையில்   ஒருசில whatsapp குழுமங்கள் தங்கள் இஷ்டத்திற்கு செய்திகளை பதிவிடுகின்றார்கள்.

போலியான செய்திகளை வெளியிடுவதற்கு என்றே ஒரு சிலர் கல்ஹின்னை whatsapp குழுமங்களில் உலாவுகின்றார்கள்.  

இப்படிப்பட்ட கீழ்த் தரமான செயலை நிறுத்துங்கள் 

அதாவது ,கல்ஹின்னையில் அமான வங்கியின் கிளை திறக்கின்றது சம்பந்தமாக சில செய்திகள் whatsapp குழுமங்களில் உலாவுகின்றன.
சம்பந்தமே இல்லாதவர்களுக்கு புகழாரம் சூட்டிக்கொண்டிருக்கின்றதை காணக் கூடியதாய் இருக்கின்றது.

இவர்களின் இந்த செயல்  மிகவும் கேவலமானது என்பதை  புரிந்துகொள்ள வேண்டும்.

சில நேரங்களில் வேறு எவராவது செய்கின்ற ,காரியங்களை நாங்கள்தான் செய்தோம் என்று பெயர்போடுகின்ற போலி நபர்களைப் போன்ற இழிவான செயல்களை செய்கின்றார்கள் ஒரு சிலர். 

கல்ஹின்னையில் பெரும்பாலானோர் வெளி நாடுகளில் தொழில் புரிவதால் கல்ஹின்னையில் ஒரு வங்கியை நிறுவும் யோசனையை ஊர் மக்கள் ஒன்றுகூடி 2018 ஆண்டு ஒன்றியத்தின் தலைவர் அல்ஹாஜ் ஜிப்ரியிடம் முன் வைத்தார்கள். .அதன்படி ஒன்றியத்தின் தலைவர் அவர்கள் ஊரின் சில முக்கியஸ்தர்களிடம் ஆலோசனைகளைப் பெற்றார்.

அதனைத் தொடர்ந்து இந்த யோசனைக்கள்  முஷான் இன்டர்நேஷனல் ஸ்தாபகர்  அல்-ஹாஜ் M முஸ்லிம் சாலஹுத்தீன் அவர்களிடம் முன்வைக்கப்பட்டன, 

இப்படியான ஆலோசனைகள் ஊரில் நடந்துகொண்டிருக்கும்போது ,ஒரு சில பெருமை விரும்பிகள் ,ஊரில் பெரிய தனவந்தர்களைபோன்று தாங்களும் புகழ் பெற வேண்டும் என்ற நோக்கில் ,எப்படியாவது முஸ்லிம் ஹாஜியாருடன் தொடர்புகளை வளர்த்துக்கொண்டு தினமும் தொலைபேசி ஊடாக தொடர் கொண்டு வேண்டிக் கொண்டதினால்தான் வங்கிக் கிளை திறக்கும் பணிகள் ஆரம்பிக்கப் பட்டதாக பெருமையடித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இது ஒரு தவறான தகவல்

முஸ்லிம் ஹாஜியார் அவர்கள் கல்ஹின்னை மக்களின் கோரிக்கைகளை என்றுமே நிராகரித்ததில்லை .கல்ஹின்னைக்கு எது தேவையோ அவற்றை போஸ்டர் அடித்து புகழ் தேட நினைக்காமல்,whatsapp குழுமங்களில்   புகழ் பாடச் சொல்லாமல் ,வக்காலத்து வாங்க சிலரை நியமிக்காமல் ,நல்லதை நல்லபடி செய்துள்ளார் ..இன்றும் செய்துகொண்டிருக்கின்றார்.

அதனைத் தொடர்ந்து இடத்தைப்பற்றி  ஆய்வுகள் செய்வதற்காக ,13-10-2021,ல் அமான வங்கியின் உயர்-அதிகாரிகள் சிலர் கல்ஹின்னைக்கு வருகை தந்தார்கள் .அதற்கான ஆலோசனைகளும் நடந்தன .

அதேவேளை அல்-ஹாஜ் M முஸ்லிம் சாலஹுத்தீன் அவர்களின் வேண்டுகோளுக்கினங்க நானும்  அந்நிகழ்வில் கலந்து கொண்டேன்.

அதற்கான ஆதாரப்பூர்வமான புகைப்படங்களை இத்துடன் இணைத்துள்ளேன்.


குறிப்பு: அமான வங்கி கிளையின் காரியாலயம் அமையபோகும் கட்டிடம் அல்-ஹாஜ் முஸ்லிம் சாலஹுத்தீன் அவர்களின்  நெருங்கிய உறவினரான அல்-ஹாஜ் கலீல் (மடவெல) CRESCENT BAKE HOUSE  உரிமையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.


கல்ஹின்னை ஒன்றியத்தின் தலைவர் அவர்களும், அல்-ஹாஜ் M. முஸ்லிம் சாலஹுத்தீன் அவர்களும் ஊருக்காகவும், தன் சமூகத்திற்காகவும் செய்துள்ள சேவைகளை மற்றவர்கள் போன்று whatsapp-ல் சொல்லிக் காட்டுவது என்றால் குறைந்தபட்சம் தொடர்ச்சியாக 12,மணித்தியாலங்கள் திரையரங்கில் படமாகவே ஒலிபரப்பு செய்யலாம், 


ஆனால் இன்று பொதுப்பணி என்ற பெயரில் ,ஒரு சிலர் செய்கின்ற சேவைகள் புகழுக்காக மட்டுமே செய்கின்றதை காணக் கூடியதாயிருக்கின்றது.

பிறையை காணமுன்பே குர்பான் கொடுப்பது போல் ஆகிவிட்டது , அல்லாஹ் பாதுகாப்பானாக .

சில whatsapp குழுமங்கள் கல்ஹின்னைக்கு மாபெரும் சேவைகள் செய்கின்றார்கள் .ஆனால் அவர்கள் அந்த குழுமங்களில் பறையடிப்பதில்லை.பட்டங்கள் சூட்டுவதில்லை .
வக்காலத்து வாங்க வண்டவாளங்களை வைத்துக்கொள்வதில்லை.

தகவல்களை பரிமாறும்போது நன்றாக ஆராய்ந்து பார்த்து பகிருங்ககள்.Android இருக்கின்றதே என்று கண்டதை எல்லாம் கக்க வேண்டாம்.

ஒரு விடயம் புரியவில்லை என்றால் தெரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்துகொள்ளலாம் .தலைக்கனம் பிடித்து தம்பட்டம் அடிப்பது தரையில் சாய்த்துவிடும்        

பணத்தைக்கொண்டு எதையும் செய்ய நினைக்கின்ற எம் சமூகம் ,அறிவைக்கொண்டு எதையும் செய்கின்ற தன்மையையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

விதையை விதைத்தவன்தான் பயிருக்கு சொந்தக்காரகனே தவிர, அறுத்தவன் அல்ல! 

கால்சட்டை அணிபவர்கள் எல்லோரும், அறிவாளிகளும் அல்ல! விளம்பரம் செய்து வியாபாரம் செய்யும் பொருட்கள் எல்லாம், தரமானதும் அல்ல! 

அடுத்த வீட்டு கோழியைப் பிடித்து, உம்மாவின் பெயரில் கத்தம் கொடுப்பது நிய்யத்தாக இருக்காது.

பாலின் நிறம் கருப்பென்றால் பார்ப்பவன்தான் குருடன்!

M.M.பாரூக் (WC)
கல்ஹின்னை.


 


Post a Comment

Previous Post Next Post