கல்ஹின்னை ஒன்றியம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது....!

கல்ஹின்னை ஒன்றியம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது....!


கல்ஹின்னையில் அமான வங்கியின் கிளை அமைக்கப்படயிருக்கும் விடயமாக தற்பொழுது நான்தான்டா என்கின்ற தற்பெருமை புகழ் சூறாவளியில் சுழன்று கொண்டிருப்பதை காண்கின்றோம்.

கல்ஹின்னைக்கு வங்கியொன்றின் அவசியத்தை புரிந்துகொண்ட 'கல்ஹின்னை ஒன்றியமும், சில முக்கியஸ்தர்களும் ஒன்றினைந்து கடந்த 20-01-2019,ஆம் ஆண்டு மடவெல,பொல்கொல்ல  தேசிய கூட்டுறவு அபிவிருத்தி நிறுவனமான கேட்போர் கூடத்தில் கருத்தறங்கொன்று கல்ஹின்னை ஒன்றியத்தினால் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

ஊர் மக்கள் அனைவரினதும் கட்டாயத் தேவைகள் எவையென ஆலோசிக்கப்பட்டபொழுது ,,அதில் முக்கியமாக கல்ஹின்னைக்கு வங்கியொன்றின் அவசியத்தை பற்றிய கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. கல்ஹின்னையைச் சார்ந்துள்ள (12) பனிரெண்டு மஹலாக்களினதும் முக்கிய தேவையாக வங்கி அவசியமாக கருதப்பட்டது.

இந்த கருத்தரங்கை ஏற்பாடு செய்து வங்கியின் அவசியத்தை வளியுறுத்தியது  கல்ஹின்னை ஒன்றியம் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

அதற்கான புகைப்படங்கள் இதோ
ஆனாலும் அதைப்பற்றி WHATAPP மூலமாக பறையடிக்கவில்லை.

நான்கு வருடங்களுக்கு முன்பு வேட்டையின் மூலம் கல்ஹின்னைக்கு வங்கியின் அவசியத்தைப்பற்றி நாம் குறிப்பிட்டிருந்தோம்.இப்படி ஊரில் பலரும் இதன் அவசியத்தைப்பற்றி 
தங்கள் கருத்துக்களை தெரிவித்திருக்கின்றார்கள்.அதற்காக அத்தனைபேரும் whatsapp மூலமாக பறையடிக்கவில்லை.

ஒரு சிலர் தங்களுடைய புகழ் பரவ வேண்டும் என்ற கீழ்த்தரமான நோக்கத்தில் ,சில சில்லறைகளை வைத்துக்கொண்டு இப்படியான தகவல்களை பரப்புகின்றனர்.
இது முற்றிலும் தவறான ஒரு செயல் என்பதை மறந்துவிடக்கூடாது.

ஏற்கனவே ஒருசில whatsapp குழுமங்களில் கல்ஹின்னைக்கு அவசியமான சில விடயங்களைப்பற்றிய கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.ஆனால் அவற்றை எல்லாம் குழி தோண்டிப்புதைத்ததும் ஒரு சிலரின் சுய நலத்தால் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது.

அதாவது கல்ஹின்னைக்கு அம்புலன்ஸ் சேவையின் அவசியம் ,பாடசாலையின் புனர் நிர்மாணம் ,மற்றும் வைத்தியசாலையின் புனர் நிர்மானம் போன்ற முக்கியமான விடயங்கள்  whatsapp குழுமங்களின் மூலம் நல்ல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

எனினும் அதையெல்லாம் ஒரு சிலர் தாங்கள் செய்வதாக உறுதியளித்துவிட்டு பின்வாங்கிச் சென்றதையும் நாம் மறக்கவில்லை .
இப்படி பலவிடயங்களில்  தலையிட்டு தடுத்துக்கொண்டிருப்பது ஒரு சிலரின் வேலையாகிவிட்டது.

இப்படிப்பட்ட ஈனத்தனமான செயல்களை நிறுத்துங்கள்.இவர்களுக்கு முட்டுக்கொடுக்கின்றவர்கள் சற்று அடக்கி வாசியுங்கள்.பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம் .
புகழ் தேவைஎன்றால் அது தானாக தேடி வரவேண்டும் .நீங்கள் செய்கின்ற வேலையைப் பொருத்து அதற்கான புகழ் உங்களை தேடிவரும்.நீங்களாக உங்கள் புகழ்பாட அடியாட்களை நியமிப்பது உங்களுக்கு கேடு விளைவிக்குமே தவிர பலன் கிடைக்காது. 

....யானையை சனளினால் கட்டி நான் தான் இழுத்துக்கொண்டு வந்தேன் என்று தம்பட்டம் அடிக்காதீர்கள்.

M.M.பாரூக் (WC)
கல்ஹின்னை. 


 


Post a Comment

Previous Post Next Post