கல்ஹின்னை அல்-மனார் தேசியப்பாடசாலையின் மலசலகூடம் புனர்நிர்மாணம்! கண்ணையிழந்த பின் சூரிய நமஸ்காரம்.

கல்ஹின்னை அல்-மனார் தேசியப்பாடசாலையின் மலசலகூடம் புனர்நிர்மாணம்! கண்ணையிழந்த பின் சூரிய நமஸ்காரம்.


கல்ஹின்னை அல்மனார் தேசிய பாடசாலைக்கு புதிய அதிபரின் வருகையையொட்டி எனக்கும் அழைப்பிதல் கிடைத்தது. நான் அங்கு சென்றிருந்த சமயம் பாடசாலையை சுற்றிப்பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.

பாடசாலையை நேரடியாகப் பார்க்கும்போதுதான் அதன் தற்போதைய நிலையை அறிந்துகொள்ள முடிந்தது. ஒரு தேசியப்பாடசாலை என்று சொல்வதற்கே வெட்கமாயிருந்தது.

நான் கண்ட காட்சிகளை கல்ஹின்னை டுடே மூலமாக ஊர் மக்களுக்கு தெரியப் படுத்தினேன்.

சுகாதாரம் என்பது சிறிதும் பின்பற்றப்படாமல் பாடசாலை இருந்தது மிகவும் கவலையளித்தது.மாணவ மாணவிகள் செல்லும் மலசல கூடங்கள் மிகவும் மோசமான நிலையில் இருந்தது அருகில்கூட செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசிக்கொண்டிருந்தததைக் காண முடிந்தது.

சுகாதாரம் எவ்வளவு முக்கியம் என்பதை கருத்திற்கொண்டு இவற்றை புனர் நிர்மாணம் செய்யும்படி (கல்ஹின்னை டுடே) என்னுடைய கருத்தை மிகவும் ஆழமாக தெரிவித்திருந்தேன்..எனினும் அதைப்பற்றிய எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் குறைசொல்லித் திரிந்த SDS,இன்று அவற்றை புனர் நிர்மாணம் செய்ய முன் வந்திருக்கின்றார்கள்.
 

நான் மேற்குறிப்பிட்ட தவறுகளை சுட்டிக்க்காட்டும்போது,அது ஒருசிலரை குறி வைத்து குற்றசாட்டுவதாக என்னிக்கொண்டிருக்கின்றார்கள். உண்மையை உரக்கச் சொல்லும்போது சிலருக்கு உரைக்கத்தான் செய்யும்.அதற்காக நான் கண்ணால் கண்ட காட்சிகளை மறைத்து அல்லாஹ்வுக்கு பொருத்தமற்ற வேலைகளை செய்ய முடியாது.

நான் கண்ணால் கண்ட அவலங்களைதான் வெளிப்படுத்தினேன் .

ஒரு பாடசாலை என்றால் அறிவு, ஞானம், சுத்தம், சுகாதாரம் பேணிப்பாதுகாக்கப் படவேண்டிய கட்டாயம் என்பதை உணர்வுப்பூர்வமாக உணரக்கூடிய ஆசிரியர்கள், அபிவிருத்தி சங்கம் ஆலோசகர்கள் இருப்பார்கள்.கல்வி கற்க வருகின்ற குழந்தைச் செல்வங்களுக்குரிய வசதி வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுப்பது அங்கிருக்கும் ஆசிரியர்களினதும்,அபிவிருத்திச் சங்கத்தினரினதும் தலையாய கடமையாகும்.

பதவியைப் பெற்றுக்கொண்டு மதிப்புக்கதைப்பதில் அர்த்தமில்லை .பதவியை பக்குவப்படுத்தும் சேவைகளை செய்யவேண்டும்.இவற்றை நம்பித்தான் பெற்றோர்கள் பிள்ளைகளை கல்விகற்க அனுப்புகின்றார்கள்.  

சமூகத்தின் மீது இருக்கின்ற அக்கரையில் மட்டுமே சில தவறுகளை சுட்டிக் காட்டுகின்றேன் என்பதை இன்றைய SDS புரிந்துகொள்ளவேண்டும்.

சுட்டிக் காட்டப்படுவதை திருத்திக்கொள்வதில் மகிச்சி,

தீண்ட நினைத்தால் அதுவே உங்களின் விழ்ச்சியின் ஆரம்பம் என்பதையும் இன்றைய SDS புரிந்து கொள்ளவேண்டும் .

SDSன் இந்த பொறுப்பற்ற செயலின் காரணமாகஅண்மையில் (கல்ஹின்னை அல்-மனார் தேசியப்பாடசாலையில்) 10,ம் வகுப்பில் கல்விகற்கும் மாணவர் ஒருவர் மலசலகூடத்தில் வழுக்கி விழுந்ததை நாம் அறிவோம்..

மலசலகூடத்தில்வழுக்கி விழுந்த 10,ம் வகுப்பில் கல்விகற்கும் மாணவர்

அந்த மாணவன் கண்டி அரசாங்க வைத்தியசாலையில் பாரிய சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு இருப்பதை கல்ஹின்னையில் யாவரும்  அறிந்ததொன்று .இப்படிப்பட்ட சம்பவங்கள நடக்கும் என்பதற்காகத்தான் அன்று நான் புகைப்படங்கள் எடுத்து ஊர் மக்களுக்கு தெரியப்படுத்தினேன்.


ஆனாலும் எவரும் அதைப்பற்றிய அக்கறையில்லாமல் இருந்ததுதான் வேடிக்கை..

 அதன் பிரதிபலன்தான் அந்த அப்பாவி மாணவனின் சம்பவம் .

இப்படிப்பட்ட சம்பவங்களுக்கு  ஆசிரியர்களும் SDS-ம் தான் பொறுப்பேற்க வேண்டும்.

வருமுன் காப்பவனே அறிவாளி, கையில்லாதவன் காரோட்ட முடியுமா?

அதிபர் அவர்களே இந்தப் பாடசாலையின் எதிர்கால  முன்னேற்றம்தான்  உங்கள் கடமையென நினைப்பீர்கள் என்றால் உங்களைச்சுற்றி இருப்பவர்கள் யார்,எவர்கள் என்பதையும் உணர்ந்துகொள்ளுங்கள், கண் பார்வையில்லாதவனை கடைத்தெருவிற்கு  அனுப்பாதீர்கள் நீங்கள் இருக்கும் இடம்  பச்சிளம் பயிர்களை பாதுகாப்பாக வளர்த்து நல்ல நிலையில் உலகுக்கு கொடுக்கவேண்டிய இடம்.

.எதிர்காலத்தில்   நல்லதொரு சமுதாயத்தை உருவாக்கும் பொறுப்பு ஒவ்வொரு ஆசிரியர்களுக்கும் இருக்கின்றது.அந்த மகத்தான பொறுப்பை உங்களை சுற்றியிருக்கும் தேவையற்றவர்களோடு இணைந்து நாசமாக்கி விடாதீர்கள்.

பிறரிடமிருந்து நல்லனவற்றைக் கற்றுக் கொள்ள மறுப்பவன் இறந்தவனுக்கு இணையானவன்.
குறைகளை சுட்டிக் காட்டுபவர்களை வரவேற்கக் கற்றுக்கொள்பவன் சிறந்த ஒரு சமுதாயத்தை உருவாக்க தகுதியானவன் என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.

அப்படியில்லாமல் நான்தான் எல்லாம் தெரிந்தவன்,நான்தான் பெரியவன் என்று மமதை கொண்டு வாழ்பவர்களின் வீழ்ச்சி வெகுதூரமில்லை என்பதை ஒவ்வொருவரும் புரிந்து நடந்துகொள்ளவேண்டும் என்பது எனது அன்பான வேண்டுகோள்.

M.M.பாரூக் (WC)
கல்ஹின்னை.

 


Post a Comment

Previous Post Next Post