சிந்தனைத் துளிகள்!

சிந்தனைத் துளிகள்!

"உயர்ந்த இலட்சியம் கொண்ட ஒருவன் ஆயிரம் தவறுகள் செய்தால், இலட்சியம் இல்லாமல் வாழ்பவன் ஐம்பதினாயிரம் தவறுகள் செய்வான்" - சுவாமி விவேகானந்தா.

"கோபமாகப் பேசும் போது அறிவு தன் முகத்துக்குத் திரையிட்டுக் கொள்கின்றது" - சீனப் பழமொழி.

"பல்லாண்டு காலமாக முதுமை வளர, எட்டாத தூரத்தில் விண்மீனாக மினுமினுத்து வாழ்வதைக் காட்டிலும், ஒரு கணம் ஊரெங்கிலும் உன்னத ஒளி பாய்ச்சி மறுகணம் மறைந்துவிடும் மின்னலாக வாழவே ஆசைப்படுகிறேன்" - காண்டேகர்.

"காலையில் பத்து மணி வரை எல்லோரிடமும் இனிமையாக நடந்துகொள்ளுங்கள். அதன் பின் நாள் முழுதும் இனிமையாக இருக்கும்." - எல்பர்ட் ஹாவார்ட்.

"பெண்களுக்குப் பலம் குறைவு தான். ஆனால், அவர்களிடம் உள்ள துணிச்சல் ஓர் ஆணுக்கு உள்ளதை விடவும் அதிகம்." - மகாத்மா காந்தி.

"ஆயிரம் நண்பர்கள் இருப்பார்கள்; தருணத்திற்கு ஒருவரும் அகப்பட மாட்டார்கள். ஒரே ஒரு எதிரி இருப்பான். எங்கேயும் எப்போதும் அவன் எதிர்ப்பட்டுக்கொண்டே இருப்பான்." - எமர்ஸன்.

"தனது சகிப்புத் தன்மையால் எவ்விதத் துன்பத்தையும் தவிடுபொடியாக்கி விடலாம். ஆனால், அவசரக்காரன் தனது அத்தனை பாக்கியங்களையும் இழந்து விடுகிறான்." - முஹம்மது நபி.

"அறிவு என்பது நதியைப் போன்றது. அது எவ்வளவுக்கெவ்வளவு ஆழமாக இருக்கின்றதோ, அவ்வளவுக்கவ்வளவு அமைதியாக இருக்கும்." - பேகன்.


 


Post a Comment

Previous Post Next Post