நோன்பின் ஒழுங்குகளும் அதன் சட்டங்களும்

நோன்பின் ஒழுங்குகளும் அதன் சட்டங்களும்


எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே! ஸலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அன்னாரின் குடும்பத்தினர், தோழர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக! 

இச்சிறு பிரசுரமானது இஸ்லாத்தின் நான்காவது கடமையான 'அஸ்ஸவ்ம்' எனப்படும் நோன்பு பற்றிய ஒரு தொகுப்பாகும். முஸ்லிம்கள் இக்கடமையை இஸ்லாம் கூறும் விதம் அழகிய முறையில் நிறைவேற்றுவதற்கு உதவியாக அமையும் பொருட்டு இதனை வெளியிடுகின்றோம். எல்லாம் வல்ல அல்லாஹ் இம்முயற்சியை ஏற்றுக் கொண்டு இதன் மூலம் அனைத்து முஸ்லிம்களும் பயன்பெற நல்லருள் பாளிப்பானாக! 

'அஸ்ஸவ்ம்' என்றால் என்ன? 
 'அஸ்ஸவ்ம்' எனும் அரபு மொழிச் சொல் 'அல்இம்ஸாக்' (தடுத்துக்கொள்ளல்) என்ற மொழி அர்த்தத்தை கொண்டதாகும். தடுத்துக்கொள்ளுதல் என்பது பேச்சைத் தடுத்துக்கொள்வதாகவோ உணவைத் தடுத்துக்கொள்வதாகவோ இருக்கலாம். இதற்கு தமிழில் 'நோன்பு' என்றழைப்பர். 

நோன்பு என்பது ஷரீஆவின் வரைவிலக்கணப்படி: “நிய்யத்துடன் கிழக்கு வெளுத்தது முதல் சூரியன் அஸ்தமிக்கும் வரை நோன்பை முறிக்கும் விடயங்களை விட்டும் தடுத்துக்கொள்வதாகும்”. 

இந்நோன்பானது இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளுள் நான்காவது கடமையாகும். இது ஹிஜ்ரி இரண்டாவது ஆண்டில் கடமையாக்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் தனது வாழ்நாளில் ஒன்பது ஆண்டுகள் மாத்திரமே ரமழான் மாதங்களில் நோன்பு நோற்றிருக்கின்றார்கள். அவற்றில் ஒரு வருடம் முப்பது நாட்களும் மீதி வருடங்களில் 29 நாட்களுமே நோன்பு நோற்றிருக்கின்றார்கள். ரமழான் மாதம் 29 நாட்களுடன் பூர்த்தியானதே அதற்குக் காரணமாகும். 

நோன்பு பற்றி அல்குர்ஆனும் 
அல்ஹதீஸும் 
நோன்பை விசுவாசிகளின் மீது விதியாக்கிய வல்ல நாயன் அதன் தத்துவம் பற்றி பின்வருமாறு விளக்குகின்றான்: 

''விசுவாசிகளே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டதைப் போன்று உங்கள் மீதும் நோன்பு (நோற்பது) கடமையாக்கப்பட்டுள்ளது. (அதனால்) நீங்கள் (உள்ளம் சுத்தி பெற்று) பயபக்தியுடையவர்களாகலாம்." (அல்பகறா: 183) 

நபி (ஸல்) அவர்கள் நோன்பின் நோக்கம் பற்றி பின்வருமாறு கூறுகின்றார்கள்: 

"யார் பொய்யையும், பொய்யைத் தழுவிய செயலையும் விட்டு விடவில்லையோ அவர் தமது உணவையும் பானத்தையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை". [புகாரி: (1903)] 

நோன்பின் நோக்கங்கள் 
மனிதனின் உள்ளத்தையும் உடலையும் சிந்தனையையும் பக்குவப்படுத்தி அதனூடாக சீரான நேரான வாழ்கைக்கான பயிற்சியை வழங்குதல். உதாரணமாக நோன்பின் மூலம் நாளொன்றுக்கு ஏறத்தாள 14 மணித்தியாளங்கள் அல்லாஹ்வின் ஞாபகத்தை உள்ளத்தில் நிறுத்தி நீண்ட தொடர் பயிற்சியொன்றைப் பெறுவதைக் குறிப்பிடலாம். 

செல்வந்தர்கள், ஏழை எளியோரின் பசிப்பிணியையும் வறுமையின் அகோரத்தையும் அறிந்து அவர்கள் மீது இரக்கம் கொள்வதற்கு காரணமாக இருத்தல். மனிதனின் குடலிலும் இரைப்பையிலும் ஏற்படும் பல்வகை நோய்களுக்கு சிகிச்சையாய் அமைதல்.அல்லாஹ்வுக்கும் அடியானுக்கும் மட்டுமே தெரிந்த இரகசிய வணக்கமாக நோன்பு இருப்பதால் தொழுகை, ஹஜ் போன்ற ஏனைய பகிரங்க வணக்கங்களிலிருந்து அது வித்தியாசப்படல். உதாரணமாக முகஸ்துதி போன்ற வேண்டத்தகாத விடயங்கள் இதன் மூலம் விட்டகல்வதுடன் ஏனைய இபாதத்களையும் அல்லாஹ்வுக்காக நிறைவேற்றும் அதியுயர் தன்மையைப் பெறல். 

நோன்பின் வகைகள் 
நோன்பு பர்ழான நோன்பு, ஸுன்னத்தான நோன்பு என இரு வகைப்படும். 

பர்ழான நோன்பு: 
இதில் ரமழான் மாத நோன்பு, நேர்ச்சை நோன்பு ஆகிய இரண்டும் மாத்திரமே அடங்கும். 

ஸுன்னத்தான நோன்பு: 
ஸுன்னத்தான நோன்புகளை கீழ்வருவன போன்று மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். 

வருடாந்தம் ஸுன்னத்தாக்கப்பட்டது: 
முஹர்ரம் பிறை 9,10 ஆகிய தாஸுஆ, ஆஷுறா தினங்கள். 
ஷஃபான் மாத ஆரம்ப அரைவாசி. ஷவ்வால் மாதம் ஆறு நாட்கள். 
துல்ஹஜ் மாதம் பிறை 1 முதல் 9 முடியும் வரை. இவற்றில் அரபாவுடைய தினமான 9ஆம் நாள் நோன்பு நோற்பது வலியுறுத்தப்பட்ட ஸுன்னத்தாகும். துல்கஃதா, துல்ஹிஜ்ஜா, முஹர்ரம், ரஜப் ஆகிய சங்கையான நாழு மாதங்கள். 

மாதாந்தம் ஸுன்னத்தாக்கப்பட்டது: 
'அய்யாமுல் பீழ்" என்றழைக்கப்படும் பிறை 13,14,15 ஆகிய தினங்கள்.
 
வாராந்தம் ஸுன்னத்தாக்கப்பட்டது: 
திங்கள், வியாழன் ஆகிய இரு தினங்கள். 

நோன்பு கடமையாக்கப்பட்ட ரமழான் மாதத்தின் மகிமை 
இம்மாதத்தைப் பற்றி அல்லாஹு தஆலா புனித அல்குர்ஆனில்: "ரமழான் மாதம் எத்தகையதென்றால், அதில்தான் மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும், நேர்வழியை தெளிவாக்கக்கூடியதாகவும், நன்மை தீமையைப் பிரித்தறிவிக்கக் கூடியதாகவும் உள்ள அல்குர்ஆன் அருளப்பட்டது. ஆகவே உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவாபு நோற்கட்டும்". எனக் கூறியுள்ளான். (அல்பகறா:185) 

மேலும் இதன் மகிமையை தெளிவுபடுத்தும் முகமாக நபி (ஸல்) அவர்கள் பல பொன்மொழிகளைக் கூறியுள்ளார்கள். 

அவற்றில் சில: 
“ரமழான் மாதம் வந்து விட்டால் சுவனத்தின் கதவுகள் திறக்கப்படுகின்றன, நரகத்தின் கதவுகள் அடைக்கப்படுகின்றன, ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்". [புகாரி: (1899)] 

பாவங்கள் 
"யார் ரமழானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கின்றாரோ அவரது முந்திய மன்னிக்கப்படுகின்றன". [புகாரி (1901)] 

ரமழான் மாதத்தை நிச்சயித்தல் 
ரமழான் மாதத்தை பின்வரும் இரு முறைகளில் ஒன்றின் மூலம் நிச்சயிக்கப்படும். 

சபிறை கண்டதை ஊர்ஜிதம் செய்தல்: பிறை பார்க்கும் நேரம்: ஷஃபான் மாதம் 29ஆவது நாள் மாலை சூரியன் அஸ்தமித்ததற்குப் பின்பாகும். (பிறை பார்த்தல் ஒவ்வொரு மாதத்திற்குமுரிய பிரதானமான் ஸுன்னத்தாகும்) மாதத்தின் முதல் பிறை தென்பட்டதும் கீழ்காணும் துஆவை ஓதுவது ஸுன்னத்தாகும்.
 
اللهُ أَكْبَرُ (۳) اللّهُمَّ أَهِلَّهُ عَلَيْنَا بِالأَمْنِ وَالْإِيْمَانِ، وَالسَّلَامَةِ والإِسْلَامِ 
والتَّوفِيقِ لِمَا تُحِبُّ وتَرْضَى رَبِّي وَرَبُّكَ اللهُ. [رواه الدارمي
 
ஷஃபான் மாதத்தை முப்பதாக பூர்த்தியாக்குதல்: 
(ஷஃபான் மாதம் 29ஆவது நாள் சூரிய அஸ்தமனத்திற்குப் பின் மேக மூட்டங்களின் காரணமாக பிறையைப் பார்ப்பதற்கு முடியாது கஷ்டமாக இருந்தால் அல்லது பிறை கண்டதாக கூறும் நீதமான சாட்சி ஒருவரும் இல்லாதிருந்தால் ஷஃபான் மாதத்தை முப்பதாக பூர்த்தியாக்கப்பட்டு மறுநாள் ரமழான் மாதமாக ஆக்கப்படும். 

நோன்பு நோற்பதற்கு வெறுக்கப்பட்ட தினங்கள் 
வெள்ளிக்கிழமை மாத்திரம் நோன்பு நோற்பது. சனிக் கிழமை மாத்திரம் நோன்பு நோற்பது. ஞாயிற்றுக் கிழமை மாத்திரம் நோன்பு நோற்பது. காலம் பூராகவும் நோன்பு நோற்பது. (இது தனக்கு ஏதும் தீங்கு ஏற்படும், அல்லது பிறருக்கான ஏதும் உரிமை தவறிவிடும் என்பதை பயந்தவருக்காகும். அவ்வாறில்லாவிட்டால் காலம் முழுவதும் நோன்பு நோற்பது விரும்பத்தக்கதாகும்). 

நோன்பு நோற்பதற்கு தடுக்கப்பட்ட தினங்கள் 
நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் 
ஆகிய இரு தினங்கள். 

'அய்யாமுத் தஷ்ரீக்’ என அழைக்கப்படும் துல்ஹஜ் பிறை 11,12,13 ஆகிய தினங்கள். சந்தேகத்திற்குரிய நாள். அதாவது ஷஃபான் இறுதி இரவில் பிறை தென்பட்டதாக மக்கள் பேசிக்கொள்கின்றனர். ஆனால் தென்பட்டது நிச்சயமாகவில்லை. இதற்கே சந்தேகத்திற்குரிய நாள் எனப்படும். 
ஷஃபான் பிறை 15க்குப் பின் ரமழான் வரை உள்ள நாட்கள். 

நோன்பின் சில முக்கிய சட்டங்கள் 
நோன்பு கடமையாகுவதற்கான நிபந்தனைகள்: 
முஸ்லிமாக இருத்தல் 
பருவமெய்தி இருத்தல் 
புத்தி சுவாதீனமுள்ளவராக இருத்தல் 
நோன்பு நோற்பதற்கு சக்தியுள்ளவராக இருத்தல். 
பெண்கள் மாதவிடாய் பிரசவவிடாய் ஆகியவற்றை விட்டும் சுத்தமாக இருத்தல். 

நோன்பின் பர்ழுகள்: 
ஒவ்வொரு நாள் இரவிலும் நோன்பு நோற்பதை மனதில் நிய்யத் செய்தல் வேண்டும். (இரவு என்பது சூரியன் அஸ்தமித்ததிலிருந்து பஜ்ர் உதயமாகும் வரை உள்ள நேரமாகும். 
நிய்யத்தின் விபரம்: 
نَوَيْتُ صَوْمَ غَدٍ عَنْ أَدَاءِ فَرْض رَمَضانِ هَذِهِ السَّنَةِ لِلَّهِ تَعَالَى 
“இந்த வருடத்தின் ரமழான் மாதத்தின் பர்ழான நோன்பை அதாவாக நாளைக்குப் பிடிக்க நிய்யத் வைத்தேன்" 
பஜ்ர் உதயமானது முதல் சூரியன் அஸ்தமிக்கும் வரை நோன்பை முறிக்கும் கருமங்கள் எதிலும் ஞாபகத்தோடு ஈடுபடாதிருத்தல். 

நோன்பின் ஸுன்னத்துக்கள்: 
  • ஸஹர் சாப்பிடுதல். 
  • பஜ்ர் 
  • உதயத்திற்கு அண்மிக்கும் பிரகாரம் ஸஹர் சாப்பிடுவதை பிற்படுத்தல். 
  • குளிப்பு கடமையானவர்கள் பஜ்ருக்கு முன்பே அதனை நிறைவேற்றல். 
  • சூரியன் அஸ்தமித்தது உறுதியானால் நோன்பு திறப்பதைத் துரிதப்படுத்துதல். 
ஒற்றைப்படையான பேரீத்தம் 
பேரீத்தம் பழங்களினால் நோன்பு திறத்தல் (அது இல்லாவிடில் தண்ணீரைக் கொண்டே நோன்பு திறப்பது சிறந்தது).
 
நோன்பாளிகளை நோன்பு திறக்கச் செய்தல்.
நோன்பு திறக்கும் சந்தர்ப்பத்தில் அதிகமாக துஆவில் ஈடுபடுதல். குறிப்பாக பின்வரும் துஆக்கள் ஹதீஸில் வந்திருப்பதால் அவற்றை ஓதிக்கொள்வது மிகச்சிறந்ததாகும். 

* ذَهَبَ الظَّمَأُ، وَابْتَلَّتِ الْعُرُوْقُ، وَثَبَتِ الْأَجْرُ إِنْ شَاءَ اللَّهُ [رواه أبو داود] 
[رواه أبو داود] 
* اَللّهُمَّ لَكَ صُمْتُ، وَعَلَى رِزْقِكَ أَفْطَرْتُ. * اَلْحَمْدُ للهِ الَّذِي أَعَانَني فَصُمْتُ، وَرَزَقَنِي فَأَفْطَرْتُ. [رواه ابن السي] * اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِرَحْمَتِكَ الَّتِي وَسِعَتْ كُلِّ شَيْءٍ أَنْ تَغْفِرَ لِي اود ان ما) 
[رواه ماجه ] 

பிறர் வீட்டில் நோன்பு திறந்தால் மேற்கூறப்பட்ட துஆக்களுடன் 

أَفْطَرَ عِنْدَكُمُ الصَّائِمُوْنَ وَأَكَلَ طَعَامَكُمُ الْأَبْرَارُ، وَصَلَّتْ 
عَلَيْكُمُ الْمَلَائِكَةُ. [رواه أبو داود 
என்று ஓதிக்கொள்வதும் ஸுன்னத்தாகும். 

குறிப்பு: 
நோன்பு திறப்பதும் சாப்பிடுவதாக இருப்பதால் அதன் நிறைவில் சாப்பாட்டின் பின் ஓத வேண்டிய துஆக்களையும் ஓதிக்கொள்ளல் வேண்டும். 

இரவில் தராவீஹ் தொழுதல். 
  • யாராவது ஏசிப் பேசினால், திட்டினால்,கோபமூட்டினால் "நான் நோன்பாளி" என்று சொல்லி ஒதுங்கிக்கொள்ளல். 
  • பள்ளியில் இஃதிகாப் இருத்தல். (விசேடமாக இறுதிப் பத்தில்) 
  • அதிகமாக குர்ஆன் ஓதுதல். 
  • அதிகமாக தௌபா, இஸ்திஃபார் செய்தல். 
  • அதிகமாக தர்மம் செய்தல். 
  • உறவினர்களோடு அதிகம் சேர்ந்து நடத்தல். 

நோன்பாளிக்கு (மக்ரூஹான) வெறுக்கப்பட்ட சில விடயங்கள்: 
மக்ரூஹான விடயங்கள் என்பது கூறப்பட்ட ஸுன்னத்தான விடயங்களுக்கு மாற்றம் செய்யும் போது ஏற்படக்கூடியவையாகும். இவற்றில் சில “மக்ரூஹ் தன்ஸீஹ்” எனும் தவிர்ந்து கொள்வதன் மூலம் நன்மையை தரக்கூடியவையாகும். மற்றும் சில "மக்ரூஹ் தஹ்ரீம்” எனும் நன்மையை பாழாக்கி விடுபவைகளாகும். எவ்வாறெனினும் இவ்விடயங்கள் நோன்பை முறிக்காதவை என்பதை கருத்தில் கொள்ளல் வேண்டும். 

மக்ரூஹ் தன்ஸீஹ்: 
  • நோன்பு திறப்பதை காரணமின்றி பிற்படுத்தல். 
  • இரத்தம் குத்தியெடுத்தல். 
  • சாப்பாட்டை சுவை பார்த்தல். 
  • வாய் கொப்பளித்தல், 
  • நாசிக்கு நீர் செலுத்தல் போன்றவைகளில் கடப்புச் செய்தல். (கடப்புச் செய்வதன் மூலம் தண்ணீர் உட்சென்றால் மாத்திரம் நோன்பு முறிந்து விடும்) 
  • இச்சை ஏற்படாத வகையில் முத்தமிடல், கட்டியணைத்தல் போன்ற உடலுறவுடன் சம்பந்தப்பட்ட ஆயத்த வேலைகளில் ஈடுபடுதல். 
  • சூரியன் நடு உச்சியைத் தாண்டியதன் பின் பல் துலக்குதல் (மிஸ்வாக் செய்தல்), 
  • தூக்கம் போன்ற காரணத்தினால் வாயில் துர்நாற்றம் வீசக்கூடிய சந்தர்ப்பத்தில் மாத்திரம் இதற்கு அனுமதியுண்டு. நறுமணம் பூசுதல், 
  • நுகர்தல்.வேண்டுமென்றே ஒரு சுவையேதுமில்லாத பொருளை மென்று அதனால் ஊறிய உமிழ் நீரை விழுங்குதல். 
  • ஆறு, குளம் போன்றவற்றில் மூழ்கிக் குளித்தல் (இதன் போது திறந்த துவாரங்களின் ஊடாக தண்ணீர் உட்செல்ல இடமுண்டு. ஆகையால் இம்முறையைத் தவிர்ந்துகொள்வதே சிறந்ததாகும்.) 

மக்ரூஹ் தஹ்ரீம்: 
பொய், புறம் பேசுதல், கோள் சொல்லுதல், பரிகாசம் செய்தல், திட்டுதல், இன்னிசை கேட்டல், தொலைக் காட்சி பார்த்தல் போன்ற செயல்களில் ஈடுபடுதல்.

நோன்பாளிக்கு ஹராமானவை: 
இச்சையுடன் முத்தமிடல், கட்டியணைத்தல் போன்ற உடலுறவுடன் சம்பந்தப்பட்ட ஆயத்த வேலைகளில் ஈடுபடுதல். 
இச்சையோடு ஆண் பெண்ணையும், பெண் ஆணையும் பார்த்தல் (கணவன் மனைவியாக இருந்தாலும் சரி)

நோன்பை முறிக்கும் காரியங்கள்: 
  • உடலின் திறந்த துவாரங்கள் மூலம் கண்ணுக்குத் தோன்றக்கூடிய எதுவும் செல்லல்.(உ+ம்: வாய், மூக்கு, காது) 
  • பகல் முழுவதும் மயக்கமுற்றிருத்தல். 
  • வேண்டுமென்றே வாந்தி எடுத்தல். (அதில் ஏதும் மீண்டும் உட்செல்லாவிட்டாலும் சரி) 
  • உடலுறவு கொள்ளல் (இந்திரியம் வெளியாகாவிட்டாலும் சரி) 
  • ஒரு நொடிப்பொழுதேனும் பைத்தியம் பிடித்தல். 
  • இந்திரியத்தை வெளிப்படுத்தல். பெண்களுக்கு மாதவிடாய் 
  • பிரசவவிடாய் ஏற்படுதல். 
  • மதம் மாறுதல். 
  • அல்லது சூரியன் மறைந்தது உறுதியாக முன் நோன்பு திறத்தல். 
  • வாயில் வரும் இரத்தத்தை துப்பியதன் பின்னர் வாயைக் கழுவாமல் உமிழ்நீரை விழுங்குதல். 
  • தொண்டையை விட்டும் வெளியான சளியை விழுங்குதல். 

நோன்பை முறிப்பவை என மக்கள் சந்தேகிக்கின்ற அதனை முறிக்காத சில விடயங்கள்: 
  • உணவு அல்லாத (Injection) ஊசி போடுதல். 
  • குளித்தல், நீந்துதல், வெப்பத்தைத் தனித்துக்கொள்வதற்காக அடைந்து கொள்ளுதல். 
  • தண்ணீரினால் குளிர்ச்சி தலைக்கு எண்ணை போடுதல், உடம்புக்கு நகம், முடி வெட்டுதல். 
  • கிரீம், பாம் பூசுவது. தாய் குழந்தைக்குப் பாலூட்டுதல். உமிழ்நீரை விழுங்குதல். 
  • இயற்கையாக வாந்தி வெளியாகுதல். 
  • தூக்கத்தில் இந்திரியம் வெளியாகுதல். 
  • மறதியாக உண்ணல், குடித்தல். 
  • இரவில் நிய்யத்து வைத்த பின் சுப்ஹுக்கு முன் மீண்டும் சாப்பிடுதல். 
  • வாய் கொப்பளித்து துப்பியதன் பின் வாயிலிருக்கும் ஈரம் உட்செல்லல். 
  • சாம்பிராணிப் புகை, ஏனைய வாசனைப் பொருட்களை நுகர்தல். 
  • தூசி,மாவரிக்கும் போது ஏற்படும் துணிக்கைகள் உட்செல்லல். 
  • கண்ணுக்கு சுருமா, சொட்டு மருந்து (Eye Drops) போடுதல். 

நோன்பை விடுவதற்குரிய காரணங்களும், பரிகாரமும் (பித்யா) 
கழா மாத்திரம் கடமையானவர்கள்: 

பிரயாணி: 
தொழுகையைச் சுருக்கிச் சேர்த்து தொழுவதற்கு அனுமதிக்கப்படக்கூடிய "மஸாபதுல் கஸ்ர்" எனப்படும் மைல் (90km) தூரம் ஒரு இடத்தை நாடி ஆகுமான பிரயாணம் செய்பவர் நோன்பு நோற்க சக்தி பெற்றிருந்தாலும் அதனை விடுவது கூடும். ஆனாலும் பஜ்ர் உதயமாவதற்கு முன்பு அவர் ஊரை விட்டும் வெளிப்படுதல் வேண்டும். கடுமையான சிரமம் இல்லா விட்டால் இவர் நோன்பு நோற்பதே ஏற்றமாகும். 

நோயாளி: 
நோன்பின் மூலம் நோய் அதிகரித்து சிரமம் ஏற்படும் என்றிருந்தால். 

கர்ப்பிணித்தாய்: 
அவள் தனக்கு அல்லது தனக்கும் தனது கருவில் உள்ள குழந்தைக்கும் ஆபத்து ஏற்படும் என்று பயந்தால். 

பாலூட்டும் தாய்: 
அவள் தனக்கு அல்லது தனக்கும் தனது குழந்தைக்கும் ஆபத்து ஏற்படும் என்று பயந்தால். மாதவிடாய், பிரசவவிடாய் ஏற்பட்ட பெண்கள்.நோய் அல்லது மரணம் சம்பவிக்கும் என பயப்படத்தக்கதான 
பசி அல்லது தாகம் ஏற்படுதல். 

கழா இன்றி ஒவ்வொரு நோன்பிற்கும் பரிகாரமாக ஒவ்வொரு 'முத்து' பிரதான உணவான தானியம் கொடுக்க கடமைப்பட்டவர்கள்: 
வயது முதிர்ந்தவர்கள். 
தீராத நோயால் பீடிக்கப்பட்டவர்கள். கழா, முத்து இரண்டுமே கடமையாகாதவர்: விட்ட நோன்பைக் கழாச் செய்ய சந்தர்ப்பம் கிடைக்க முன் மரணித்து விட்டவர். 

கழா, முத்து இரண்டும் கடமையானவர்கள்: 
ஒருவருக்கு கழா நோன்பு இருந்து அதனை அடுத்த ரமழான் வரை எந்தவொரு காரணமுமின்றி பிற்படுத்தினால் அதனை கழா செய்வதுடன் ஒவ்வொரு நோன்பிற்கும் பரிகாரமாக ஒவ்வொரு 'முத்து' தானியம் கொடுப்பது அவசியமாகும். வருடங்கள் அதிகரிக்கும் போது 'முத்தும்' அதிகரித்துக் கொண்டே செல்லும். கர்ப்பிணித்தாய், 
பாலூட்டும் தாய்: அவ்விருவரும் தனது குழந்தைக்கு மாத்திரம் ஆபத்து ஏற்படும் என்பதைப் பயந்து நோன்பை விட்டால். 

குறிப்பு: *காரணமின்றி நோன்பை விட்டவர்கள் உடனடியாக நோன்பை கழாச் செய்வது வாஜிபாகும். காரணத்துடன் நோன்பை விட்டவர்கள் தாமதித்து கழாச் செய்யலாம். அவசரப்படுத்துவது சிறந்ததாகும். 

'முத்து' என்பது நடுத்தரமான ஒருவர் தனது இரு கைகளையும் கூட்டி நிரம்ப ஒரு விடுத்தம் அள்ளி எடுப்பதற்குக் கூறப்படும். சுமார் 560g ஆகும். பின்வருவோர் விட்ட நோன்பை கழா செய்வதுடன் குற்றப்பரிகாரமும் (கப்பாராவும்) கொடுக்கவேண்டும்: ஒருவர் ரமழானில் நோன்பு நோற்றிருக்கும் போது பகல் காலத்தில் (பஜ்ர் உதயமானது முதல் சூரியன் அஸ்தமிக்கும் வரை உள்ள நேரத்தில்) உடலுறவின் மூலம் நோன்பை முறித்துக் கொண்டால், அவர் அந்நோன்பை கழாச் செய்வதுடன் அதற்குப் பரிகாரமாக * குறையற்ற முஃமினான ஒரு அடிமையை 
உரிமையிட வேண்டும். * அடிமை இல்லாத சந்தர்ப்பத்தில் அல்லது இருந்தும் உரிமையிடுவதற்கு வசதி இல்லாதிருந்தால் தொடராக இரண்டு மாதங்கள் நோன்பு நோற்க வேண்டும். 

அதற்கும் இயலவில்லையானால் ஒவ்வொரு 'முத்து' வீதம் 60 மிஸ்கீன்களுக்கு உணவளிக்க வேண்டும். உணவளிக்கும் போது "இது எனது தெண்டக்குற்றத்திற்காக" என நிய்யத் வைப்பது கடமையாகும். 

*அதற்கும் முடியாவிடின் அதற்குரிய வசதி ஏற்படுகின்ற வரை அவர் மீது அது கடனாகவே இருக்கும். 

'இம்ஸாக்' என்றால் என்ன? 
பஜ்ர் உதயமானதிலிருந்து சூரியன் அஸ்தமிக்கும் வரை சாப்பிடாமலும் குடிக்காமலும் இதர நோன்பை முறிக்கும் எக்காரியங்களிலும் ஈடுபடாது நோன்பு நோற்றவர் போன்று இருப்பதே 'இம்ஸாக்' எனப்படும்.
 
இம்ஸாக், கழா ஆகிய இரண்டுமே ஸுன்னத்தானவர்கள்: 
நோன்பின் பகல் நேரத்தில் புனித இஸ்லாம் மார்க்கத்தை தழுவியவர். 
இரவில் மயக்கம் ஏற்பட்டு பகல் நேரத்தில் மயக்கம் தெளிந்தவர். 
பகல் நேரத்தில் பருவ வயதையடைந்த ஆண்,பெண். 

இம்ஸாக் ஸுன்னத்தாக இருப்பதுடன்  கழா கட்டாயமானவர்கள்: 
மாதவிடாய், பிரசவவிடாய் ஏற்பட்டு நோன்பின் பகல் நேரத்தில் சுத்தமான பெண். 

பிரயாணத்தில் நோன்பை விட்டு பகல் நேரத்தில் ஊரை வந்தடைந்தவர். 
கடுமையான நோயுடன் நோன்பை விட்டு பகல் நேரத்தில் குணமடைந்தவர். 

இம்ஸாக், கழா ஆகிய இரண்டுமே கட்டாயமானவர்கள்: 
ஷஃபான் மாதம் பிறை 30ஆம் நாள் பகலில் 'நேற்றிரவு ரமழான் தலைப் பிறை தென்பட்டது”என்று நம்பகமான செய்தி கிடைத்தவர். 

நோன்பை முறிக்கும் காரியங்களை ஞாபகத்துடன் வேண்டுமென்றே செய்தவர். 

இரவில் நிய்யத் வைக்கத் தவறியவர். 

இம்ஸாக் கட்டாயமானவர்கள் (அதாவது நோற்ற நோன்பை பூர்த்தி செய்ய கடமைப்பட்டவர்கள்): 

நோன்பு நோற்றுக்கொண்டு நீண்ட பிரயாணம் செய்து நோன்பை விடாது ரமழான் பகல் நேரத்தில் மீண்டும் ஊர் வந்தடைந்தவர். 

கடுமையான நோயுடன் நோன்பு நோற்று பகல் நேரத்தில் குணமடைந்தவர். 
لی دایی علی سیدنا محمد و علی اله واضحه وسع، والعين مليارات العالمين 

Islamic Rules & Regulations of Fasting 

தொகுப்பு: அஷ்ஷைக் M.H.M. ரிஸான் (இல்மி) 
JAMIATHUL FATHTHAH ARABIC COLLEGE 
Galhinna (20152), Kandy, Sri Lanka. 
Tel & Fax: +94 66 22 40844, Email: alfaththah@sltnet.lk 


 


Post a Comment

Previous Post Next Post