அன்று கிருத்திகாவுக்கு அழகான ஒரு மலர் கொத்து வந்தது.ஆவலுடன் கையில் எடுத்தவள் அந்தப் பூக்களை , முத்தமிட்டாள்.
அத்தனையும்அழகான பூக்கள்
அதில் கூடவே ஒரு சிறு குறிப்பும் இருந்தது.
அழகான எழுத்தில் எழுதப்பட்டிருந்தது,
"இந்தப் பூங்கொத்தில் உள்ள கடைசி மலர் இறக்கும் நாள் வரை உன் மீதான என் காதல் நீடிக்கும்."என்று எழுதியிருந்தது.
என் அன்பு மனைவிக்கு உன் அன்புக் கணவனின் அழகிய பரிசு. என்று எழுதிருந்தது.
அலுவல் விஷயமாகச் வெளியூர் சென்றிருந்த அவளது கணவனிடமிருந்து வந்திருந்தது.
மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தாள் கிருத்திகா.அவளுடைய கண்களில் கண்ணீர் பீறிட்டது.கனவனின் அன்புக்கு நிகர் எதுவும் இல்லை என்று மனதில் குதூகளித்தவள், இப்படியொரு கணவன் கிடைக்க கொடுத்து வைத்திருக்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டாள்
ஆனாலும் அவளுக்கு ஒரு சந்தேகம் ,
இந்தப் பூக்கள் ஒருநாளிளோ அல்லது இரண்டு நாளிலோ வாடி வதங்கிவிடும் ஒரே வார்த்தையில் சொல்வதென்றால் இறந்துவிடுமே?
கவலையும் கூடவே தொற்றிக்கொண்டது,
எதற்காக இப்படி ஒரு வார்த்தையை குறிப்பிட்டுள்ளார்.?கடைசி மலர் இறக்கும் நாள் வரை.....!
பூக்களை தண்ணீரில் போட்டுவைத்தால் வாடாமல் பார்த்துக்கொள்ளலாம் என்று எண்ணிக்கொண்டு பிளாஸ்டிக் பாக்கெட்டில் தண்ணீரை நிரப்பி ஒவ்வொரு பூவாக எடுத்து தண்ணீரில் போட்டாள்.
மனதில் ஏகப்பட்ட குழப்பத்தோடு பூக்களை எண்ணிக்கொண்டிருந்தாள் கிரித்திகா
அதில் 11 பூக்கள் இருந்தது.
அடுத்த நாள் கழித்து பார்க்கும்போது , பூக்கள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக அழகு குறைந்திருந்தன.
மனதில் படபடப்புடன் ஒவ்வொருபூவாக நோட்டமிட்டாள்.
ஒரு பூவைத் தவிர அனைத்தும். அழகு குறைந்து வாடும் நிலையில் இருக்க ஒரு பூ மட்டும் அழகு குறையாமல் இருந்தது,
அந்தப் பூவை கையில் எடுத்தவளின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. மகிழ்ச்சியில் தன்னையறியாமல் சத்தமாக"ஐ லவ் யூ சோ மச் மை டார்லிங் "என்றாள் கீர்த்திகா
அந்தப் பூ ...
பூங்கொத்தில் என்றென்றும் நிலைத்து நிற்கும் செயற்கை பூ என்று தெரிந்தது.
கடைசிப் பூவை முத்தமிட்டு மகிழ்ந்தாள் கிரித்திகா