சமூகத்தின் வாசனைத்திரவியங்கள்.....!

சமூகத்தின் வாசனைத்திரவியங்கள்.....!


பாதைக்கென்று பெற்று விடப்பட்ட 
வாலிபர்கள் இவர்கள்.

வளர்க்கத்தெரியாப் பெற்றோரின்  
வாரிசுகள்.

வீடுகளல்ல இவர்கள் வாழிடங்கள்
பாதைகளே இவர்களின் 
வாடகை வீடுகள்.

பாதைகளில் இவர்கள் பணிகள் தீவிரம்.
நல்லிரவானாலும் இவர்கள் 
சொந்த வீடுகளை நாடுவதில்லை...

வீட்டுச் சொந்தங்கள்
இவர்களைத்தேடுவதுமில்லை..
 
பாவம் இவர்கள் பெற்றோர் உள்ள
அனாதைகள்...

பேதையும்  போதையுமே  
பாதையில் இவர்கள் பணி...

பாவத்தின் விளிம்பில்
இவர்கள் பாதங்கள்...

அடுத்த அடியில் நரகப்படு குழியில்..
பெற்றோர்களே சிந்தியுங்கள்   

பூமியின் சுமைகளைப்
பெற்றவர்களே சிந்தியுங்கள்...

இவர்கள் பூமிக்கு  சுமைகள்.
சாபமாய் அமையுமுன்
செப்பனிட்டு  சமையுங்கள்...

தலைக்கு மேல்வளர்ந்ததால்  
வலைக்க முடியாதென்று 
பிள்ளை வளர்ப்பில் இல்லை.

நறுமணத்திரவியங்கள் நாசமாகிடாது 
காத்து வாசம் வீசச்செய்திடுங்கள் 
பெற்றவர்களே.

குறிப்பு;ஒரு சமூகத்தின்  வாசனைத்திரவியங்கள் அச்சமூகத்து  வாலிபர்கள் என்பது  சான்றோர் கூற்று.

நறு மணம் வீச வேண்டிய வாசனைத்திரவியங்கள்  தம் துர்நடத்தையால் சமூகத்தையே நாற்றமடையச் செய்கின்றனர் என்பதற்கு நம் கண்கள் சான்று.

உம்மு அம்ஹர் 
கல்ஹின்னை


 


 


Post a Comment

Previous Post Next Post