புரக்டர் ஹுசைன் ஞாபகார்த்த ஆன்மீக கல்வி மையம் மீலாத் தினத்தினை முன்னிட்டு நடாத்தும் கட்டுரை கவிதைப்போட்டிகள்-2023-AI RUXANA

புரக்டர் ஹுசைன் ஞாபகார்த்த ஆன்மீக கல்வி மையம் மீலாத் தினத்தினை முன்னிட்டு நடாத்தும் கட்டுரை கவிதைப்போட்டிகள்-2023-AI RUXANA

அஸ்ஸலாமு அலைக்கும்


எங்களது தலைவரும் வழிகாட்டியுமான பெருமானார் முஹம்மத் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களது பிறந்த தினத்தினை முன்னிட்டு மாபெரும் கட்டுரை,கவிதைப் போட்டிகளை நடாத்த,புரக்டர் ஹுசைன் ஞாபகார்த்த ஆன்மீக கல்வி மையம் (Proctor Hussain Memorial Spiritual Study Centre)  தீர்மானித்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத் தருகிறோம்.

1.இப்போட்டிகளில் கல்ஹின்னை, படகொள்ளதெனிய பிரதேசங்களை சூழவுள்ள  பாடசாலை மத்ரஸா மாணவ மாணவியர்கள் கலந்து கொள்ளலாம். 

2.வயது எல்லை இல்லை.

3.ஆக்கங்கள் பொறுப்பாசிரியர்கள், அதிபர்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

4.கட்டுரைகள் A4 தாளில் குறைந்த பட்சம் நான்கு பக்கங்களிலும், கவிதைகள் A4 தாளில் குறைந்த பட்சம் இரண்டு  பக்கங்களிலும் அமைய வேண்டும். கட்டுரை கவிதைகள் கம்பியூட்டர் மூலம் டைப் பண்ணப் பட்டு அனுப்பப் பட வேண்டும்.

5.போட்டிகளில் பங்கு பற்ற விரும்பும் போட்டியாளர்கள் பின்வரும் விபரங்களை 2023.09.28 ஆம்  திகதிக்கு முன்னர் 0770525272 என்ற இலக்கத்திற்கு whatsapp மூலம் எமக்கு அனுப்பி வைக்கவும்.

பெயர்
தனிப்பட்ட முகவரி
பாடசாலை / மதரசா
போட்டி: கவிதை / கட்டுரை
தலைப்பு

A.கீழ்காணும் தலைப்புகளில் ஏதாவதொன்றில் கட்டுரைகள் சமர்ப்பிக்கப் படவேண்டும்.. 
  •  1.உலகிற்க்கு வழிகாட்டிய உம்மிநபி
  • 2.முஸ்தபா மாநபியின் மறைமுக ஞானம்
  • 3.நாயகத் தோழர்களும் நபிகளார் மீது நேசமும்
  • 4.உன்னத வாழ்க்கைக்கு உயரிய ஸலவாத்
  • 5.அல்லாஹ்வின் தூதர் நம்மைப் போன்ற சாதாரண மனிதரா ?
  • 6.மௌலீதுகள் அவசியமா? அனாச்சாரமா ?
  • 7.உம்மத்தே முஹம்மதியாவின் சிறப்புகள்
  • 8.தாஹா நபியின் தனிப்பெரும் சிறப்புகள்  
  • 9.“இந்த நபி (முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்) அவர்கள் முஃமீன்களுக்கு  தங்களது உயிரை விடவும் மேலானவர்கள் “ (அல் குர் ஆன்  33.06) குர் ஆன் ஹதீஸ் ஒளியில் இத் திருக் குர் ஆன் வசனத்தை ஆய்வு செய்து ஒரு கட்டுரை சமர்ப்பிக்கவும். 

B.கவிதைகள் பின்வரும் அடிகளைக்கொண்டு ஆரம்பிக்கப் பட வேண்டும்.
  • விண்ணும் மண்ணும் புகழும் மாநபியே எங்கள் நாயகமே!
  • பெரும் புகழுக்குரியவரே பெருமானே நாயகமே! 
  • நற்குணத்தின் தாயகமே தாஹா நபியே!
  • வையகம் சிறக்க வந்துதித்த நாயகமே!

கட்டுரை கவிதை போட்டிகளில் வெற்றி பெறும் போட்டியாளர்களுக்கு 

முதல் பரிசு :ரூபா. 10000/=
இரண்டாம் பரிசு ரூபா:7500/= 
மூன்றாம் பரிசு:  ரூபா:5000/=

கட்டுரை,கவிதைகள் 2023.10.20 ஆம் திகதிக்கு முன்னர் பின்வரும் முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்.

General Secretary
Meelad Competition
Proctor Hussain Memorial Spiritual Study Centre
Al Masjidul Hussainiya
Kandy Road
Galhinna

 


 


Post a Comment

Previous Post Next Post