(ஒரு சிலர் எம்மைத் தொடர்புகொண்டு,கல்ஹின்னை டுடேயில் தொடராக வரும் "கல்ஹின்னை மக்களின் கொழும்பு ராஜா என்ற கட்டுரையை எழுதியவர் எம்.எம்.பாரூக்(WC)அவர்களா? என்று விசாரணை செய்கின்றார்கள்.எம்.எம்.பாரூக்(WC) அவர்களுக்கும் எமது("வேட்டை","கல்ஹின்னை டுடே") பத்திரிகைகளுக்கும் எந்த விதசம்பந்தமுமில்லை என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.')
கல்ஹின்னை மக்களின் கொழும்பு ராஜா என்ற தலைப்பில் தொடராக
வருகின்ற கட்டுரையில் குறிப்பிடுகின்ற விடயங்கள் எமது கண் முன்னே நடக்கின்றது நடந்தும் உள்ளது.
கோவிட் காலத்தில் வெளியூர்களில் இருக்கின்ற கல்ஹின்னை மக்கள் மாபெரும் சேவைகளை செய்துள்ளனர்.
அதிலும் கல்ஹின்னை ஒன்றியத்தின் தலைவர் ஜிப்ரி ஹாஜியார் அவர்களும்,முஸ்லிம் ஹாஜியார், சட்டத்தரணி பாரூக் அவர்களும்,பள்ளி நிர்வாக சபையினரும்,மற்றும் கல்ஹின்னை அரசியல் வாதிகளும்,இரவு பகல் பாராது கொரோனா காலத்தில் கல்ஹின்னை மக்களுக்கு உதவினார்கள்.
மக்கள் இன்றுவரையிலும்,கொவிட் தாக்கத்திலிருந்து மீண்டு வர முடியாமல் தவிக்கின்றதை காணமுடிகின்றது.
இப்படியான சந்தர்ப்பங்கள் வரும்போது சுயநலம் பாராது,லட்சம்,கோடிகள் என்று கொட்டுவதற்கு மேற்குறிப்பிட்ட ஹாஜிகளைத் தவிர ,WHATSAP குழுமங்களில் வீரம் பேசுகின்றவர்களால் முடியுமா?.
இக்கட்டான சந்தர்ப்பங்களில் ஊருக்கு வெளியில் இருக்கின்றவர்களைத்தான் தேடிப்போகின்றார்கள். முஸ்லிம் ஹாஜியார்,சட்டத்தரணி பாரூக் ஹாஜியார், ஜிப்ரி ஹாஜியார்,மற்றும் பஷீர் ஹாஜியார் போன்றவர்களிடம்தான் கல்ஹின்னை மக்கள் ஓடுகின்றார்கள்.
இது தவறில்லை.பணம் ,அரசியல் செல்வாக்கு என்று மேற்குறிப்பிட்டவர்களிடம் தாராளமாகவே இருக்கின்றது.இந்நிலையில் அவர்களிடம் உதவிகேட்டுச் செல்வது தவறில்லை.
ஆனால் இன்று WHATSAPP குளுமங்களில் கூவிக் கொண்டிருப்பவர்களால் கோடிகள்,இலட்சங்கள் என்று ஊருக்காக செலவு செய்ய முடியுமா?.
முடியாதென்று தெரிந்தும் கூவிக் கொண்டிருக்கின்றனர். வீரம் பேசுகின்றனர். இவர்களுடைய வீர வசனங்கள் ஒருபோதும் ஊருக்கு பிரயோசனப்படப் போவதுமில்லை,மக்கள் இவர்களின்
கருத்துக்களைக் தலையில் வைத்து கொண்டாடப் போவதுமில்லை.
கல்ஹின்னையில் இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையை உருவாக்கியவர்கள் changing கல்ஹின்னைதான் என்பதை மக்கள் புரிந்துகொண்டுள்ளார்கள்.
changing கல்ஹின்னை admin களுக்கு ,ஹாஜியார்மார்களுடன் என்ன பிரச்சினை என்று தெரியாது.ஆனாலும் உங்கள் தனிப்பட்ட பிரச்சினைகளுக்காக ஊரில் கலவரத்தை உண்டுபண்ண வேண்டாம்.
உங்களால் முடிந்த உதவிகளை மக்களுக்கு செய்யுங்கள்.ஹாஜியார்கள் அவர்களுக்கு முடிந்தவற்றை அவர்கள் செய்வார்கள்.
ஹாஜியார்களுக்கு ஒரு முக்கிய செய்தியை சொல்ல விரும்புகின்றேன்.
உங்களை திருப்திப்படுத்த,உங்கள் பணத்திற்காக உங்களை சுற்றி வருகின்ற ஒரு சிலர் கல்ஹின்னையில் அலைந்து கொண்டிருக்கின்றார்கள்.
உங்களைப பற்றி அளவுக்கு அதிகமாகப் புகழ்ந்து எழுதிவிட்டு,அல்லது பேசிவிட்டு,உங்கள் தொலைபேசி அழைப்புக்காக காத்திருக்கும் சிலர் இந்தப் பிரச்சினையை வளர்த்துக்கொண்டிருப்பார்கள். அவர்களிடம் மிகவும் ஜாக்கிரதையாக நடந்து கொள்ளுங்கள்.
GAHINNAI FMH
Tags:
கல்ஹின்னைபோஸ்ட்