கல்ஹின்னை மக்களின் கொழும்பு ராஜா! -3

கல்ஹின்னை மக்களின் கொழும்பு ராஜா! -3


'ஊரு ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு சந்தோசம்'! அதுதான் கல்ஹின்னை இப்போது ரெண்டென்ன? நாலுபட்டுத்தான் கிடக்கிறதே! 

நாலுபட வைத்தவர்கள் வேறுயாருமல்ல, கொழும்பு ராஜாவுக்கும், அங்குள்ள சிற்றரசர்களுக்கும் வால்பிடிக்கும் ஒரு கூட்டமும்...   ஒரு காலத்தில்   ஊர்க்காவலர்கள் என்று புகழோடு அரசோட்சி, தற்போது வலுவிழந்துள்ள ஒரு கூட்டமும்...

போதைப்பொருளோடு சம்பந்தப்பட்ட இன்னொரு கூட்டமுமே... 

இவ்வாறான கூட்டங்களுக்கெல்லாம் தேவைப் படுவதெல்லாம்  ஒன்றே ஒன்றுதான். கல்ஹின்னை என்ற நல்லூரை எப்பொழுதும் குழப்பத்துக்குள் வைத்துக் கொண்டு, அதில் குளிர்காய்வது! 

இதற்கு முன்னால் பல்வேறு சம்பவங்களை மையமாக வைத்து, ஏற்படுத்திய  குழப்பங்கள்  ஒவ்வொன்றும் மங்கி, மக்கி, உக்கிப்போய்விட்ட நிலையில், இப்போது, பள்ளிவாயில் நிர்வாகக் குழு நியமன விடயத்தைத் தூக்கிப்பிடித்து, ஊர் குழப்ப இந்தக் கூட்டங்கள் முனைகின்றன என்று ஊர் மீது அக்கறை கொண்டுள்ள பலரும் பேசிக் கொள்கின்றனர். 

அக்காலத்தில் 'பொங்கல்முறை'  ஒன்று கல்ஹின்னை பிரசித்தி பெற்ற பன்னிரெண்டு குடும்பங்களுக்குள் அடங்கியிருந்தது.அந்த முறையினால் ஊர் ஐக்கியப்பட்டு, சாந்தியும், சமாதானமும் நிறைந்திருந்தது. 

இவ்வாறான முறையொன்று இப்போது நடைமுறையில் இல்லாவிட்டாலும், மீண்டும் அதனை நடைமுறைப்படுத்தி, ஊர் மக்கள் நிர்வாகக் குழுவை இந்த முறையில் தேர்ந்தெடுப்பதில் தப்பே கிடையாது. 

இதற்கு கொழும்பு ராஜாவோ, சிற்றரசர்களோ  எவ்வித மறுப்பும் தெரிவிக்கப் போவதுமில்லை. 

ஆனால், பொங்கல்களிலிருந்து உசிதமானவர்களைத் தேடிப் பிடிப்பதென்பது, அவ்வளவு இலேசுப்பட்ட காரியமல்ல;  முயற்கொம்பு தேடுவது போன்ற ஒரு விடயம்! முடிந்தால் கொம்புகளைத் தேடிப் பாருங்கள்! கிடைத்தால் எங்களுக்கும் தெரியப்படுத்துங்கள். 

(முற்றும்)



 


 


Post a Comment

Previous Post Next Post